கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1020 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீரில் நனைந்த நினைவுகள்

 

 மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம் நினைத்து பார்க்கும் நேரம் .கார்த்திக் அதைத் தான் செய்து கொண்டிருந்தான். உள்ளே ஐ சீயு வில் அவள் மூச்சு மெஷின் தான் சுவாசித்துக் கொண்டிருந்தது.மூடிய அவள் கண்களில் லேசாகக் கண்ணீர்!அந்த மெல்லிய நினைவில் அவனா! அல்லது யாரோ! வெளியில் பெஞ்சின் ஓரத்தில் அவன்.! கண்கள் மூடிக் கொண்டிருந்தாலும் நினைவின் நடுவில் அதே கண்ணீர்! அந்த முதல்


கோணக்கழுத்து சேவல்

 

 இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான் சொல்லுவா. அது உண்மையா இல்லையானெல்லாம் தெரியல… ஆனா இந்த மாதிரி நடக்குறதுக்கு சாத்தியப்படாத இல்ல நம்ம கண்ணுக்குதெரியப்படாம, நடந்துருக்குமோங்குற சந்தேகத்த தாங்கி நிக்கிற சங்கதியெல்லாம் கேட்டா என்னவோ சந்தோசமாதான் இருக்கு. அத சந்தோஷமுன்னு கூட சொல்லிட முடியல. ஏதோ ஒரு ஆராய்ச்சியோட தொடக்கமோன்னு மனசு பரபரங்குது . கொக்கு…நரி… கல்யாணம். அம்மாவுக்கு எங்கிருந்து இது தெரிஞ்சதோ?


மொய்

 

 ” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார் மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து நகர்ந்து விட்டாள்..அவளுக்கும் மூக்குக்கண்ணாடிதான் தெளிவு தரும். “ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “ “ என்ன பெரிய அதிகாரம் போ… இப்போ இங்க


சக மனுஷனுக்காக…

 

 எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம் முன்பு புதிதாக வாங்கின சைக்கிள் அது. இன்னமும் கூட சுத்தமாக வைத்திருந்தான். அதை விலையுயர்ந்த கார் மாதிரியோ, அல்லது மோட்டார் சைக்கிள் மாதிரியோ துடைத்து பராமரிப்பது அவன் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஏறி உட்கார்ந்தால் மெத்தென்று சொகுசாய் இருக்கும். வெண்ணெயில் கத்தி இறங்குகிற மாதிரி சல்லென்று சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடும். அந்த சைக்கிளுக்கு முன்


பூவிடைப்படினும்

 

 ‘தீபா அத்த வந்திருக்குடீ’, அம்மாவின் அழைப்பு. ‘உனக்குத் தான் அழுவாந்தழ அரச்சி எடுத்தாந்தேன் இந்தா வச்சிக்கோ’.’தேங்கா கொழுக்கட்ட சாப்டு அம்மு’ ஒவ்வொருவருக்கும் பாத்துப் பாத்து செய்ய தீபா அத்தையால மட்டும் தான் முடியும். ‘அந்த மனசுக்குத்தான் அவளுக்கு ஒரு கொழந்த கூட இல்லாம உட்டுட்டாரா அண்ணாமலையாரு ‘அம்மாவின் அங்கலாய்ப்புகள்..ஆனா அதுக்கும் அத்த சிரிக்கத்தான் செய்யும். அம்மு, நான், அகி, இந்து எல்லாரும் படிக்கும்போது லீவுக்கு அத்த வீட்டுக்கு ஜம்னாமரத்தூருக்கு போகத்தான் விரும்புவோம். அந்த மலை மேல அத்த,


யட்சி ஆட்டம்

 

 எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி


சத்தியம் தோற்பதில்லை

 

 சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி நாள் அது. புனிதமான தீபாவளி நன்னாளுக்கு முந்தைய தினமென்று நன்றாக ஞாபகமிருக்கிறது அவளுக்கு . அவள் கல்யாண வேள்வி கண்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை . கல்யாணவேள்வியென்பது வெறும் வரட்டுச் சங்கதியல்ல . பரஸ்பரம் ஆணும் பெண்ணும் உடலால் மட்டுமல்ல மனதாலும் உணர்வுகளாலும் ஒன்றுபட்டு அன்பு நிறைவாக வாழ முடியாமல் போனால் , இந்த


மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

 

 `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை அடைத்தது. தலைமாட்டில் இருந்த கொசுவர்த்தியைச் சற்று தூரத்தில் வைத்தாள். ஆனாலும், இறுக்கம் தணியவில்லை. இருள் அறவே பிரியாத காலைப்பொழுதில், பள்ளிக்கூடம் ஆரம்பிக்க முக்கால் மணி இருக்கையில், அவளிடம் கேட்கப்பட்ட கேள்வி அது. இப்போது, இந்த இரவு வேளையில் மீண்டும் முளைத்து, பாடாய் படுத்துகிறது!   “குட் மார்னிங், மீரா!”


தொடர்ந்து படிகளில் ஏறி…

 

 “ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு . அந்த டாக்டருக்கும் மானமில்லாமப் போச்சு . அவனே அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிவைப்பான் போல இருக்கு . “ “ டெளரி ப்ராப்ளம் ஈஸியா ஸால்வாயிடுதுன்னு நினைக்கிறானோ?’ தொடர்ந்து கரகரத்த குரலில் கேட்ட சிரிப்பு என்னுள் சுட்டது . பாஸ்டர்ட்ஸ் ! “ அவன் எங்கே சார் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்


மூன்று நாட்கள்….

 

 கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி… வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில் வழக்கம்போலவே சில குருவிகள் விளையாடிக்கொண்டிருந்தன… இப்படி வெறித்துப்பார்க்கும் அளவிற்கு ஏதும் அதிசயமல்லாம் மரத்தில் நிகழவில்லை… “ஏய் ராஜி, எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்.. காதுல வாங்காத மாதிரியே உக்காந்திருக்க?” இதுவும் வழக்கமான அம்மாவின் அரட்டல்தான்…. “இப்ப உனக்கு என்னம்மா வேணும்?… ஏன் இப்டி கத்துற?” “ஏண்டி மூஞ்சியல்லாம் ஒரு மாதிரி இருக்கு?… கண்ணு முழியல்லாம் அசந்திருக்கு?” கணப்பொழுதில்