கதைத்தொகுப்பு: சுட்டி கதைகள்

886 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க மீன்

 

 அரசபுரம் என்ற ஊரில் பசுமையான வயல்களும், செல்வ செழிப்போடும் மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய குளத்தில் என்றுமே மீன்கள் நிறைந்து இருக்கும். அந்நாட்டு அரசன் ஒரு நாள் அந்த குளக்கரைக்கு வந்தான். சோர்வு மிகுதியால், அக்குளத்திற்கு சென்று முகம் கழுவினார். உடனே அவன் கையில் ஒரு தங்கமீன் வந்தது. அந்த மீன் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக இருந்தது. அந்த மீன் அரசனைப்பார்த்து பேசத் தொடங்கியது, “அரசே நான் இங்கு இருக்கப் பயமாக இருக்கிறது,


வீரத்தாய் கூறினாள்

 

 “அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன். ”கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக் கவனமாகக் கேள்.. மகனைப் பெற்றெடுத்து வளர்ப்பது தாயின் கடன். அதனைச் செம்மையாகச் செய்து விட்டேன். கல்வி அளித்துச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடன். உன் தந்தையும் தன் கடமையைச் செய்துள்ளார். கொல்லன் கடமை வேல் வடித்தல் உன் கைவேல் அதனைக் காட்டுகிறது. மன்னனும் உனக்கு நல்வாழ்வு அளிக்கத் தவறவில்லை . “தாயே, நான் என் கடமையைச்


கேடயம் தா

 

 மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான். புலவர் அரிசில் கிழர் அவ்வழியே வந்தார். நேற்று கொல்லப்பட்ட மறவனையும் அவன் தம்பியையும் நன்கு அறிந்திருந்தார். இங்கே துள்ளிக் கொண்டிருக்கும் மறவனைக் கண்டதும் அவருக்குச் சிரிப்பு வந்தது. ஏன் தம்பி வீணாகக் கத்துகிறாய். நீ கேடயத்தோடு போய் கல்மறைவில் நின்றாலும் தப்பமாட்டாய். நீ போரில் கொன்றாயே; அவன் தம்பி கண்


ஒரே மகன்

 

 முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான்; இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன் ! மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது… கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி . தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்; வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்.. “போ, மகனே, போ… “போர்க்களம் அழைக்கிறது, போ”


பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்

 

 வயதான மறத்தி. நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஓட்டியிருந்தது. போருக்கு சென்ற புதல்வனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். “போர்க்களத்தில் உன் மகன் புறங் கொடுத்தான்” என்று கூறினர் பலர். அது கேட்டு ஆர்த்தெழுந்தாள் அம் முது மகள். “என் மகன் புறங் கொடுத்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினங் கூறி, வாளேந்திப் போர்க்களம் நோக்கி ஓடினாள். போர்க்களம் புகுந்தாள். எங்கும் பிணக் குவியல். பிணங்களை நீக்கி


ஆனந்தக் கண்ணீர்

 

 போர்ப்பறை கேட்டு போருக்கென எழுந்தான் போர் வீரன். கச்சை கட்டி கையில் வேல் பற்றிப் பெற்ற தாய் முன் சென்று நின்றான். மகன் மார்பைத் தடவிப் பார்த்தாள். “மகனே வெற்றி பெறுக!” என்று வாழ்த்தினாள். அவளுக்கு வயது நூறு இருக்கும். தள்ளாடும் பருவம் கொக்கின் இறகைப் போல் வெளுத்த தலைமயிர் போர் முடிந்து பலர் திரும்பி வந்தனர். தன் மகன் யானையைக் கொன்று விட்டுத்தான் இறந்தான் என்று கேள்விப்பட்டாள். கண்ணீர்த் துளிகள் சிந்தின. மழை பெய்த மலை


கன்றை நோக்கிய கறவைப் பசு

 

 தலையில் மாலை இல்லை. மேனியில் மெல்லிய ஆடை கிடையாது. முகமன் பேசும் வழக்கம் அவனுக்குத் தெரியாது. இத்தகைய மறவன்தான் போர்க்களம் புகுந்தான். போர் நடந்து கொண்டிருக்கிறது. முன்னணிப் படையிலே, தன்தோழனைப் பகைவர் சூழ்ந்து கொண்டனர். இதனைக் கண்டான் அம் மறவன். அவ்வளவுதான் அவன் கண்களில் தீப்பொறி பறந்தது. குதிரையின் கடிவாளத்தைப் பிடித்ததும் பாய்ந்தது முன்னணிப் படை மேல் . ஈட்டிமுனை பகைவரைக் குத்திக் குடல்களைச் சரித்தது. அக் குடல்கள் நழுவி வீழ்ந்து குதிரையின் கால்களைச் சுற்றிக் கொண்டன.


கயல் மீன் கொடி

 

 வாரி வழங்கும் வள்ளல் எவ்வி. அவனது வள நாட்டில் ஆற்றின் இரு புறமும் மதகுகள். ஆற்று நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். கொடு வெயிலில் உழவர் நெல்லறுப்பர். பரதவர் மதுவுண்டு கடல் வேட்டையாடுவர். நிலாவில் மங்கையரோடு கூத்தாடுவர். பரதவ மகளிர் நுங்குடன் கருப்பஞ் சாற்றையும் இளநீரையும் கலந்து குடித்து மகிழ்வர்; கடலாடுவர். கடற்கரை வயலில் கயல் மீன் பாயும் நெற் போரில் நாரை உறங்கும் இத்தகைய நாட்டை பாண்டியன் நெடுஞ்செழியன் வென்றான். அந்தக் கயல் மீன்


அருவிலை நல்லணி

 

 வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ண கனார். வீடு அடைந்த புலவர் தன் எதிரே வந்து நின்ற மனைவியையே பார்த்தார். அவள் கழுத்தில் கிடந்த பொன்னணி மீது கண்கள் பதிந்து விட்டன. புலவர் முகத்தில் நிலவிய சோகத்தைக் கண்டாள் மனைவி. கையில் பொருள் இல்லாமையே கவலைக்குக் காரணமோ என்று நினைத்தாள். கழற்றிக் கொடுக்கப் போனாள். அடகு வைத்துப் பெறலாமல்லவா? “கழற்றாதே காதலி, சோழன் தந்த


கொள்கை மறவாத குமரன்

 

 “போய் வருகிறேன் அம்மா” என்றான் வீரன். “போய் வா, ஆனால், கொள்கையை மறந்துவிடாதே” என்று சொல்லிக் கொண்டே வழி கூட்டி அனுப்பினாள் தாய். கூரிய வேலை கைப்பிடித்தான். புலி போன்று போர்க்களம் புகுந்தான். பகை வீரர் பெருங்கடல் போல் சூழ்ந்தனர். முன்னணிப் படையைப் பிளந்து ஊடறுத்துச் சென்றான். பகைக் கூட்டம் பிணக் குவியல் ஆனது. ஐயோ, அந்த மறவனும் பட்டு வீழ்ந்தான். பகைவரால் சிதைக்கப்பட்டான். போர்க்களம் சென்றாள் மறத்தி. சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டாள். தன்