கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1072 கதைகள் கிடைத்துள்ளன.

கங்கையின் மறு பக்கம்

 

 பாண் மீது பூசிச் சாப்பிடுகின்ற பட்டரைப் பொருளாக வைத்துக் கதை சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையின் பொருட்டே நான் உங்களுக்காக எழுத்தில் வடித்திருக்கின்ற இந்தக் கதையும் அறிவுக் கண் திறந்து உங்கள் பார்வைக்கு வருகின்றது பத்மாவுக்குக் கல்யாணக் கனவுகள் பரவசமூட்டும் இன்ப நினைவலைகளாய் அவள் மனமெங்கும் வியாபித்துப் பொங்கிச் சரிகின்ற நேரம் அவளுக்குக் கல்யாண எழுத்து நடந்து முடிந்த பிற்பாடே இந்தக் கனவு மயக்கம் இப்படிக் கனவுகள் வருவதற்குக் காரண புருஷனாய் வந்து வாய்த்த முன்பின் அறிமுகமில்லாத


மேதகு வேலுப்போடி

 

 ( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை கடல்நாச்சியம்மன் சடங்குக்கு வந்திருந்த ஊர்மக்கள் அலட்சியமாகப்பார்த்தார்கள். வாயு பகவான் அசையாமல் மௌனமானான். கடல்நாச்சியம்மனின் கைகள் என மக்களால் மதிக்கப்படும் கடல் அலைகள் பொங்ஙியெழுந்து ஆரவாரித்து இந்த ஊரைத் தன் மந்திர தந்திரத்தால் அடக்கி வைத்திருந்த பூசாரி வேலுப்போடி, இன்றைய சடங்கின் போது ‘உரு’ வந்த தெய்வங்களிடம் அடி படுவதும் உதை வாங்குவதும் தர்மமான விடயம்தான் என்று


இரண்டு சம்பவங்கள்

 

 சம்பவம் ஒன்று—இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்—ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு—முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம். மலையின் உச்சியில் இருக்கும் ‘ஜே.பி’


நிலங்கீழ்வீடு

 

 எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத்


செல்லி அல்லது மணிராசு

 

 1868 ஆம் ஆண்டு. இலங்கையின் மலையகம் எங்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை செழித்துப் பூத்து காய்த்து கொக்கரித்து கோலோச்சிக் கொண்டிருந்தது. உலக சந்தையில் கோப்பியின் விலை மிக உச்சத்தில் உயர்ந்திருந்ததால் அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுனராக பதவி வகித்த ஹெர்கியூலிஸ் ரொபின்சன் மிகவும் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தார். அவ்வருடம் தமது நிர்வாகத்தின் கீழிருந்த சிலோன் என்ற பிரிட்டிஷ் காலனித்துவ நாட்டிலிருந்தே அதிக அந்நியச் செலாவணி வருமானம் பெறப்பட்டிருப்பதாக ஆளுனர் தம் அதிகாரிகளிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டார். கோப்பித் தோட்ட


அவஸ்தை

 

 இட்லி இவ்வளவு சூடா வைச்சா எப்படிம்மா சாப்பிடறது, எனக்கு நேரமாச்சு காலேஜ் பஸ் வந்திடும் நான் கிளம்பறேன். ஏன் ஸ்ரீ, இட்லி ஆற ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா? ஒரு மணி நேரம் குளிச்சப்ப தெரியலையா கல்லூரிக்கு நேரமாகும்னு… சாப்பிடறதே ரெண்டு இட்லி, அதை ஒழுங்கா சாப்பிட்டு போ. நான் ஒன்னும் ஒரு மணிநேரம் குளிக்கலை….. நீங்க முன்னாடியே சுட்டு வைக்க வேண்டியதுதானே. போதும் வாயாடினது, ‘இந்தா….. வாயை திற, நீ கடிகாரம் கட்டிட்டு, பேக்கை எடுத்திட்டு


விளக்கின் இருள்

 

 இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன. “I buy houses, gas or no gas, call Tim.” – கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும்.


எங்கிருந்தோ வந்தாள்!

 

 சுந்தரும் மீனாவும் சாங்கி ஏர் போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். அமெரிக்காவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சிங்கப்பூர் திரும்புகிறேன். மிகவும் களைப்பாக இருந்தது. …. எனது கணவர் மரச்சமான்கள் செய்யும் பிசினசில் மிகவும் பிசியாக இருப்பவர். மகன் சுந்தர் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் டைரக்டராக இருப்பவன்; எப்போதும் கணினியும் கைத் தொலைபேசியுமாக இருப்பவன். மருமகள் மீனா, மனித வள மேம்பாட்டுத் துறையில் முதன்மை அதிகாரி….இப்படிக் குடும்பத்தில் எல்லோருமே, காலில் சக்கரம் கட்டாத


எமிலி மெடில்டா

 

 முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்…. அது ஒரு சனிக்கிழமை…. கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்…


முளைவிட்ட விதை

 

 மொத்தமாக இன்றே கருமேகங்களை சுத்தமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருந்த வானம். கருமை நிறத்தை குறைத்தே தீருவேன் என்று தீவிரவாதம் செய்து கொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியால் , மழைநீரில் குளித்த தார்ரோடு பளிங்கு போல் மின்னிக்கொண்டிருந்தது. விடாது பெய்து கொண்டிருக்கும் மழைநீர் தற்காலிக கண்ணாடியாக மாறி பின்னிருக்கும் புகழ்பெற்ற பிரெசிடென்சி கல்லூரியையும், மரங்களையும், மின் கம்பத்தையும், அதன் அருகில் உள்ள ஓய்விருக்கையையும் தரையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ‘மழையின் வேகத்தில் கலைந்து கலைந்து ஆடிக்கொண்டிருந்த பிம்பங்களின் நடுவில்