கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1100 கதைகள் கிடைத்துள்ளன.

பால்வீதி!

 

 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி ஒன்று எழுந்து பறக்கப்பஞ்சிப்பட்டு எமக்கு முன்னே தத்தித்தத்திச்சென்றது. நாமும் விடாது தொடரவும் கீசி வைதுவிட்டு எழுந்து பின்னோக்கி அரைவட்டமடித்துப் பறந்துபோய் மீண்டும் அதே இடத்தில் மண் குளித்தது. தொடுவானத்திலிருந்து இன்னும் பெயரிடாத ஆயிரம் வர்ணங்கள் மையம் நோக்கி மெல்ல வந்து சேர்ந்தன.


எய்தவன்

 

 பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்… பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் ‘ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில்


பாட்டு மாமி

 

 என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண் மிதிக்கும் போது கிடைக்கும் சுகமும், சந்தோஷமும் வேறுதான். அம்மாவையும், அண்ணாவையும் பார்த்து எத்தனை நாளாயிற்று. அண்ணியை கல்யாணத்தின் போது நேரில் பார்த்தது. ஆகாஷ் குட்டியையும் வெப் கேமாராவில் பார்த்ததுதான். முதன் முறையாக நேரில் பார்க்கப் போகிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர், பழகிய மக்கள் எல்லோரையும் எத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன். சென்னையிலிருந்து ஊர் வந்து சேரும் வரை மனதில் சொல்லமுடியாத உற்சாகம். கல்யாணமாகி பன்னிரெண்டு


முறுக்கு மாமி

 

 சார், சார், முறுக்கு எடுத்துகோங்கோ, இப்போவெல்லாம் எங்கே இப்படி கெடைக்கறது, நல்ல கை முறுக்கு, ஹி ஹி ஹி, இந்த மாத மீட்டிங்கிற்கு இவா தான் ஸ்பொன்சர். இவர் செக்ரெடரி ஆனதுலேருந்து இப்படிதான் , ஒரு மீட்டிங் கூட காசு செலவழித்து போட மாட்டார். நாங்க நூறு பிளாட் இருக்கோம், மத்த நாளுல மார்க்கெட்டிங் பண்ண அலோவ் பண்ணறது இல்லே, ரெசிடென்ட்ஸ்க்கு ப்ரைவசி போயிடும் இல்லையா. ஸோ மீட்டிங்ல நீங்க எல்லாரையும் மீட் பண்ணலாம் , உங்க


கர்மயோகி

 

 ரயில் நின்றது , சாமி உங்க ஊரு வந்தாச்சு, எழுப்பி விட்ட சக பயணிக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்வை போச்சு, அதே ஆலமரம் அதன் கீழே சிறுவர்கள் பள்ளி சீருடையில், மதிய சாப்பாட்டு கூடையுடன் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும், எல்லோரும் ஓடிகொண்டிருந்தனர், பணத்தில் பின்னல். மனம் ஒரு இருபதியிந்து வருடங்களுக்கு பின்னல் சென்றது . அப்போது இவ்வளவு பரபப்பு இல்லை. இந்த ரயில் நிலையம் மிகவும் அமைதியாக இருக்கும், வேலைக்கு போகும்


இழந்ததும் பெற்றதும்

 

 “இன்னும் எவ்வளவு நேரம் இங்கே உட்காரப்போறே?” என்றாள் வீணா முகத்தை சுளித்துக் கொண்டு. அவளுக்கு அவள் சலிப்பு! அவளுடைய பள்ளியில் முதலாவதாக வந்த பெண்ணுக்கு மட்டுந்தான் சென்ற வருடம் இங்கே இடம் கிடைத்ததாம். அந்தப் பெண்ணை விட ஓரிரு மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்த மாணவிகளுக்குக் கூட இங்கே படிக்க இடம் கிடைக்கவில்லையாம். ராதிகாவுக்கு அந்தக் கல்லூரி வளாகத்தை விட்டுக் கிளம்பவே மனம் வரவில்லை. பூவரச மரங்களும் மயில் கொன்றை மரங்களும் இளங்காற்றில்


பருந்தானவன்

 

 இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்.தாமரை இலை மீது உருண்டு திரண்ட துளிகளாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் எனது விழைவு கூட என்னை உங்களிலிருந்து தனித்துக்காட்டுவதாய் படலாம்.ஆனால்


விழியில் வடியும் உதிரம்!

 

 கொழும்பிலிருந்து எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்குக் கடிதம் வந்திருந்தது. தலைநகரிலே அமைந்துள்ள இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தினசரிப்பத்திரிகையின் உதவியாசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது கல்வித்தகைமைக்கு எத்தனையோ பல வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் எழுத்துத்துறையிலே எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இந்த வேலையைப் பெரிதும் விரும்பியிருந்தேன். ‘தம்பி, இப்பவே வெளிக்கிடுறியாப்பா’ என்று வினவிய எனது தாயின் குரலுக்கு ஒற்றை வார்த்தையில் பதில்கூறிவிட்டு அவசர அவசரமாகப் பயணப்பொதியைத் தயார் செய்தேன். நண்பனொருவனோடு அவனது மோட்டார்


மலைமுழுங்கி

 

 மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காரியங்களை முன்வைத்த காரணப் பெயரும் அல்ல. யாரும் அவரை அப்படிக் கூப்பிடாத போது அவரே தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக்கொள்ளவும் சாதுவான ஆட்களைக் கொஞ்சம் மிரட்டி வைக்கும் நோக்கத்துடன் “என்னை என்னன்னு நெனச்சிக்கிட்டே? எல்லோரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்கோ” இப்படியாகத் தனக்குத்தானே பட்டப் பெயர் கொடுத்துக்கொண்டு ஊரில் தோளை நிமிர்த்தி உலா வரப்போக, அதுவே அவருடைய பட்டப் பெயர்,


வட்டங்களுக்கு வெளியே

 

 ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகதான் இருந்தது. இவன் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கலாம் என்று மனம் பொருமியது. காளியண்ணனுடன் ஆசானைப் பார்க்கப் போகிறேன் என்று வைதேகியிடம் சொன்னவுடன் அவளிடமிருந்து வந்த முதல் வார்த்தையே நிராகரிப்புத்தான். “அவன்கூட போக வேண்டாம். நமக்கு அவனால எதுவுமே நல்லது நடக்கலை. அவன் சகவாசம் எப்பவுமே உங்களுக்கு பிரச்சனைதான். இப்பதான் பிரச்சனை எல்லாம் தீர்ந்து,