Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: குங்குமம்

68 கதைகள் கிடைத்துள்ளன.

தகுதியானவள் – ஒரு பக்க கதை

 

 அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…!’ என்றேன். ஆனால் அவள் உம்மென இருந்தாள். மிகவும் விரும்பித்தான் விண்ணப்பித்திருந்தாள். அவள் வாழ்வின் லட்சியமே அந்த வேலைதான் ஆனால் கடிதம் வந்ததிலிருந்து அவள்முகம் சோகமாகவே இருந்தது. என்ன காராணமோ? இண்டர்வியூவுக்குப் போகும் போதும் அவளிடம் மகழ்ச்சியோ, பூரிப்போ இல்லை. அந்த கம்பெனிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய பிறகும் துயரத்தோடு இருந்தாள். கண்ணாடி


மீசை தத்துவம் – ஒரு பக்க கதை

 

 அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத நிலை… ஆனால், இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோம் பழகியிருக்கிறோம் என்பதால் நினைவுகளில் சற்று குடைந்தார். வீட்டுக்கு வந்து பால் கவரை கொடுத்துவிட்டு வாக்கிங் போகும் எண்ணத்துடன் தெருவுக்கு வந்தபோது மீண்டும் அவர். யார் என்று கேட்டு விடலாமா? யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கும் அந்த எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். நின்றார். நான் அவரை நெருங்க… ‘‘என்ன சார், அடையாளம் தெரியலையா?’’


அழகான பெண் – ஒரு பக்க கதை

 

 ‘சார்..மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்’ -கேட்டவர் ஒரு முதியவர். ‘டைம் கீப்பர் ஆபிஸ்ல போய்க்கேளுங்க பெரியவரே…’ சொல்லிவிட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது. ‘சார்…பைவ் பி எங்கே வரும்?’ – கல்லூரி மாணவன் கேட்டான். ‘படிக்கத் தெரியும் இல்லே..மேல இருக்கற போர்டைப்பாரு!’ சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார் ‘’சார்..இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை கேட்டது ஓர் அழகான இளம்பெண். இந்த வண்டி போகாது, ட்வெண்டி ஒன்ல போங்க


தமிழ் – ஒரு பக்க கதை

 

 மருந்துக்கடை மகேஸ்வரனுக்கு உடம்பு சரியில்லாததினால், டாக்டர் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார் கல்லூரி விடுமுறையிலிருந்த மகன் தமிழிடம் ஒரு வாரம் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி மகேஸ்வரன் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார், ஒரு வாரம் செல்ல உடல் நலமாகி, கடைக்கு வந்த மகேஸ்வரன், ‘பில்’ புக்குகளை எடுத்து வியாபார நிலவரத்தைப் பார்த்தார் தமிழ் பொறுப்பிலிருந்த ஒரு வாரமும் கடை வியாபாரம் கூடியிருந்தது. அவன் பில் போட்டதுதான் சற்று முரண்பாடாக இருந்தது. மருந்து வாங்கியவர்களில்


ரூஸ்ஸ் – ஒரு பக்க கதை

 

 ‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறி விட்டாள எட்டாம் வகுப்பு மாணவி அபிதா. அந்த தனியார் மெட்ரிக் பள்ளி வளகத்துக்குள் ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள் முதலே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். யாரும் தமிழில் பேசக்கூடாது. அனிதா அலறிவிட்டாள். இப்போது என்ன செய்ய? அனிதா, ஆஸ் பர் அவர் ஸ்கூல் ரூல்ஸ், நோபடி ஷூட் ஸ்பீக் இன் டமில். ஐ திங்க் யூ நோ த பனிஷ்மென்ட்


ஃபீலிங் – ஒரு பக்க கதை

 

 சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு வங்கி மேலாளராக பதவி உயர்வோடு பணிமாற்றம் கிடைத்திருந்தது புருஷோத்தமனுக்கு. முதல் நாள் வேலைக்குப் போய் வந்ததும், தன் நண்பன் குமாரோடு நாகராஜர் கோயிலுக்குப் புறப்பட்டார். சிரத்தையோடு நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். என்ன திடீர்னு பக்தி மயம்? பிரமோஷனுக்கு நன்றி சொல்றீயா? இல்ல, சீக்கிரம் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியா..? – நண்பர் குமார் கேட்டார். ‘இல்ல குமார்! எனக்கு முதல்ல கல்யாணம் பேசினப்ப, அது திடீர்னு நின்னு போனது உனக்கே தெரியும்.


முடிவு – ஒரு பக்க கதை

 

 ‘டேய்…நாளைக்கு என்ன செய்யப்போற?’ – ரவியைக் கேட்டான் சிவா. ‘வழக்கம் போலத்தான்.அப்பா, அம்மாவுக்காக, போய் தலையைக் காட்டிட்டு, பொண்ணு பிடிக்கலேன்னு சொல்லிடப் போறேன்!’ ”நியாயமாடா இது? வீட்டிலேயே விஷயத்தைச் சொல்லி தடுக்காம, பொண்ணு பார்க்குற வரைக்கும் போய் அவங்ககிட்டே சொல்றே…அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்!” ‘உண்மைதாண்டா. ஆனா என்னோட காரணத்தை எங்க வீட்டுல சீரியஸா எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஆனா பொண்ணுகிட்டே தனியா பேசும்போது சொல்லிட்டா, ‘அப்பாடா! இப்பவே தெரிஞ்சுதே’ன்னு சந்தோஷப்படுறாங்க!’ – சமாதானம் சொல்லிச் சென்றான் ரவி.


அதிர்ஷ்டலட்சுமி – ஒரு பக்க கதை

 

 என் அலுவலக உதவியாளர் சண்முகத்துக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. அவன் ஆண் குழந்தையைத்தான் பெரிதும் எதிர் பார்த்தான் பெண் என்றதும் அவன் ஏமாற்றறமும் சோர்வும் அடைந்ததாக எல்லோரும் சொன்னார்கள். அன்று மாலையே மனைவி சகிதம் மருத்துவ மனை சென்றேன். குழந்தையைப் பார்த்தோம். ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து குழந்தை கையில் வைத்தேன். முதலில் கவனிக்காத சண்முகம், சட்டென்று சுதாரித்து, ”சார்…எதுக்கு இவ்வளவு?” என்றான். ”இல்லப்பா…சட்டுன்னு எடுக்கும்போது கையில ஆயிரமா வந்துட்டுது. உன் மக


திமிர் – ஒரு பக்க கதை

 

 ஆபிஸர் கோபாலுக்கு, தனது செக்‌ஷனிலேயே கார்த்திக்கை மட்டும் பிடிக்காது. திமிர் பிடித்தவன்…வயசுக்கு மரியாதை தர மாட்டான்’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார். புதியதாக வந்த ஜி.எம்.ரவுண்ட்ஸ் போய் எல்லோரையும் அறிமுகம் செய்து கொண்டு, அறைக்குள் வந்து உட்கார்ந்ததுமே அவரிடம் போட்டுக் கொடுக்கும் தன் பணியைத் துவக்கி விட்டார் கோபால். ‘நீங்க ஃப்ளோர் விசிட் போனப்ப, மற்ற உழியர்கள் எல்லாரும் உங்க பின்னாடியே பவ்யமா வந்து வெல்கம் பண்ணி பேசிட்டிருந்தாங்க., கை கொடுத்தாங்க. ஆனா, இந்த கார்த்திக் மட்டும் சீட்டை


ஆசை – ஒரு பக்க கதை

 

 கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை. திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது. திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள். ”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..” கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார். ”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”. 40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது. “பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத ஆசை “என்றார். அதன்பின் எப்போதுமே