Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: அமுதசுரபி

27 கதைகள் கிடைத்துள்ளன.

போதிமரம்

 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்த கா ஹரி மணியைப் பார்த்துக் கொண்டான். மளமளவென்று பல் தேய்த்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றான். ஸ்டவ் மீது ஒரு பக்கம் இட்லி வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குக்கர் விசிலடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. நான்காவது அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீவல்லி மிக்ஸ்யில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் எலக்ட்ரிக்


பிரதிபிம்பம்

 

 அந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால் சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? – யாரோ ஒரு முந்தாநாள் கத்துக்குட்டி நடிகையைத் தான் எதற்காகச் சந்தித்து அவளோடு சரிசமமாக எதிரும் புதிருமாய் உட்கார்ந்து பேசுவது என்று எண்ணிய போது முதலிலேயே சரி என்று சொல்லியிருக்க வேண்டாமோ என்று இப்போது பட்டது அவளுக்கு. ஒரு


சாட்சிக் கையெழுத்து

 

 காலையில் பரமசிவம் வேலைக்குக் கிளம்பும்போது, அவனுடைய பெண் வனிதா, கையில் சில பேப்பர்களை எடுத்து வந்து, ‘அப்பா, இதில் நீங்கள் இந்த இடத்தில் ஒரு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போங்கள். மற்றதையெல்லாம் காலேஜில் ‘பில் பண்ணிக் கொள்ளுகிறேன். இதைக் கொடுப்பதற்கு இன்றுதான் கடைசி நாள். எனக்கு இது சம்மந்தமாக கொஞ்சம் பணமும் வேண்டும்” எனச் சொல்ல, அவன் கையெழுத்துப் போட வேண்டிய பக்கத்னத மட்டும் எடுத்துக் காட்டினாள். பரமசிவமும் அவள் காட்டிய இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு,


புதிய சக்தி

 

 அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும் கவர்ந்தது. “சூப்பர் செலக்ஷன் சார்… இந்தப் புடவையைப் பார்த்ததும் உங்கள் மனைவி அசந்துருவாங்க…” என்று சாவித்திரி டீச்சர் கூறும்போது, நவநீதனுக்குப் பெருமையாக இருந்தது. “புடவையை நன்றாகத் தேர்வு செய்திருக்கீங்க… உங்க மனைவியையும் அப்படித்தானே தேர்வு செய்திருப்பீங்க…? அவங்களைப் பார்க்கணும் சார்…” என்றாள் கமலம் டீச்சர். “என் மனைவி மைதிலி அழகானவள், அறிவுள்ளவள்….. அவளும் ஆசிரியையாகப் பணிபுரிந்தவள்


தாமதமாக வந்த புன்னகை

 

 அன்றைக்குக் காலையில் எழுந்த – போதே அலுவலகத்துக்கு இன்று விடுப்பு சொல்லி விட வேண்டும் என்று அகில் தீர்மானித்து விட்டான். கடந்த பத்து நாள்களாக இருமல், நீர்க்கோவை, ஜாட்டியம் ஆகிய பாதிப்புகளால் அவன் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். இனிமேலும் பொறுக்க அவனால் முடியவில்லை. தன் முடிவை அம்மா விடம் சொன்னான். “இன்னிக்கு லீவ் போட்டு டாக்டர பாத்துட்டு வந்துடறேன் மா. ஏதாவது மருந்து சாப்டா தான் சரியாகும்னு நினைக்கிறேன்” “ஆமாம் டா, நானே சொல்லணும்னு நினைச்சேன்.


அன்னயாவினும் புண்ணியம் கோடி…

 

 சூரியனின் சோம்பலான மஞ்சள்நிறக் கிரணங்கள், இப்போது தான் கீழ்வானைத் தடவத் துவங்கியிருந்தன. ஆனால், புதுப்பட்டிக் கிராமமோ எப்போதோ எழுந்துகொண்டு சுறுசுறுப்பை உலவ விட்டிருந்தது. அப்படி இருந்தால்தான் முடியும். நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களுமாய் நிரம்பி வாழ்கிற ஊருக்கு, சோம்பலைக் கொண்டாடவெல்லாம் நேரமும் கிடையாது, அது மாதிரியான சிந்தனையும் வராது. எழுந்து கொண்டதுமே வியர்வை சிந்தத் தயாராகி விடவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் நகரும். நகர்த்தவும் முடியும். சின்னத்தாயும், சில பெண்களுமாய் மலைப்பகுதியை நோக்கி நடக்கிறார்கள். ஃபாரஸ்ட் வாச்சர்


நீறு பூத்த நெருப்பு

 

 மல்லிகை முல்லையின் நறுமணம் ஒரு பக்கம். கேசரி…பஜ்ஜி…காபியின் நாவில் நீர் சுரக்கவைக்கும் மணம் ஒருபுறம்..சந்தோஷம்…பயம்…பதற்றத்துடன் கைகோத்து ஃயூஷன் கலவையாக புதிய ஒரு சங்கமத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. “பெண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…ஸ்ருதிகிட்ட கேட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கோ. பெண்ணின் விருப்பம் ரொம்ப முக்கியம். சேகா! நான் சொல்றது சரிதானே…” ராஜி தெளிவாக…. மிகவும் மிருதுவாக, உறுதியாகச் சொள்ளாள். அவள் பூசி மெழுகி பேசவில்லை, அது மிகவும் இயல்பாகவே இருந்தது, ராமசுப்பு ஆடிப்போய் விட்டார். ஸ்ருதிக்கு இரண்டு மூன்று


டீச்சர் செய்த தவறு

 

 தேவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலை மகா வந்தடையும் நேரம் என்பதால், கணேசன், அவனது ஆட்டோவை வேகமாக ஓட்டினாள். ஒரு சவாரியை, புரசைவாக்கத்தில் இறக்கி விட்டு, சூளை வழியாக சென்ட்ரலை நோக்கி வேகவேகமாக வந்தான். எதிரே யார் வருகிறார்கள், அல்லது எந்த வண்டி வருகிறது என எதுவுமே அவனது கவனத்தில் வரவில்லை , கோவை எக்பிரஸ்ஸிலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணியை, மற்ற ஆட்டோக்காரர்களை முந்திக் கொண்டு தான் சவாரி பிடித்து விட்டால், அதன் மூலம் கிடைக்குமே முன்னூறோ.. நானூறோ..


சரயூ

 

 தேவேந்திரன் சரயூ நதிக்கரையில் நின்றிருந்தான். அவனது வாகனம் ஐராவதம் வான்வெளியிலிருந்து அவளை இறக்கிவிட்டு அயோத்தியின் புறவெளி வனங்களில் உலவச்சென்றது. அது சிந்திக்கிற உயிரி. சிந்தித்தது. “தலைவர் தாகம் இந்திராணி இருந்தும் தீரவில்லையே! அன்று ஆகாய கங்கை இறங்கும் அடிவாரத்தில் அகல்யாவுக்காக மனித வடிவில் சென்று சேவலாகக் காவினார். இன்று சரயூவின் கரையில் வந்து நின்றிருக்கிறார்?யாருக்காக?” மனித வடிவில் நின்ற தேவேந்திரன் கம்பீரமாக ஓடும் சரயூவைப் பார்த்து நின்றான். ‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின்


கருணை மனு

 

 கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு வானம் இருண்டிருந்தது. சில்லென்ற காற்று இழையோடி மனதுக்குக் குளுமையைச் சேர்த்தது. ஆனால் புவானவுக்கோ? அந்த ஏழு வருடங்களில் எத்தனையோ நடந்து முடிந்துவிட்டன. சமுதாயத்தின் கண்ணடியும் சொல்லடியும் புவனாவின் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி மறையாத ஒரு வடுவாகவே மாறிவிட்டது. அந்த காரில் மட்டும் அவள் தொடர்ந்து இருந்திருந்தால் இந்நேரம் அவள் குடும்பமே புதைக்கப்பட்டு அந்த இடத்தில் புல்