கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1072 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்மையின் அவலங்கள்

 

 “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள். “…உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன.


அக்கரையில் ஒரு கிராமம்

 

 ஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரபரப்பு , ஆர்வம், புளகாங்கிதம்,சிலிர்ப்பு எல்லாமே எனக்கும் உண்டானது. திருச்சி விமானநிலையத்திலிருந்து பஸ் ஸ்ராண்டிற்கு டாக்ஸி ஒன்றைப்பிடித்து வந்து இரண்டு மணிநேரம் காவல் இருந்து புதுக்கோட்டை போகும் பஸ்ஸைப் பிடித்தேன். பஸ் பயணமும் மேலும் ஒரு மணிநேரம் இருந்தது. பஸ் ஸ்ராண்ட்டில் மக்களுடன் மாடுகளும் கலந்து நின்றன . இனி வடகாட்டிற்குப் போகவேண்டும்.


கொட்டாவி,,,

 

 அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை எழுதுகிறான், கேட்டால் எங்களது டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடம் என்கிறான், வாங்கிப் பார்த்தால் ஒரே கேள்வி பதில்களை இருபது அல்லது அதற்கு மேற்பட்டு எழுதச் சொல்லியிருப்பார்கள். ஏன் அப்படி எனக்கேட்டால் பதில் டீச்சர்


விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

 

 இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை …. ஆனால்… கிருஷ்ணாவை… பின் தொடரத்தான் வேண்டும்….அவன் இன்று பாபநாசம் செல்கிறான்…. எதற்கு என்று தெரியவில்லை…. தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும்… தெரிந்தால்… கத்துவான்….. கத்தினால் கதை இல்லை….. கிருஷ்ணா… ஓரளவு படித்து சமுதாயத்துக்கு தேவையான ஒரு வேளையில் இருக்கும் சமுதாயச் சிந்தனை உள்ள ஒரு குடிமகன்….. இங்கு தான் எனக்கு கொஞ்சம் சந்தேகம்….. குடிமகன்….. இந்த வார்த்தையில் கடைசி


முள்ளும் செருப்பும்

 

 “சில மனிதர்களும் சில நிகழ்வுகளுமே போதும் ஒரு மனிதனின் பாதையை மாற்றவும் தொடங்கவும்” அப்பா அப்பா, என்னடா, லேய்ஷ்பா. வெளிய வந்தா இத வாங்கி கொடு அத வாங்கி கொடுனு கேட்கக் கூடாதுனு சொல்லிருக்கன்ல, ஏய் அவன ஏண்டி திட்ர. என் மகன் மகனதிகாரத்தில் கேட்க நான் அவளின் கண்டிப்பையும் மீறி, அண்ணே ஒரு லேய்ஸ் தாங்க ,10 ரூவா சார், 5 ரூவாதான்பா, 10 ரூவா சார் வேணுமா வேணாமா. ஷ்டேசன்லயும் எல்லாமே டபுள்தானா தியேட்டர்


அவன் அவள்…

 

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை--ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’ என்ற தலைப்பில், கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு சி.க. இதழில் பிரசுரமாகியது; அட்டைப்படக்கதையாக என்று ஞாபகம். இங்கு நான் பதிவது எடிட் செய்யப்படாத முழுக்கதை.–ரமணி) ஹைதராபாத் நாம்பள்ளி ஸ்டேஷனில் அவளை நிம்மதியாக வழியனுப்பிவிட்டு அவன் வெளியில் வந்தபோது மழை மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது… என்ன கீத், என்ன தேடறே? துணியெல்லாம் இறைஞ்சு கிடக்கு? ஒண்ணும் தேடல. நான் ஊருக்குக்


நண்பன்

 

 1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்: திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். “டேய்…வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா…¬ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா வேணும்…தைலம்மை தியேட்டர்ல வரப்போகுது. நான் முதல்நாளே போய்டுவேம்பா…” என்றான் வடிவேல். “ச்சே…நம்ம ஊர்ல ஏ/சி தியேட்டர் இல்லடா. இருக்குற தியேட்டர்லயும் ஏசி மிசின் ரிப்பேராயிடுச்சாம். இங்க பாரேன். தஞ்சாவூர் விஜயா ஏ/சி,


மோகம்

 

 அப்போதுதான் விசா வந்திருந்தது. அமெரிக்காவில் படிக்கப்போகிறோம்! கண்ணனுக்குப் பூரிப்பு தாங்கவில்லை. கூடவே ஓர் உறுத்தல். மேற்படிப்புக்காகப் பல வருடங்கள் பிரிந்து போகும் மகனுக்காக, தமிழ், இந்திப் படங்களில் வருவதுபோல, அவனுடைய பெற்றோர் விமான நிலையத்துக்கு வந்து மாலை அணிவித்து வழி அனுப்பாவிட்டால் போகிறது, இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாமலாவது இருக்கலாமே என்ற அலுப்பும் கோபமும் அவனை அலைக்கழைத்தன. அவனுடைய அதிர்ஷ்டத்தை புகழ்ந்து பேசுவதைப்போல நடித்தாலும், தெரிந்தவர்களெல்லாம் உள்ளூரப் பொறாமைப்படுவது அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. அப்பாவுக்கு மட்டும்


புரட்சி விடியல்

 

 பசுமை நிறைந்த நிலங்களையும் ,கிராமங்களையும் சந்தோஷமாய் பார்த்தபடி அவைகளை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு ,டைரியில் நோட் செய்தபடி டாட்டா சுமோவில் பொள்ளாச்சி அருகில் உள்ள தாத்தா பாட்டியின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மீடியா ஸ்டடீசில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் மாணவி சுமன் . கார் வேகமாய் சென்றுக்கொண்டிருந்தது.சாலைக்கு இருபக்கமும் பச்சை பட்டு கம்பளி விரித்து வரவேற்று கொண்டிருந்தாள் இயற்க்கை அன்னை .”’டிரைவர் .!கொஞ்சம் வண்டியை நிறுத்துங்களேன்.”என்றாள்”சுமன் .எதுக்கும்மா..?ஸ்பீடை குறைத்தபடி கேட்டார் வயதான டிரைவர் ரங்கண்ணா.”அங்கே பாருங்க


மாற்றம்

 

 தனது சகோதரியின் திருமண விடயங்கள் பற்றிய செய்தியை தன் நண்பர்களுக்கு பேஸ்புக்கில் அறிவித்துவிட்டு சந்தோஷமாக வந்த முரளிக்கு தூரத்தில் மூச்சிரைக்க ஓடிவரும் சிறுவனின் தோற்றம் மனதை என்னவோ செய்வது போல் இருந்தது. அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று கணிப்பிட்டுக் கொள்வதற்கு முதல் அந்தச் சிறுவன் முரளியை அண்மித்துவிட்டான். ‘மஹத்தியா வாசனா சம்பத் ஒன்டு வாங்குங்கோ’ ‘வேண்டாம் போ’ ‘அனே மாத்தியா. காலைலருந்து ஒன்னும் சாப்பிடலை. அம்மாவும் குட்டித்தங்கச்சியும் வீட்டில பசியில இருக்காங்க. புண்ணியம் கிடைக்கும்’ ‘உன்