கதைத்தொகுப்பு: தினமணி

577 கதைகள் கிடைத்துள்ளன.

அழுகை

 

 தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். நான் போவதற்கும் பம்மல் செல்லும் கடைசிப் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. எப்பதான் ஒட்டுவார்களோ? எப்பதான் கிழிப்பார்களோ? தெரியாது. பேருந்தின் பின்புறம் முழுவதும் சுவரொட்டியின் கிழிசல்கள். தாவிக் குதித்து நுழைந்தேன். அதிசயமாய் சன்னல் ஓரமாக உட்கார இடம் கிடைத்தது. கோடை வெப்பத்தில் உடம்பு கசகசத்துப் போயிருந்தது. பேருந்து ஓடத் தொடங்கியதும்


மறுபக்கம்

 

 வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்னையைப் பற்றிய சிந்தனையில்தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது. இருபது வீடுகள் அடங்கிய எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் செயலாளர் நான்தான். அதனால் இந்தப் பிரச்னையை நான்தான் பேசிக் கையாள வேண்டும் என மற்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முடிவெடுத்து விட்டனர். அதனால் தப்பிக்க முடியாது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறேன் என்று மலைப்பாக இருந்தது. என் தியான நிலையைப் பார்த்த என் மனைவி, “”எந்த கோட்டையைப்


கரகாட்டம்

 

 திகு.. திகு எனப் பற்றி எரிந்தது அந்தக் கரகச்செம்பின் மேலிருந்த டோப்புக்கிளி. காகிதச்சிறகுகள் என்றாலும் கருகியது மாரிசெல்வத்தின் மனமும்தான். டோப்புக்கிளியின் மீது தீ தன் நாக்கைச் சுழற்றி தின்றபோது கிளி கதறவில்லை. மாரிசெல்வத்தின் மனமே கதறி துடித்தது. டோப்புக்கிளி கருகிச் சாம்பலாகித் தீ அணைந்து விட்டது. உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அதன் உக்கிரம் அவன் இதயத்தை உருக்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் தீ இவன் முகத்தில் கரியைப் பூசியது போல் கரகச் செம்பின் மீது கரியை அப்பியது. வீட்டின்


அந்த அவள்

 

 பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம் என்று அனைத்திலும் தன் திறமையைக் காட்டி மற்றவர்களைத் தன்பக்கம் திருப்பும் சாமர்த்தியம் இருந்தது. அவன் எப்போதும் வேடிக்கையாகவே பேசுவான். ஆற்றிலும், குளத்திலும் மிக அழகாக நீந்துவான். அதனால் அவனை அவனது நண்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு என்னவோ சுமார் ரகம்தான். ஆனால் விளையாட்டு, நீச்சல், உபகாரம் என்று அவன் தனது இருப்பை மிகத் தெளிவாகவே பதித்திருந்தான்.


தலை எழுத்து

 

 ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது. தன்னுடைய பையில் ஊறுகாய் பாட்டில்களை வைத்துக் கொண்டிருந்த ராமலிங்கம் “”அம்மா… பெரியம்மா வீட்டுக் கார்” என்று சொன்னான். புனிதா எழுந்து பார்த்தாள். டிரைவர் முத்து வந்தான். “”வா முத்து… எதாவது விசேஷமா?” சற்று கலவரப்பட்டவளாகக் கேட்டாள். “”உங்க அக்கா, உங்களை வரச் சொன்னாங்க” “”சரி வர்றேன் போ” “”டிரைவர் போய்விட்டான். “”அம்மா எதுக்கு பெரியம்மா வரச்


துளசி

 

 “”வாடியம்மா மகாராணி, ஸ்கூலுக்கு வர்ற நேரமா இது? மணி பத்தாகுது. லேட்டா வந்ததுமில்லாம கையில கொழந்தைய வேற தூக்கிட்டு வந்திருக்கியே… படிக்கப் போறது நீயா? இல்ல அந்தக் கொழந்தையா? போ… போ… ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரல. இன்னொரு நாள் சேந்தாப்புல வீட்டிலேயே இருந்துட்டு நாளைக்கு வா. வறப்ப கொழந்தைய வீட்டில விட்டுட்டு கரெக்ட் டயத்துக்கு வந்து சேர்” மேரி டீச்சர் யார் மீது இப்படிக் கோபப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள நிமிர்ந்து பார்த்தார் தலைமைஆசிரியர் சுசீலா.


குட விளக்கு

 

 நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வக்கீல் வீட்டு போர்டிகோவில் வழக்கம்போல கலந்துரையாடல் மும்முரமாக இருந்தது. வக்கீல் ஒன்று பேச, வாத்தியார் ஒன்று பேச, இடைமறித்து டாக்டர் பேச, குறுக்கிட்டு போஸ்ட் மாஸ்டர் பேச, உற்சாகத்தில் ஆடாத குறையாக, இடத்தைவிட்டு எழுந்த ஜோஸ்யர், உரக்கத் தம் கருத்தை நுழைக்க அவர்கள் பேச்சில் கலகலப்பு, வெடிச்சிரிப்பு, கிண்டல் எல்லாம் மாறி மாறி கூத்தடித்தன. அந்தக்


அந்திமக் கால ஆதரவு

 

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா… இன்னொருத்தராலே கவனித்துப் பார்க்க முடியுமா? ஆகையாலே நாங்க சொல்றதைக் கேளுங்க” என அடிக்கடி எங்களது இரண்டு மகன்களும் வற்புறுத்திச் சொல்லுவார்கள். எனக்கு வயது அறுபத்தெட்டு ஆகிறது. என் மனைவி சீதாவிற்கு அறுபத்தைந்து. இரண்டு மகன்களும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் எஞ்சீனியராக வேலை பார்க்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகளுடன் அங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாமல், “”தனியாகவே நாங்கள்


உயிரோடுதான்…!

 

 வருடா வருடம் நவம்பர் மாதம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குச் சான்று கொடுக்க வேண்டும். வேறு யாருக்கு நான் குடும்ப ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிற எனது பாங்க் கிளைக்குத்தான். போன வருடம் வரை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் போய்விட்டார். இந்த வருடம் முதல் என் தலையில் அந்தச் சடங்கு. பரவாயில்லை, நான் இருக்கிறேனா? இல்லையா? என்பது பற்றி நினைத்துப் பார்க்க யாராவது இருக்கிறார்களேன்னு சந்தோஷம். அவர் கடைசியாக வேலை பார்த்தது தூத்துக்குடியில். அங்கேயே ஓய்வூதியக் கணக்கு.


திருடராய்ப் பார்த்து…

 

 குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார் கனவை நனவாக்கவும் இந்நாட்டு கைத்தொழில்களை அழியாமல் காப்பதற்காகவும் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற கைத்தறி துணி விற்பனை மையங்களில் ஒன்றின் கிளை மேலாளராகப் பொறுப்பேற்றிருந்தான். வாரா வாரம் சனிக்கிழமை தன் சொந்த மண்ணான புதுச்சேரிக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மனைவி மக்களுடன் நாளைக் கழித்துவிட்டு திங்கள்கிழமை காலை மட்டப்பாறைக்குப் பயணப்படுவது வழக்கம். இருப்பு பொறுப்புடன் கூடிய பணியில் உள்ள