கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1098 கதைகள் கிடைத்துள்ளன.

இழவு

 

 நேரம் மாலை 5.45. இவ்வளவு நேரமும் இங்கே என்ன நடந்தது என்று உணர்வதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்துவிட்டது. இன்றைய பொழுது எப்படிப்போனது என்றே தெரியவில்லை. எனது கைத்தொலைபேசி சார்ஜ் இல்லாததினால் மூச்சுப்பேச்சின்றி கிடந்தது. இன்று காலை 6.30 அளவில் மனைவியின் தொலைபேசி அலறலில் விழுந்தடித்து வைத்தியசாலைக்கு சென்றபோது, குடும்பத்தின் தலைமைச்செயலராக இருந்த மாமியும் எனது கைத்தொலைபேசிபோல் அமைதியடைந்திருந்தார். முந்தைய நாள் காலை வைத்தியசாலையில், மாமியின் மூக்குவழியாக குழாய் ஒன்றை தாதியர்கள் செலுத்த அதை அனுமதிக்காமல் அங்கும் இங்கும்


உளைச்சல்

 

 போன் எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தார் ராஜாராம். எதாவது மிஸ்ட் கால்ஸ் இருக்கிறதா என்று. “எவ்ளோ தடவ எடுத்துப் பார்த்தாலும் ஒண்ணும் இருக்காது. போன் வரல. நான் இங்கயே தானே இருக்கேன். உங்களுக்கு வேணா காது கேக்காது. எனக்கு கேக்கும்”. மனைவியின் குரலில் ஒரு எகத்தாளம். “சே என்ன பசங்ககளோ. கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாம”, ராஜாமணி குரலில் ஒரு வருத்தம். “அன்னபூரணி , கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்றபடி ஈசி சாரில்


பேயும் இரங்கும்

 

 நடுச்சாமத்தைத்தாண்டிய நேரத்தில் அமாவாசை இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்த பஸ் வண்டி,பாதையின் வளைவின் திருப்பத்தில் சட்டென்று நின்றபோது அதில் வந்த பிரயாணிகள் ஒருத்தரை ஒருத்தர் கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டனர். ஏன் இந்த பஸ் வண்டி நின்றது என்று அவர்கள் யோசிக்கும்போது, ‘எல்லோரும் கொஞ்ச நேரம் இறங்கி நின்று களைப்பாறுங்கோ. வண்டியில என்ன பிழை எண்டு பார்ப்பம்’. பஸ் கண்டக்கர் உரத்த குரலிற் சொன்னார். ‘இந்த நேரமா பஸ் முரண்டு பிடிக்கவேணும்’? வண்டியிலிருந்த மற்றவர்களுடன் மாதவன்,வண்டிக்கு அப்பால் அவர்களைச்;


பச்சை மோதிரம்

 

 1 ”அடா டா டா! என்ன மழை, என்ன மழை! சுத்தமாய்த் தள்ளவே இல்லை; வீடு பூராவும் ஒரே அழுக்கு! என்ன இடி இடிக்கிறது! ஐப்பசி மாதம் அடை மழை என்பார்களே, சரியாய்த்தான் இருக்கிறது. குழந்தைகள் துணிமணி ஒன்றுகூட உலரவில்லை. புடவை ஒரே தெப்பல். இந்தப் புடவைகளே உலரமாட்டேனென்கின்றன. இன்னும் கதர் வேண்டுமாம். கதர்! தூலம் தூலமாய் இரட்டையும் ஜமக்காளத்தையும் வாங்கினால் யாரால் தூக்கி உடுத்த முடியும்? சொல்லப் போனால் பொல்லாப்பு. நான் கதர் உடுத்திக்கொள்ளவில்லையென்னுதான் ‘சுயராஜ்யம்’


தலைமுறைகள்

 

 வளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி பெயர்த்து வைக்கும் முன் இன்னோர் அடியில் தாங்காத உடல் தள்ளாடுகிறது. முண்டிதமான தலையை மறைக்கும் சேலை இறுக்கமாக இரு செவிகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. துல்லியமான பார்வை இல்லாத கண்களைப் பாதுகாக்க அமைந்தாற் போன்ற கண்ணாடி. டாக்ஸியை விட்டு மெல்ல இறங்கும் மருமகள் ஒவ்வோர் அடியாக வாயிற்படியிலேற்றிக் கூட்டி வருகிறாள். வளைவே இல்லாத மெத்தென்ற பாதம் மொஸைக்


தோஷம்

 

 ஒரே நாளின் மூன்று காட்சிகளின் தொகுப்பு இது. கதாநாயகி : கல்யாணலட்சுமி களம் : தனியார் மருத்துவமனை, அலுவலகம், வீடு. பிரச்னைகள்: இரண்டு காட்சி ஒன்று ”இது – கலாசார அதிர்ச்சி தரக்கூடியது. நீங்கள் சந்திக்க வேண்டிய சமூகப் பிரச்னைகள் ஏராளம். காறி உமிழ்வார்கள். வார்த்தையால் விளாசுவார்கள். ஊர்ப்பிரஷ்டம் செய்வார்கள். அது தரும் மன அழுத்தம் உங்களையே சிதைக்கக் கூடும். எல்லாவற்றையும் நினைப்பில் வையுங்கள். வாழ்த்துகள்…” காலையிலேயே வந்திருந்த கல்யாணலட்சுமியிடம் சொல்லப்பட்ட வாசகம் இது – நூறாவது


சைத்தான்

 

 ”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர். அதிகாலையில் பஜர் தொழுதுவிட்டு வந்து , தங்கும் விடுதியை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் அபு. அவனுக்கு சைத்தான் இறந்து விட்டதை நம்பவே முடியவில்லை. வழக்கமாக, காலை பத்து மணிக்குத்தான் மதரசா ஆரம்பிக்கும். அதிகாலையிலேயே குளித்து விட்டு தொழுகப் போவார்கள் மதரசா மாணவர்கள். திரும்பி வந்தும் சிலர் குளிப்பதுண்டு. காலை ஆறு மணியில் இருந்து, பத்து


நியாயங்கள் மாறும்

 

 ”நேற்றிலிருந்து நானும் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன யோசனை அப்படி-ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பதற்கு யோசனை செய்வது மாதிரி?” ஆழ்ந்த உறக்கத்தின்போது உலுக்கி எழுப்பப்பட்டவனுக்குரிய திடுக்கிடலுடன் வள்ளிநாயகம் இலேசான தலைக் குலுக்கலோடும் சட்டென விரிந்து கொண்ட விழிகளோடும் கல்பனாவை ஏறிட்டான். ஓர் அசட்டுப் புன்னகையும் கையும் மெய்யுமாய்ப் பிடிபட்டவனுக்குரிய குற்ற உணர்வும் தன் முகத்தில் தெரிய அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளைப் பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான். ”என்ன பதிலையே காணோம்? உம்? உங்கள் அலுவலகத்தில் ஏதேனும்


புத்தம் வீடு

 

 ‘புத்தம் வீடு’ நாவலில் ஓர் அத்தியாயம்… வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை, பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல்


வதம்

 

 2.9.99 பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம். பாவி கடவுள் இவனைப் பார்த்தால் தொப்பியைத் தூக்கி மரியாதை செய்ய வேண்டுமாம். வார்த்தைகளில் நெருப்பு. பேப்பர் எரியுமோ? பாரதிக்குக் கூட வார்த்தை மந்திரம். நிறைய்ய வேலை. பைகொள்ளாத வேலை. இன்று பார்த்து லலிதா அவள் மேசையில் கவிழ்ந்து படுத்து அழுதாள். என்ன என்றதற்கு ஒண்ணுமில்லை என்று பதில். ஒண்ணுமில்லாததற்கா ஒருத்தி அழுவது. அவள் சிநேகிதன் ஏதாவது