கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1072 கதைகள் கிடைத்துள்ளன.

நாஸர்

 

 வடக்கு லண்டன்;: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன. வாயு பகவான் வேறு, தன்பாட்டுக்கு எகிறிக் குதித்து மழைநீரை வீசியெறிந்து உடம்பை நனைத்தான். ‘ஹலோ’ குடையைச சற்று உயர்த்திக் குரல் வந்த திசையை நோக்கினால்.தனது முக்காட்டை உயர்த்தியபடி பக்கத்து வீட்டுப் பரிதா அஹமட் நின்று கொண்டிருந்தாள். உடல் நனைந்த தெப்பம். முக்காடு நனைந்த முகத்தில் பன்னீர் தெளித்தமாதிரி மழைநீர் முத்துக்கள் உருண்டன. “ஹலோ பரீதா”நான் நடந்தேன்,


கண்மணி

 

 “ப்ளீஸ்மா. எனக்காக” என்றாள். “”ம்ம்” என்றேன். அவள் கை என் கைக்குள்ளும், என் கை அவள் கைக்குள்ளும் மாறிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் உருக்குலைந்து போனாலும் உள்ளங்கைகளுக்குள் அவள் பிடியின் வலிமை நாற்பது ஆண்டுகளாக மாறவில்லை. “”சாப்பிடுறியா” என்றேன். “”ப்ச். வேண்டாம்” கண்களைத் திறக்காமலேயே. பிடியை இறுக்கி “”ஏன்” என்றேன். மூடிய இமைகள் மெல்ல நீரை விடுவித்து கண்கள் ஓரம் தேக்கியது. கண்களைத் திறந்து மறுபடியும் “”ப்ளீஸ்மா” என்றாள். கண்களின் ஓரம். தேங்கியிருந்த நீர் மீண்டும் அந்தப்


வீட்டுப்புழுவல்ல கூட்டுப்புழுவல்ல…!

 

 காலையில் எழும்போதே நல்ல தலைவலி. ‘இன்று வேலைகள் அதிகம். எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்ற அயர்ச்சி வந்தது. “என்ன ராதா… எழுந்திரிக்கலையா?” என்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கேட்டான் விக்ரம். “இல்ல! இன்னைக்கு என்னவோ ஒரே தலைவலியா இருக்கு. ஆனா, ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு ‘பிளானை’ முடிச்சாகμம். நேத்தே சொல்லிட்டாங்க.” விக்ரம் ஒரு ‘எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்’. ஒரு பெரிய ‘கம்பெனி’யில் வேலை செல்கிறான். இரண்டு தங்கைகளுடன் பிறந்தவன். ராதா அவன் மனைவி. அவள் ஒரு ‘ஆர்க்கிடெக்ட்’. கட்டுமான


மனிதம்

 

 இரவு மணி பதினொன்றரை. குர்லா-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில் சின்ன சின்ன ரயில் நிலையங்களைக் கடந்து அதி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் இருந்த பயணிகள் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். திருப்பத்தூருக்கும் சேலத்துக்கும் நடுவே சாமல்பட்டி ரயில் நிலையம் அருகில் ஏற்கனவே தடம் புரண்டிருந்த கூட்ஸ் வேகன்களின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோத, இஞ்சினைத் தொடர்ந்து பின்னால் வந்த பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக பெரிய சத்தத்துடன் மோதி தடம் புரண்டு உருண்டு விழுந்தன. எங்கும் பயணிகளின் மரண


அவுலவுலே… அவுலவுலே…

 

 “”அவுலவுலே…” “”அவுலவுலே…..” அந்த வாரத்து இதழில் ஆயன் கடிதங்கள் நூல் பற்றிய மதிப்புரையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த சந்திரனின் கவனத்தை அந்தக் குரல் சற்றே இழுத்தது. இருந்தாலும் படிக்கும் விஷயத்தில் இருந்த ஈர்ப்பினால் சந்திரன் மீண்டும் படிப்பில் ஆழ்ந்து போனான். கொஞ்ச நேரம் சென்றிருக்கும். “”அவுலவுலே……” சந்திரன் மீண்டும் நனவுலகு வந்தான். படிப்பதை சற்று நிறுத்திக் கொண்டு தன்னைத் திசை திருப்பிய அந்தக் குரலுக்காகக் காத்திருந்தான். ஒவ்வொரு நாளும் அந்தத் தெருவில் எத்தனையோ பேர் எதையெதையோ கூவிக்


நெருப்பு நாக்குகள்

 

 வெகுநாட்களுக்குப் பிறகு… அதிகாலையில் மெதுவாக எழுந்து விடியலின் அழகை ரசிக்க நேரம் கிடைத்திருக்கிறது ராதாவுக்கு. மெல்ல உடலை நெளித்து சோம்பல் முறித்தபடி வந்து ‘பால்கனி’ கதவைத் திறந்தாள். மறுகணம் முகத்தில் பட்ட அந்தக் குளிர்ந்த காற்று ‘ஏ.சி.’ வைத்தாலும் ஈடாகாது என்பதை உணர்த்தியது. அரை இருளில் லேசாக வெளிச்சம் வரத் தொடங்கும் தருணத்தில் பறவைகள் இரைத் தேட கிளம்பின. அவற்றின் குரலும், ஒன்றிரண்டு நாய்கள்… நடந்து போவோர் வருவோரைப் பார்த்து குரைத்த வண்ணம் அங்கும் இங்கும் ஓடியதை


தேன்மொழியாள்

 

 வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,”தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க…” என்று சொல்லிவிட்டு அவர் இருக்கைக்குச் சென்றார். முதலாளியின் அறையில் அவர் இல்லை.மேசையின் மீது கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். “என்னம்மா அவசரம்?…” “மாப்பிள்ளை தம்பி வந்துருக்குடி.முக்கியமான விஷயம்.ஆபீஸ்ல சொல்லிட்டு உடனே வா.” இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கு.முக்கியமா சில பில் தயார் செஞ்சு அனுப்பியே ஆகணும்…முடிஞ்சதும் நூலகத்துக்குப் போகாம நேரே வீட்டுக்கு வந்துடுறேன்.அவருக்கு வேற ஏதாவது அவசர வேலை


காலச்சிமிழ்

 

 பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின் பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும், தொய்வானதுமான ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறு சிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும், குதிரைகளில் சவாரிசெய்பவர்களுக்குமாக உள்ளன. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக்-ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்து முகாமிடுவர், கிறில்


பூ பூக்கும் ஓசை

 

 கதையைப் பற்றிய குறிப்பு: அவ்வப்போது நாளிதழ்களில் மணப்பெண் மாயமானதால் அந்தப் பெண்ணின் தங்கையோ வேறு யாருமோ திடீர் மணமகளாகும் செய்தி வெளிவரும். அப்போது அந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கோணத்தில் யோசித்தபோது உருவானதுதான் இந்தக் கதை. தங்கஊசிதான்…அதுக்காக கண்ணுல குத்திக்க முடியுமா என்ற பழமொழி பொருந்தும் வகையில்தான் இந்தக் கதையின் முடிவை ஏற்கனவே அமைத்திருந்தேன். 2005 முன்பு எழுதி, 2006 முன்பு தினத்தந்தி குடும்பமலரில் பிரசுரமான கதை இது. சமீபத்தில் காதல் உருவாகும் கணம்


சில நேரங்களில் சில கடவுள்கள்

 

 ஆரது கதவடியிலை நிக்கிறது? சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா? நான் தான் மரகதம், நீங்கள் ஆர், என்ன விஷயமா வந்தியள்? உங்களைக் காணவேண்டுமென்று வந்தேன். பொறுங்கோ, நாங்கள் இப்ப கை முட்ட அலுவலாய் இருக்கிறம். காலமை வெள்ளெனச் சந்திக்க வழக்கத்திலை நாங்கள் ஒருதருக்கும் நேரம் கொடுக்கிறதில்லை. என்ன விஷயமா வந்தனீங்கள் எண்டு சுருக்கமாய்ச் சொன்னால் நல்லது. இங்கேயிருக்கிற பிள்ளைகளைப் பார்க்கலாமென்று வந்தேன். ரண்டு நாளைக்கு முந்தியும் உங்களைப்போல மூண்டு நாலு பேர் சும்மா