கதைத்தொகுப்பு: குமுதம்

331 கதைகள் கிடைத்துள்ளன.

பூவம்மாவின் குழந்தை

 

 இறுகத் தார் பாய்ந்த வேட்டியில் மரத் துரள்களும் மண் தூள்களும் இரண்டறக் கலந்த செம்மண் கோலத்தில் குடிசைக்கு வந்த கன்னையா, கழுத்தில் தொங்கிய கோடரியைக் கீழே வைத்துவிட்டு, குடிசைக்கு முன்னால், வேலிகாத்தான் முட்செடிகள் மொய்த்த இடத்தருகே இருந்த மண் பானையில் இருந்த நீரை, கையாலேயே மொண்டு கால் கைகளைக் கழுவிக் கொண்டே, பாதி திறந்திருந்த குடிசைக்குள் நோட்டம் விட்டபடி, “டேய் ராமா. டேய் ராமா.” என்றான். ராமன் திருப்பிக் குரல் கொடுக்கவில்லை. வெய்யில் அடிக்கிற மாலைப் பொழுதில்,


மருமகள்

 

 கண் சிகிச்சை முகாமுக்கான ஜீப், கிழவர் – கிழவியர் சகிதம், பொன்னம்மா பாட்டியின் வீட்டு முன்னால் வந்து நின்றது. பாட்டியின் மகன் முனுசாமியிடம், கிராம சேவக்கும் சேவிகையும் விளக்கமாக எடுத்துரைத்து, பொன்னம்மாவை ஜீப்பில் ஏற்றினார்கள். மருமகள்காரி வாசல்வரை வந்தாள். மாமியாரை ஜீப்பில் பார்த்ததும், தனக்கும் வயதாகி, கண்ணும் கெட்டிருந்தால், இந்த ஜீப்பில் எறியிருக்கலாமே என்று ஏங்கியவள் மாதிரி, பெருமூச்சு விட்டாள். ஏதோ ஒரு வழியாக, கண் சிகிச்சை முகாம் துவங்கியது. அந்த டிவிஷனைச் சேர்ந்த ஆறு பஞ்சாயத்து


ஈச்சம்பாய்

 

 காட்டிற்குக் காடாகவும், மலைக்கு மலையாகவும் தோன்றிய காட்டு மலை அல்லது மலைக்காடு. கர்நாடக மாநிலத்தில் மலெநாடு என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் தபோவனம் போன்ற நிசப்தப் பகுதி. நாட்டியப் பெண்கள்போல், பாக்கு மரங்களும், நட்டுவாங்கனார்போல் தென்னை மரங்களும் இடைவெளி கொடுக்காமல் இணைந்து நிற்க-முக்காடு போட்ட பெண்கள்போல், தென்னை ஒலைகளால் மூடப்பட்ட தென்னங்கன்றுகள், தாவர மான்போல் தாளலயத்தோடு நிற்க, இயற்கைச் சிற்பி, தன் மேலான படைப்பாற்றலில் பூரித்துப் போனது போன்ற விதவிதமான மரங்களாலும் செடிகளாலும் வியாபிக்கப்பட்ட ஊர் –


ஸ்டெப்னி

 

 அனுராதா ஒவ்வொரு செடியிடமும் நின்று குனிந்து பார்த்தாள். ரோஜா பூச்சி விழுந்து காணப்பட்டது. மல்லிச் செடிகள் நுனி கருகி இருந்தன. புல் காய்ந்து போயிருந்தது. க்ரோடன்ஸும், அரளியும் தலை தொங்கி வாடியிருந்தன. அம்மா இருந்தால் தோட்டம் இப்படியா இருக்கும்? பணக்கார வீட்டுக் குழந்தைகள் மாதிரி ரோஜாவும், மல்லியும் தளதளவென்று மின்னும், புல் பச்சையாய் கண்ணைப் பறிக்கும், தூசி, தும்பு இல்லாமல் செடியும் கொடியும் என்னைப் பாரேன், பாரேன் என்று கவர்ச்சியாய் கூப்பிடும். மசமசத்த கண்களை இரண்டு தரம்


புவனம்

 

 மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத, அந்தப் பெண்பிள்ளை. வீடு மாறிவிட்டதோ என்று திகைத்தபோது, “வாங்க” என்று மலர்ச்சியுடன் விரியத் திறந்தாள் கதவை. அவளுக்குப் பின்புறம் கண்களால் துழாவினான். தையல் மெஷினிலிருந்து அவள் எழுந்து வந்திருக்கவேண்டும். “நீங்க வருவீகண்ணு இந்நேரவரைக்கும் காத்துக்கிட்டிருந்தாக; அவசரமா ஒரு இடத்துக்குப் போயிருக்காக. வந்திருவாக இப்பொ ; உக்காருங்க.” தயங்கி, மேலும் வீட்டினுள் பார்த்தபோது நண்பனும் அவன் மனைவியும்


மௌனத்தின் குரல்

 

 குத்திட்ட பார்வையுடன் சரஸ்வதி உட்கார்ந்திருந்தாள். அறையின் கம்பிக் கதவுக்கு அப்பால் டாக்டர் நின்றிருந்தார். அவருடன் வெள்ளை ரவிக்கையும் வெள்ளைப் புடவையுமாக ஓர் அம்மாள் நின்றிருந்தாள். அவர்கள் பார்வையிலிருந்து தப்பிக்க நினைத்தவள் போல் சரஸ்வதி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அறையில் உட்கார்ந் திருந்த மற்ற இரண்டு பெண்களுக்கு டாக்டரின் பேச்சோ, இரண்டு பேர்கள் தங்களை ஆராய்கிறார்கள் என்கிற உணர்வோ பிரக்ஞை யைத் தாக்கியதாகத் தெரியவில்லை . “இந்தக் கேஸ் இப்படித்தான்” என்றார் டாக்டர். “டிப்ரெஷன் கேஸ். காரணம் என்னன்னு


நெஞ்சமெல்லாம் நீ

 

 கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது மேலதிகாரிக்கும் இரண்டு நாள்களாக ஒரு விவாதம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம். அது என்னவென்றால்..” என்று எழுதியபோது, வாசல் மணி அடித்தது. யோசித்தபடி கதவைத்திறந்தான். தந்தி சேவகன். அவன் அப்பா செத்துப் போனதாக தகவல். பஸ் ஏறினான். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆறு மணி நேரம் பயணம். ”பயணம் ஒரு


மெல்லத் துறந்தது கதவு…

 

 வாக்கிங் போய் விட்டு வீட்டு வாசலுக்கு வந்தார் எக்ஸெல். வீட்டுக் கதவு மூடியிருந்தது. காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கவில்லை . இன்னொரு முறை ஓங்கி அடித்தார். அப்போதும் பூங்கதவு திறக்கவில்லை . கோபம் வந்தது. கதவை படபடவென தட்டினார். “யாரது? இப்படி தட்டறது?” என கத்தினார் ! மிஸ்டர் எக்ஸ் உள்ளிருந்து. “நான்தான். உங்க பொண்டாட்டி!” “எவ்வளவு பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்கீங்க? என் ஒய்ஃப் காலிங் பெல்தான் அடிப்பாளே தவிர ஒருக்காலும் கதவை தட்டமாட்டா.


குறைகளையே பெரிதுப்படுத்தினால்…

 

 ”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “சொல்லுப்பா, என்ன ஆச்சு?” “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன். அவன் பிரச்சனையை அவனுக்கு உணர்த்த ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் குரு. “ஒரு வீட்டுல காலை நேரம். அப்பா வேலைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தார். பையன் காலேஜுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தான்.ரெண்டு பேரும் டிபனை


மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது!

 

 “குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை’ என்ற கவலையுடன் ஒருவன் குரு முன் வந்து நின்றான். “என்னாச்சு?’ “பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை. என் செய்வதென்று புரியவில்லை’ என்று அவன் சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று குருவுக்குத் தெரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். “ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல் உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான். ஒரு நாள் இரு நாள் அல்ல