கதைத்தொகுப்பு: குங்குமம்

94 கதைகள் கிடைத்துள்ளன.

கைவண்ணம்

 

 லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி, ‘நானா… மழையா?பெய்தேனா?’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது வானம். “எட்டு மணிக்குத் தானே வருவேன்னு சொன்னீங்க சார்?” – நெல்லையப்பன் பீடியை அவசரமாகத் தரையில் தேய்த்தான். “ஆமாம்…கிளம்பறதுக்கும் எப்படியும் எட்டு ஆயிரும்..ஆனா,ஒரு டீ குடிச்சாத் தான் எனக்குக் காலம்பறப் பொழுதே தொடங்கும்!” “இந்தக் கடையிலயா சார்குடிக்கப் போறீங்க? வேணாம்சார்… மண்ணெண்ணெய் ஸ்டவ்வு. டீயிலயும் அதே நாத்தமடிக்கும். ஏறி உக்காருங்க…


உலை

 

 திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என் பிறந்த நாள். எழுந்தவுடன் பரிசுகள் கிடைக்குமா… இல்லை, இரவு அப்பா வரும் வரை காத்திருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை. இதுவே சில வருடங்களுக்கு முன்பாக இருந்தால் அம்மா கேக் செய்வதும், பலூன் ஊதுவதும், பேப்பர் அலங்காரங்கள் செய்வதுமாக ஒரே களேபரமாக இருக்கும். நண்பர்களை எல்லாம் அழைத்து பர்த்டே பார்ட்டி இருக்கும். ‘விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் பார்ட் டிக்கு


ஊவா முள்

 

 வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும் , பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனெத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உள் அறையிலிருந்து அம்மா , என் மனைவியைக் கடிந்து கோண்டாள் , “நீ என்ன அந்த நாசமாப் போறவளை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சி , காபி குடுத்து சீராடிக்கிட்டு இருக்க? வாசல்லயே நிக்க வெச்சு பேசி அனுப்பியிருக்கலாமில்ல? ஒடம்புல எவ்ளோ தைரியமிருந்தா திரும்பியும் இந்த வீட்டுப் படியேறி வருவா?ஒரு தடவ வீட்டுக்குள்ள


மரக்கோணியும் நயினாரும்

 

 நயினார் தன்னுடைய 25 வருடப் பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாக கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹூம்! எதற்கும் மசியவில்லை அந்த கருவி. கம்மென்றிருந்தது. அவருக்கு தன்னைச் சுற்றிய உலகமே மௌனமாகி விட்டாற் போலத் தோன்ற திகைத்துப் போனார். நயினார், நெல்லை மாவட்ட விவசாயி. வயது எழுபதும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம். உழைத்து உழைத்து உரமேறிய உடலமைப்பு. அரையில் ஒரு வேட்டி , மேலே நைந்து பழசாகிப் போன சிவப்புத் துண்டு. ஊருக்கோ , இல்லே