Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமணி

559 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோரும்

 

  ஆப்ரிக்கக் கண்டத்தில் “காமெரா’ என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன். குடிமக்களை வாட்டி வதைத்து வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே அழுத பிள்ளையும் வாய் மூடும். ஒருநாள் வழக்கம் போல அரசவை கூடியது. அமைச்சர்கள் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். பொதுமக்களும் கூடியிருந்தனர். அகந்தை மிக்க அந்த அரசன் அனைவர் மீதும் பார்வையைச் செலுத்தினான். அந்த மன்னன் லேசாகக் கனைத்தான். அனைவரும் பயந்து நடுங்கினர். மன்னன் பேச ஆரம்பித்தான்.


பொய்!

 

 ஒரு ஊரில் கண்ணன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவியின் பெயர் ராதா. அவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அருளன். இருவரும் ஒரு நாள் சந்தைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக புறப்பட்டார்கள். அப்போது அருளன் தானும் அவர்களுடன் சந்தைக்கு வருவதாகக் கூறி அடம்பிடித்தான். அவனுடைய அம்மா ராதா, அவனை சமாதானப்படுத்த நினைத்தாள். அவள் அவனிடம், “மகனே, உன்னால் அவ்வளவு தூரம் நடந்து வரமுடியாது. நீ வீட்டிலேயே இரு. நான் வந்ததும் உனக்குப் பிடித்த அப்பம்


தெளிந்த மனம்!

 

 புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றார். வழியில் அவர்கள் ஒரு ஏரியைக் கடக்க நேரிட்டது. ஏரியைக் கடந்து சென்ற பிறகு, புத்தர் தனது சீடன் ஒருவனிடம், “எனக்குத் தாகமாக இருக்கிறது. சிறிது நீர் கொண்டுவா!’ என்றார். ஏரிக்குத் திரும்பிச் சென்ற சீடன், அதில் சிலர் துணிகள் துவைப்பதையும் ஒரு மாட்டுவண்டி இறங்கிச் செல்வதையும் கண்டான். வண்டி சென்றதாலும் துணிகள் துவைத்ததாலும் ஏரி நீர் கலங்கிப் போய் அழுக்கடைந்து காணப்பட்டது. கலங்கிய நீரை எப்படிக்


மன வயல்!

 

 ஓருநாள் மகான் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன், உடல் வலிமையோடு இருக்கிற நீர் ஏன் உழைக்கக் கூடாது? நான் வயலில் உழுகிறேன்; விதைக்கிறேன்; கடுமையாக உழைத்து எனக்குத் தேவையான உணவைப் பெறுகிறேன். என்னைப் போல நீயும் உழைத்தால் இப்படிப் பிச்சையெடுக்கும் இழிநிலை வேண்டாமே! என்னைப் போல கெüரவத்துடன் உண்ணலாமே? என்று கேட்டான். அதற்கு புத்தர் பெருமான், நானும் உழுது விதைத்துத்தான் உண்கிறேன் என்றார். அந்த


முயற்சியே பெருமை!

 

 அது ஒரு மாலைப் பொழுது. நான்கு சிறுவர்கள் வயலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வரப்பு ஓரமாகச் சென்று ஒரு மூலையை அவர்கள் அணுகியபோது, பூமிக்கடியிலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. “என்னைத் தோண்டி, வெளியில் எடுங்கள்… நான் நீங்கள் விரும்பியதை எல்லாம் தருவேன்!’ என்றது அந்தக் குரல்! ஆச்சரியமடைந்து சிறுவர்கள் அனைவரும் உடனே வேலையில் இறங்கினர். சில நிமிடங்கள் பூமியைத் தோண்டிய பிறகு அங்கே ஒரு அழகிய சிறிய விளக்கு பளிச்சிட்டது! அதை வெளியில் எடுத்தார்கள். அவர்கள் கைபட்டதும்,


அது ஒரு விறகுக் கட்டைதான்!

 

 எழை விவசாயி ஒருவன் தனது சிறிய வயலுக்குச் சென்று எருதுகளை ஏரில் பூட்டி உழுது கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே ஓர் ஓநாய் வந்தது. அந்த ஓநாயைப் பார்த்து விவசாயி கேட்டான் – “ஓநாயே, நீ இங்கே எதற்காக வந்தாய்?’ “உன்னுடைய உழவு மாடுகளைத் தின்பதற்காகத்தான் வந்திருக்கிறேன்’ என்றது அந்த ஓநாய். “அப்படியா! நல்லது, நல்லது; ஓநாயே, கொஞ்ச நேரம் பொறுத்திரு. இன்னும் கொஞ்சம் உழவை முடித்துக் கொள்கிறேன். அதற்குப் பிறகு நீ என்னுடைய மாடுகளைத் தின்னலாம்!’


பறவைகளே… பறவைகளே…

 

 ஒரு ஊரில் அதிசயத்தக்க ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். தினமும் மாலையில் கடற்கரையோரம் அசையாமல், மணிக் கணக்கில் நின்று கொண்டிருப்பார். கடற்கரையில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய, சிறிய பறவைகள், குருவிகள் அவர் மேல் வந்து அமர்ந்து கொள்ளும்! நேரம் செல்லச் செல்ல, மனித உருவமே தெரியாத அளவுக்குத் தலையிலிருந்து கால் வரை பறவைகள் அவர் மேல் உட்கார்ந்து ஆனந்தமாய் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்! அந்த மனிதர் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருப்பார். இரவு வந்ததும் பறவைகள் அனைத்தும் கலைந்துபோய்விடும்.


பொட்டல் காடு

 

 அது ஒரு திறந்தவெளி. எங்கு நின்று பார்த்தாலும் வானமே தெரிந்தது. பூமித்தாயின் முகமெங்கும் செம்மண் கொட்டப்பட்டு, அவள் முகத்தில் காணப்படும் பருக்கள் போல காணிக் கற்கள் எங்கு பார்த்தாலும் நடப்பட்டிருந்தன. அந்தக் காணிக்கற்களே அங்கு வருவோருக்கு வரவேற்பாளர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்தன. அந்தத் திறந்தவெளியில் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் இருந்தன. ஒன்று அரச மரம், இன்னொன்று அப்போதுதான் வளர்ந்து வரும் வேப்பமரம். ஒருநாள் அந்த இடத்தைப் பார்க்க இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் அந்த மரங்களைச் சுற்றி


நீர்யானை வரைந்த ஓவியம்

 

 அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது! அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில் குளிர்ச்சியாக இருந்தது. சூரியன் தகதகவென்று வெளிர் மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது! அந்த நேரத்தில் திடீரென்று நீர்யானைக்கு ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே ஆற்றிலிருந்து வெளியேறி பக்கத்திலுள்ள ஊருக்குள் சென்றது. அங்கே ஒரு கடைக்குச் சென்று, ஓவியம் வரைவதற்காக தூரிகை ஒன்றும், பலகை, வெள்ளைத் தாள் மற்றும் மஞ்சள், சிவப்பு,


கொசுவும் குதிரையும்…

 

 ஒருநாள் குதிரை ஒன்று புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஒரு கொசு பறந்து வந்தது. குதிரையைக் கண்டவுடன் அதைக் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது கொசுவுக்கு. “நீ எப்படி இருக்கே?’ என்று ஏளனமாகக் கேட்டது. குரல் கேட்டவுடன், குதிரை சுற்றுமுற்றும் பார்த்தது. ஆனால் அதன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை! பிறகு தன்னுடைய வாலிலும் காதுகளிலும் ஏதாவது இருக்கின்றதா என்று கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தது. அப்போது, தனது முதுகில் ஏதோ ஒன்று