கதைத்தொகுப்பு: கல்கி

147 கதைகள் கிடைத்துள்ளன.

விசாலாட்சி +2

 

 “விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’ அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி வீதியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். தலை கலைந்து அலங்கோலமாய் இருந்தது. திண்ணையில் உட்கார்ந்து கட்டிக் கொண்டிருந்த பூச்சரத்தை அப்படியே போட்டுவிட்டுப் பதறியபடி எழுந்தேன். அம்மாவின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை எப்போதும் இல்லாதது. “பெரிய அத்தைக்கு போன் வந்துச்சாம். சீமெண்ணெயை ஊத்தி பத்த வெச்சிட்டாளாம். பாவிப் பொண்ணு, உடம்பெல்லாம் பொறிப் பொறியா கிளம்பிடுச்சாம். அவளோட அப்பன் ஏதோ சொல்லிட்டானாம்…


தரையிறங்கும் இறகு!

 

 வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர். மொத மொதல்ல தனக்கு வெள்ள முடி வரும் போது கூடமுத்துலட்சுமிக்கு மனசுல கிலேசம் இருந்தது கிடையாது. ஆனா, ‘ஏகெழவி’ன்னு பிள்ளைங்க கூப்பிட ஆரம்பிச்சதும் தான், முத்துலட்சுமிக்கு மனசுக்குள் கிலி பிடித்த மாதிரி இருந்தது. சின்னப்பிள்ளையில, கூடப்படிக்கிற பிள்ளைங்க யாராவது ‘முத்து’ன்னு சுருக்கமா கூப்பிட்டாலே அப்பாவுக்குப் பிடிக்காது ‘அதென்ன பேர் வைக்கறது ஒண்ணு, கூப்பிட்றது ஒண்ணு’ன்னு கோபப்படுவார்.


பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

 

 தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை மரங்களும்.. இது தவிர்த்து, கருவேலமும், ஒடைகளும்.. ஒடைநெற்றைத் தட்டி, ஆட்டுக்கு மேய்ப்புக் காட்டிக் கொண்டிருக்கும் கோவணம் பாய்த்த சிறுவர்கள்.. அந்தச் சிறுவர்களில் ஒருவன்தான் இந்தச் சிலுவை. “இப்ப நாம்ப நிக்றோம்லே, இதுதான் உச்சித்தேரி…” என்றார் நயினாத் தாத்தா. “இதுதான் தேரியிலேயே உசரமான எடம்.. இங்கின நின்னுப் பாத்தா, நம்ப செந்தூர் கோபுரம் தெரியும்.. நாசரேத் சோடாபாட்டில்


பிடிபட்டவன்

 

 ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான் மருதன். எரும மிதிச்ச கால் எரியறது மாதிரி வெய்ய மூஞ்சியில எரிச்சலைக் கெளப்பியது. குத்துக் காலிட்டுக் குந்தியபடி கீழக் கெடந்த ரவக் குச்சிய எடுத்து மணல் தரை மேவாட்டத்துல ஒரு நோக்கமுமில்லாம என்னத்தையோ கிறுக்கினான். அது என்னமோவாக வடிவெடுத்தது. குச்சியை தூரப் போட்டுவிட்டு ஆட்காட்டி விரலால் அளைந்தான். மணல் துகள்கள் விரல் சந்துல பூந்து கிச்சுகிச்சு


விசும்பல்

 

 “சொக்கன் வந்துட்டானா?” “கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி…..” “ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம் நீயா பாத்து ஊதவேண்டியதுதான்… ஒனக்கு ஒரு ஆளு மேம்பார்வை பாத்துகிட்டு வெரட்டிகிட்டு இருக்கமுடியாது… சுத்தம்பற ஊதுனாத்தான் பேசுனபடி காசு..” தலையாரி உத்தரவு போட்டுக்கொண்டே நடந்தார். “ தெரு கிளிஞ்சிடாது… ஓன் சோலியப்பாரு… அய்ய…. என்னப் பத்தி கவலப்படாதே” சங்கை எடுத்து மணி அடித்தபடி ஊதத்துவங்கினான் சொக்கன். தெரு சனம் ஒவ்வொருவராய் வர துவங்கினர். சின்ன வயசு


உயிர்ச்சுமை

 

 சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை அறியாமல் விழிகளில் பொங்கிய நீர் பிரிந்து புரண்டது. வசிப்பிடம்தான் எல்லோருக்கும் இளைப்பாறல்… ஆனால் ஒரு சில சமயம் வீடற்று இருப்பதும் ஒரு சவுகர்யம் என்று தோன்றியது. பற்றற்று இருப்பது பேரானந்தம் என்கிற ஞானமெல்லாம் துயரம் சூழ்ந்து அழுத்துகையில் தோன்றாமலிருக்கிற மனிதர் எவருமில்லை. மணி தன் இறுதி நிமிடங்களை சிரமப்பட்டு நர்த்திக்கொண்டிருக்கிறது. அதன் தீனமான குரைப்பொலி இல்லாத


பொதி

 

 எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி இருந்தது. வேகமில்லாத வேகத்தில் முன்னும்பின்னும் அசைந்தாடிய ஊஞ்சலின் தாலாட்டில் கண்மயங்கி, தேவதையின் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்க முயன்றுகொண்டிருந்தபோது, தேவதை அவளை உலுக்கி எழுப்பி, ‘ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு’ என்றது. சட்டென்று ஊஞ்சலின் இயக்கம் நின்றுவிட்டது.


கிழக்கு

 

 அன்று அதிகாலையிலிருந்தே அவனுக்கு நேரம் சரியில்லை. தூக்கத்திலிருந்து விழிப்பதற்குமுன்பே ஒரு கெட்ட கனவு – யாரோ நான்கு முகம் தெரியாத அயோக்கியர்கள் அவனைத் துரத்தி, அவனுடைய கை, கால்களிலெல்லாம் சிறு ஊசி கொண்டு எண்ணற்ற துளைகள் செய்துவிட்டு, காணாமல் மறைந்துவிடுகிறார்கள். திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன், தன் அறையின் இதமான சூழலில்தான் ஓரளவு நிம்மதியடைந்தான். என்றாலும், அந்தக் கனவின் மிச்சம்போல, வயிற்றின் ஒரு மூலையில், பிடிவாதமாய் ஏதோ வலித்துக்கொண்டிருந்தது. சுவரோரமாய்ச் சரிந்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் சியாமளாவை ஒருமுறை பார்த்துவிட்டு, போர்வையை உதறி


பொதி

 

 எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி இருந்தது. வேகமில்லாத வேகத்தில் முன்னும்பின்னும் அசைந்தாடிய ஊஞ்சலின் தாலாட்டில் கண்மயங்கி, தேவதையின் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்க முயன்றுகொண்டிருந்தபோது, தேவதை அவளை உலுக்கி எழுப்பி, ‘ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு’ என்றது. சட்டென்று ஊஞ்சலின் இயக்கம் நின்றுவிட்டது. ப்ரியா


அப்பாவும், நடேசனும்

 

 ‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே வந்து தங்கியிருந்துட்டு போன புதனுக்குதான் கிளம்பினாங்க, அவங்களும் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க, உன் சிநேகிதப்பய பரமசிவனுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம், அவங்க அப்பாவும், அம்மாவும் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டுப் போயிருக்காங்க, அவனும் நேத்தி சாயங்காலம் நேர்லவந்து உன்னை அவசியம் வரச்சொல்லி கடிதாசி எழுதணும்ன்னு என்னைக் கேட்டுகிட்டுப் போனான், அதனால நீ எவ்ளோ சீக்கிரம்