கதைத்தொகுப்பு: கல்கி

146 கதைகள் கிடைத்துள்ளன.

ரங்கா சேட்

 

 ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள். ‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’ முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில் சிந்தின அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நந்து கேட்டான். ஆறே கால் அடி ஜாம்பவான்.


வக்காலத்து

 

 பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் எப்படியும் உட்கார இடம் கிடைக்காது, ஸ்டேண்டிங்தான். டவுனில் எங்கே பார்த்தாலும் கும்பல் கும்பல்தான்.எல்லா கூட்டமும் உணவுவிடுதிகள்லதான் இருக்கு.ரோட்சைடு கையேந்திபவனில் கூட கும்பல்.அதேசமயம்ஒரு சோகம் வெள்ளாமை அத்து போய்க்கிட்டு இருக்கு. கழனிகாடெல்லாம் இன்னிக்கு முள்ளுச் செடிங்க மண்டிக்கெடக்குது.அல்லது கலர்கலராய் கற்கள் நட்டு மனைபிரிவு அமைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு விவசாய நாடு. இப்படி ஒரு சமூகமே


வானவில் கல்யாணம்

 

 போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி வாங்க அழைத்தார். அனுமதி இலவசம் என்று கொட்டை எழுத்தில் போட்டிருந்தது. யார் மீது கோபப்படுவது என்று தெரியாமல் பொதுவாக கோபப்பட்டான் விசாகன் . விசாகனும் கல்பனாவும் திருச்சியிலிருந்து இன்று காலை தான் சென்னை வந்தார்கள். இன்று ஜட்ஜ்மென்ட் டே. பெயில் எடுத்ததிலிருந்து ஆறு மாசத்தில் கோர்ட்டுக்கு இது பதினேழாவது விசிட். தத்கல் மூலமாக இந்தியன் ரயில்வேக்கு


ரொம்ப தேங்க்ஸ்

 

 ‘வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க “ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே வந்தான் . மாதவா ,வெள்ளிக்கிழமை லீவு போட்டுட்டு போகலாமாடா “என்றதும் “போலாம்பா’ என்று உற்சாக குரல் உடனே வந்தது ராமசாமி போன்போட எதிர் முனையில் எதிபாராத வகையில் பெண்ணே போனை எடுக்க , “ஒண்ணுமில்லேம்மா ,வர்ற வெள்ளிக்கிழமை உன்னை பெண்பார்க்க வரலாமான்னு உங்க அப்பா அம்மா கிட்டே கேட்கத்தான் பண்ணினேன் “என்று ராமசாமி சொல்ல ,-


கடலுக்கு போன மச்சான்

 

 “ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா பேசுறே? போன மாசம் உடம்பு முடியாம வீட்ல உழுந்து கிடந்தியே …அப்பா நீ நல்லாயிரணும்னு வேண்டிகிட்ட நேர்த்திக்கடன். அதை தீர்த்தது தப்புங்கிரியா?” “நேர்த்திகடனை தீர்த்துட்டில்ல, இன்னைக்கு அந்த சாமிகிட்ட போய் கடன் கேட்டு மண்ணெண்ணெய் வாங்கி, அடுப்பை எரியவுடுடி, போக்கத்தவளே சாமிதான் படியளக்கிராப்பில” “தா, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் புள்ளையார் சாமிதான்யா படியளக்குது .போன மாசம்


செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

 

 கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூ‎ன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். “ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல” கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. “வேற


தாய்மை..ஒரு கோணம்

 

 நான் ஒரு மெடிக்கல் ரெப்ரெஸன்டேடிவ். வெள்ளை உடை உடுத்தி, டை அணிந்து, மருந்து சாம்பிள்கள் அடங்கின கருப்பு கைப்பையை சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றுவது என் வேலை. என் அலங்காரத்தையும், கைப்பையையும் பார்த்தாலே, நான் என்ன வேலை செய்பவன் என்று முகத்தில் எழுதி ஓட்டியிருக்கிறது என நண்பர்கள் கேலி செய்வதுண்டு. பி.காம். பாஸ் பண்ணியதும் ‘பாங்க் வேலை’ வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவன்தான் நானும். இரண்டு வருஷங்கள் அந்த லட்சியத்தின் காரணமாய் வீட்டில் ஈ


இன்னொரு ஆட்டக்காரன்

 

 இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும் திருநாள். மாடமுத்துவுக்கும் அவன் மனைவி பூவம்மாவுக்கும் கால் தரையில் பாவவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விஷயம் வேறு ஒன்றுமில்லை மாடமுத்து பூவம்மா தம்பதியின் ஒரே மகன் குமார் தன் குடும்ப சகிதம் சென்னையிலிருந்து ஆழ்வார்குறிச்சி கிராமத்துக்கு இன்னும் இரண்டு நாளில் வருகிறான். ஒரு வாரம் முன்னதகாவே இவர்களுக்கு ஃபோனில் சொல்லி விட்டான். ஏதோ


தந்தை சொல் மிக்க..

 

 “கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து.இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்ட் பண்ணவனை விட்டுக்கொடுப்பானா?” தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சொல்லப்பட்ட பையன் விபூதி இட்டுக்கொண்டு உத்தரத்து ஒட்டடையை வெறித்துக் கொண்டிருந்தான். சரவணன் அப்பாவைப் பார்த்தான். கேட்காதவர் போல அவர் கவனமாக இவன் பார்வையைத் தவிர்த்தார். சரவணன் சட்டைப்பையில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான் “சரவணன்,


அங்கே என்ன இருக்கு?

 

 வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு ஓடும் கார்… இப்படி வீடு முழுவதும் எத்தனை எத்தனையோ வெளிநாட்டு விளையாட்டுச் சாமான்கள்! ஆனால், ரகுராமன் குழந்தைகளான சங்கீதாவும், சுமித்ராவும் இவை அத்தனையையும் ஒதுக்கிவிட்டுச் சதா அடுத்த வீட்டுக்கே போவது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனும் எத்தனையோ முறை கண்டித்துப் பார்த்து விட்டான்; அவர்கள் கேட்டபாடில்லை, அப்படி அந்த வீட்டில் என்னதான் இருக்கிறது? விளையாடக் கூட

Sirukathaigal

FREE
VIEW