கதைத்தொகுப்பு: தினமணி

577 கதைகள் கிடைத்துள்ளன.

தருமம்!

 

 மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை அறிந்து அரசரிடம் நல்ல யோசனைகளைத் தெரிவித்து வந்ததால் நாட்டில் சுபிட்சம் நிலவியது. ஒருநாள் அமைச்சரிடம் மன்னர், நாட்டில் தரும சிந்தனை மக்களிடம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அமைச்சர், யாசிப்பவர்கள் இருந்தால்தானே மக்கள் தருமம் செய்வார்கள். தங்கள் நல்லாட்சியில் இரப்போரே இல்லையே என்றார். இருந்தாலும் மன்னர் ஒரு முடிவெடுத்தார். மன்னரும் மந்திரியும் பிச்சைக்காரர்கள் போல மாறுவேடம்


பரிகாரம்

 

 வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே இருந்த நதியில் விழுந்துவிட்டது. நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அவனிடமிருந்த ஒரே ஆயுதமும் காணாமல் போனதால் பிழைக்க வழியில்லை என்று கதறி அழுதான். அவனது அழுகையைக் கேட்டு, நதியிலிருந்த அழகிய தேவதை ஆறுதல் கூறியது. நீரில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து கொடுத்தது. மரவெட்டி அது தன்னுடையதில்லை என்று கூறி, பெற


வரம்!

 

 ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் கோடியில் ஒரு சாமியார் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். “”கடவுளை நினைச்சுத் தவம் பண்ணு. உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..” என்று அந்தச் சாமியார் கூறினார். மன்னார்சாமியும் கடுமையாகத் தவம் இருந்தார்.


மரத்தடிச் சாமியார்

 

 மாடசாமி, அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மாடசாமியின் பெற்றோர் ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். பெரியவனாகிய பிறகும் அவனை வேலைக்குப் போகச் சொன்னதில்லை; அவனாகவும் போனதில்லை. அன்றாடம் சமைக்கும் உணவில் தங்கள் பிள்ளைக்கு வயிறு முட்ட கொடுத்துவிட்டு, மீதப்படும் உணவையே அவர்கள் உண்பார்கள். அதனால் அவனது உடம்பு வளர்ந்ததே தவிர அறிவு வளரவில்லை. நாட்கள் ஓடின. மாடசாமியின் பெற்றோர் இறந்துவிட்டனர். உழைக்காத சோம்பேறியான அவன் வேலைக்குப் போகாததால் வருமானம் இல்லை.


இல்லாத திருடனைப் பிடித்த கதை

 

 முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததாலும் அவ்வூரில் மேலும் பலர் ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாலும் அவ்வூர் மக்கள் அடையாளத்துக்காக அவனை “ஓஹோ ராமன்’ என அழைத்து வந்தனர். ஓஹோ ராமன் அரண்மனையில் சமையல் வேலை, குதிரைலாய வேலை, பாத்திரம் கழுவுதல், துணிகளைத் துவைத்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா எடுபிடி வேலைகளைச் செய்து வந்தான். ஆனால்


கடவுள் கண் திறப்பார்…

 

 சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு நகர சோதனைக்குச் செல்வார். அப்படி ஒருநாள் மந்திரியை அழைத்துக் கொண்டு நகர்வலம் செல்லும்போது ஒரு வீட்டில் மனைவி, குடும்பத்தின் வறுமையையும் குழந்தைகளின் பரிதாப நிலையையும் குறித்துத் தனது கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். அதற்குக் கணவன் “”ராஜா கண் திறப்பார்… பொறுத்திரு…” என்று பதில் சொன்னார். இன்னொரு வீட்டிலும் இதேமாதிரி, மனைவி தனது கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.


சமயோசித புத்தி!

 

 ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க வேண்டும் – தவறினால் தண்டனை என்று கூறியிருந்தார். அப்படி வேலைக்குச் சேர்ந்த பையன், விடியற்காலையில் ராஜா சோதனைக்கு வந்த நேரத்தில் அசந்துபோய் தூங்கிவிட்டான். அப்பொழுது ராஜா, அவனுடைய உடைவாளை உருவி எடுத்துக் கொண்டு போய்விட்டார். அடுத்த நாள் படை வீரர் அணிவகுப்பு நடந்தது. அதில் அந்தப் பையனும் கலந்து கொண்டான். அவனிடம் உடைவாள் இருந்தது! எப்படி?


உயிர்களைக் காப்போம்

 

 அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம். அப்பா இப்ப வந்திடுவாரு. கண்டிப்பா நமக்கு நல்லா சாப்பாடு கொண்டு வருவாரு’ என்பதை மட்டுமே அந்தத் தாயால் கூற முடிந்ததே தவிர, உண்மையிலேயே கணவர் எப்போது வருவார் என்பது தனக்கே தெரியாதவளாய் அவள் இருந்தாள். நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மனக்கண் முன் தோன்றி மறைந்தது. கணவன், மனைவி மற்றும் குழந்தை முவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.


சாகாத மரம்!

 

 ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது ஒரேயொரு விதை மட்டும் தவறிப் பாதையின் ஓரத்தில் விழுந்தது. நாட்கள் செல்லச் செல்ல மெதுவாக முளைவிட்டு வளர ஆரம்பித்தது அந்த விதை. அந்த வழியே சென்ற ஆடு,மாடுகளின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கிப் போக ஆரம்பித்தது. மீண்டும் கொஞ்ச நாளில் துளிர்த்து வளர ஆரம்பித்தது. மறுபடியும் கோழிகள் இரை தேடக் கிண்டியபோது, மீண்டும் அந்தத் துளிர் நசுங்கிப்


பேழைக்குள் ஒரு பூதம்!

 

 பூதங்கள் வலிமையானவைதாம்… செயல் திறன் மிக்கவைதான்… மந்திர, தந்திர ஆற்றல்கள் கொண்டவைதாம்… ஆனாலும் பாருங்கள், அவற்றைவிடப் பெரிய பெரிய ஆட்கள் யாராவது அவற்றைப் பிடித்து எதிலாவது அடைத்து விடுகிறார்கள்! அப்படித்தான் இந்தக் கதையில் வரும் பூதத்தையும் எவரோ பிடித்து ஒரு பேழைக்குள் அடைத்துவிட்டிருந்தார்கள்… அது யாரென்பதுதான் தெரியவில்லை! அடைத்து வைத்தவர் யார் என்று பூதத்திற்கே நினைவில் இல்லாதபோது நாம் என்ன செய்யமுடியும்? ஆனால், பூதத்தைப் பேழையிலிருந்து திறந்து வெளியே விட்டவர் யார் என்பதுதான் நமக்குத் தெரியுமே, அது