கதைத்தொகுப்பு: கல்கி

147 கதைகள் கிடைத்துள்ளன.

போதி மரம்

 

 அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது. புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி..! அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.


கிச்சா

 

 தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம் உண்டு. எல்லா அக்கிரகாரங்களைப் போலவே இங்கும் சுமாரான வசதியுள்ளவர்கள் , ஏழைகள் , படு ஏழைகள் அதற்கும் கீழுள்ளோர் என எல்லோரும் உண்டு. அதில் நாலாவது வகையைச் சேர்ந்தவன் தான் நம் கிச்சா. ஒல்லியான தேகம் , முகத்தில் தாடி மீசை , அழுக்கு வேட்டி , எப்போதும் நிலைத்த பார்வை. இது தான் கிச்சா. எங்கள்


ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!

 

 இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார். ‘அன்புள்ள அப்பா’ பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார். ‘அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு ‘அப்பா’ என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்


ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும்

 

 ‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். “கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?” “ம்… கேட்டுட வேண்டியதுதான்!” உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழுதியைத்தன் உடம்பு


சில திருட்டுகள்

 

 நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல உடம்பில் அப்படியொரு வலி. எழுந்து அவசரமாகக் குளித்துவிட்டுக் கிளம்பினேன். இப்ப பஸ் பிடிச்சால்தான் மதியத்துக்காவது திருச்சி போய் ஆஜராக முடியும்.. இன்றும் நாளையும் பந்தோபஸ்து டியூட்டி.. போன வாரம் சி.எம். ஃபங்ஷனுக்குப் போய், மூன்று நாட்கள் போட்ட யூனிஃபார்மோட, கால்களில் இழுத்துக்கட்டிய பூட்ஸ்களோட, ஐயோ! கொளுத்தும் வெய்யில், வியர்வையில் உள்ளாடைகள் மொடமொடத்துப் போய் அறுத்துவிட, நடக்க


சினேகிதியே…

 

 சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின் சீவல் ஷார்ப்னரிலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்தது. சிறுமியாய் இருந்த போது இதை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து, காய வைத்தால் ரப்பர் கிடைக்கும் என்று செய்து பார்த்தது நினைவுக்கு வந்தது. குண்டூசியில் வண்ண மணியைச் செருகி, ரப்பர்த் துண்டை திருகாணியாய் பொருத்தி, ஒரு ஜோடி பத்து காசுக்கு விற்ற பத்மா தான் அதைச் சொன்னாள். அப்போது மூன்றாவது


இரண்டும் ஒன்று

 

 ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் தெரிந்தவர்கள். நெஞ்சு வரை நினைவிருக்கிறது. ஆனால் யார் என்று உடனே சொல்லத் தெரியவில்லை. “உங்களை அறிந்திருக்கிறேன். ஆனால் யார் என்று தெரியவில்லை.” “நீயாகவே கண்டுபிடியேன் பார்க்கலாம்.” அதற்கும் சிரிப்பு. ஆஸ்பிடலின் தூக்கலான டெட்டால் வாசனை ராகவனை சங்கடப்படுத்தியது. வலது கையை பார்க்க முடிந்ததே தவிர அசைக்க முடியவில்லை. தலையின் மேல் ஒரு


அண்டங்காக்கை

 

 முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ வரவில்லை. மற்ற காக்கைகள் ‘கா..கா’ என்று கத்தினால் இந்த கிழட்டு அண்டங்காக்கை மட்டும் ஒரு மாதிரி ‘க்ர்ர்ஹ்… க்ஹ்’ என்று பால்கனி கட்டையில் உட்கார்ந்து கொண்டு அவனை பார்த்து கத்தும். அதன் நாலாவது ரவுண்டில் முருகு கிட்டத்தட்ட விழித்துக் கொள்வான். அரை தூக்கத்தில் அவன் தரையில் சிதறவிடும் மிக்சர் துகள்களையும், நேற்றைய உணவு மிச்சங்களையும் தத்தி


அமுதா

 

 அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்களைக் காதலித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் எல்லாம் அவர்களைக் காதலித்தார்களா என்று எனக்குச் சரியாகத் தெரிய வில்லை. அது தெரிந்து இப்போது எனக்கு என்ன ஆகப் போகிறது? ஏன் கோபப்படுகிறேன் என்பது உங்களுக்குப் போகப் போகத் தெரியும். எல்லோரையும் போல நான் என் காதலை அமுதாவிடம் உடனே சொல்லவில்லை. சொல்லி அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வது


மேரை

 

 ”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப் போதும், படிக்குப் பாதியாவது தேறும். கொஞ்சம் தயவு வெச்சி தண்ணி வுடுங்க சாமியோவ்!.” “ஏய் கெழவா! மோட்டாங்காலு பயிருக்கு உனுக்கு தண்ணி வுடணுமா?.அடீங்! இங்க அவனவன் பள்ளக்காலு பயிருக்கே தண்ணி அருந்தட்டலாப் போயி சாவறான் தெரியுதில்ல?. நவுரு…நவுரு.” “கொஞ்சம் பெரிய மனசு வெய்யுங்க சாமீ.ஊருக்கு ஒத்தைக்குடி, அண்டிப் பொழைக்க வந்தவன். நீங்களே ஒத்தாசை பண்ணலேன்னா எப்படிங்க