கதைத்தொகுப்பு: கல்கி

147 கதைகள் கிடைத்துள்ளன.

கணக்கு தப்புங்க மிஸ்!

 

 எப்படித்தான் இந்த மிஸ் மட்டும் மணி அடித்ததும் வகுப்பறை வாசலில் வந்து நிற்கிறாரோ? என்று எல்லா பிள்ளைகளுக்கும் எப்பவுமே கௌரி டீச்சரைக் குறித்த சந்தேகம் இருக்கும். மணி ஒலித்ததும் கௌரி வகுப்பறை வாசலுக்கு வருகிறாரா? அல்லது அவர் வந்ததைப் பார்த்து மணி ஒலிக்கிறதா? என்று ஒரு பட்டிமன்றமே வைத்துவிடலாம். சாலமன் பாப்பையா அல்லது நீதியரசர் கிருஷ்ணய்யராலேயே சரியான ஒரு தீர்ப்பினை வழங்க முடியாத விவகாரம் இது. “குட் மார்னிங் மிஸ்’ என்ற குழந்தைகளின் அன்பினை சிந்தாமல் சிதறாமல்


மீதி

 

 டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுபாஷ் அவர் புன்னகையை நினைவு படுத்திக்கொண்டான். கவர்ச்சிகரமான சின்னப் புன்னகை. ஒரு சிறிய ஒத்திகை. தமக்காக தாம் மட்டும் பார்த்துக் கொள்ளும் ஒத்திகை. சுலோசனாவிடம் போய் அதே மாதிரி சிரிக்க வேண்டும். நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி. அவள் நம்புகிற மாதிரி. சர்ரக்… சர்ரக் என்று நர்சுகளும் பேஷண்டுகளும் நடமாடுகிற ஷூ ஒலி. யாரோ ஒரு நர்ஸ் வார்ட் பாய் ஒருத்தனை மிரட்டுகிற குரல். எல்லாவற்றுக்கும் அப்பால் எதிரே வந்த சாமிநாதன்.


பஞ்சும் நெருப்பும்!

 

 திருப்பூர் சங்கீதா திரையரங்கில் அவர்கள் 3 படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் செல்வியும், ரமேஷûம்தான். அட, அப்படியானால் அவர்கள் இளம் ஜோடிப் புறாக்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நொடியில் யூகித்திருப்பீர்கள். பின்னே இந்தக் காலத்தில் எங்கே அண்ணனும் தங்கையும் இணைந்து வந்து படம் பார்க்கிறார்கள்? தனுஷை போடா போடா என்று வீட்டுக்குத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தாள் காதலி! ஒரு நிமிஷம் என்று தனுஷ் அவள் கையைப் பிடித்துக் கொண்டே நின்றான். எங்கே அந்தப் பெண்ணின் அப்பா


அதிகாரம்!

 

 கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறோம். நானும் குமாரும். சென்னைக்கு ஏதோ வேலையாக வந்தவன், அப்படியே என்னைப் பார்த்துப் போக வீட்டுக்கு வந்திருக்கிறான். மதுரைக்குப் பக்கம் எங்கள் கிராமம். நான், குமார், சப்பை என்கிற குமரன் மூவரும் ஊரைப் பொறுத்தவரை மும்மூர்த்திகள். எங்கேயும், எப்போதும் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருப்போம். மூவரில் குமரன் கொஞ்சம் பயந்தவன், அல்லது ஒருவிதமான அப்பாவி. ஊரிலேயே ஒல்லியான தேகம் கொண்ட பாலாவிடம் கூட அடிவாங்குபவன். அதுவும், அவனுக்கு எட்டவில்லை என்று இவனை


சிண்ட்ரெல்லா!

 

 ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது. ‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன். இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான


அஞ்சறை பெட்டி!

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை! அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான். விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக் கொள்ள பறந்து கொண்டிருப்பவன், அன்று அமைதியாக தாள்களைப் பரப்பி வைத்துக் கொண்டு வீட்டுக்குள் இருப்பதை பார்த்து, வீடு நிறைந்திருப்பதால் உணர்ந்தாள் சிவகாமி. உண்மையில் அந்த வீடு அன்றைக்கு நிறைந்துதான் இருந்தது. சிவகாமி பெற்ற செல்வங்கள் இரண்டும், அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்து வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். தட்டுமுட்டுச் சாமான்கள்,


வெண்ணிற அன்னம்!

 

 நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி வந்தாள். நான் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இளைஞர்களைக் காட்டிலும் இளைஞிகளே அதிகம். இளைஞிகள் எல்லார் முத்திலும் தன்னம்பிக்கை! எனக்கு எல்லாமே புதிது. இந்தக் கூட்டம், இளைஞர்கள், பெண்கள்! ஐந்தாறு வருடங்களாக வீல்சேரில் அடைபட்டுக் கிடந்த எனக்கு இந்த மாற்றங்கள் அப்பட்டமாகத் தெரிந்தன. இந்த வருடம் மும்பைக்கு இது என்னுடைய நான்காவது விஸிட். முதல் தடவை


தந்தை சொல் மிக்க…

 

 “கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான் இவன். ரீ வால்யூவேஷன் எல்லாம் பம்மாத்து. இப்ப திருத்தறவன் முதல்ல கரெக்டக பண்ணவனை விட்டுக் கொடுப்பானா?’ தந்தையொருவர் நாலுசீட் தள்ளி சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார். சொல்லப் பட்ட பையன் விபூதி இட்டுக் கொண்டு உத்தரத்து ஒட்டடையை வெறித்துக் கொண்டிருந்தான் சரவணன் அப்பாவைப் பார்த்தான். கேட்காதவர் போல அவர் கவனமாக இவன் பார்வையைத் தவிர்த்தார். சரவணன், சட்டைப்


சாயங்கால மேகங்கள்

 

 நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு அணைத்தபடி நகர்ந்தார். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் பென்ஷன் பேப்பர் சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். சரியான பதில் தராமல் அலைக்கழிக்க விட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இரண்டே சந்திப்புகளில் வேண்டிய விளக்கங்களை பெற்று பிரச்னையை தீர்த்து வைத்த திருப்தி ராஜசேகருக்கு. பெல் அடித்து வரவழைத்த அட்டெண்டரிடம் டீ சொல்லு. அவன் தயங்கியபடி சார் செந்தில்ன்னு ஒருத்தர்


வலியின் மிச்சம்!

 

 ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும் அவரை எப்பவும் மனசால் கூட நொந்தது கிடையாது. ஆனால் இண்டைக்கு ஏஜ் இவ்வளவு நேரம். திருச்சி கே.கே. நகரில் ஒரு கோடியில் கிடந்த அந்த வீட்டினுள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் அமைதியை விரட்டிக் கொண்டிருந்தது மூத்திர நாற்றம்… “ஏனப்பா…’ தொய்ந்து போன குரலையடுத்து விம்மல் வெடிப்புகள் அச்சிறிய வீட்டினுள் எதிரொலித்தன. காதலும் தேடலும் இருக்கக்கூடியதான 27