கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1072 கதைகள் கிடைத்துள்ளன.

நிதர்சனங்கள் நிர்வாணமானால்…

 

 தாயைப் பிரிந்து செல்லும் குழந்தை போல், தயங்கி தயங்கி மேல்திசை நோக்கி சென்று கொண்டிருந்தான் சூரியன். அவனது தயக்கத்திற்கு எந்தவித பலனும் இல்லையென்பதை உணர்த்துவது போல், திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள், அவனை முழுவதும் மறைத்தன. செய்வதறியாது திகைத்தாலும், சில நாட்களாக இப்படித் தானே நடக்கிறது, என்ற உணர்வில் கடமையை செய்யும் கண்ணியத்தோடு ஆதவனும் மறைந்து கொண்டான். சில வினாடிகளில் கருமேகங்கள் தாங்கள் சுமந்து கொண்டிருந்த நீரை மழையாகப் பிரசவித்தன. மழையின் தூரலைக் கண்டதுமே, பின்பக்கம் சென்ற யமுனா,


நிஜமான கற்பனைக் காதல்

 

 1 <<காதல் என்பது தன்னுயிரை வாடகைக்கு அமர்த்துவது, இன்னோர் உடலில்>> “ப்ப்ப்ப்பா. என்னமா எழுதறாரு!! அவரோட கவிதைகள் படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இல்லையேன்னு ஏக்கமா இருக்குடி” “நீ வேற, அவரு கவிதைகள விட கதைகள் இன்னும் சூப்பர் தெரியுமா? நீ கவிதய விட்டு வெளிய வரமாட்ற” “காதல் பத்தி சொல்றதுக்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கான்னு அவர் கவிதைகள் படிக்கும்போதுதான்டி தெரியுது. அந்த விஷய ஞானத்தை காட்டலாம்னா எனக்கு காதலி இல்லையே? வேணும்னா ரமேஷ்கிட்ட பர்மிஷன் வாங்கறேன்,


ராஜதந்திரம்

 

 கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏன் அவனை ஒரு அரக்கன் என்று கூட அழைக்கலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்படப்போவதில்லை. மறதி ஒன்றே மக்களின் மிகப்பெரிய பலவீனம். மறந்துவிடுவார்கள். இதையும். இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்துகொண்டிருந்த துளிகளில் ஒன்று, அவன் வாய் மறைக்கும் அடர் மீசையைத் தாண்டி உதட்டில் விழுந்தது. நிமிர்ந்து வானம் பார்த்தான். வானத்தை கருமேகமது மூடியதால் கடுங்கோபம் கொண்டு


விலை

 

 பசிக்கு விலை.. அறிவுக்கு விலை.. அன்புக்கு விலை… ஆசைக்கு விலை… உடைக்கு விலை… உணர்வுக்கு விலை…உண்மைக்கு விலை.. உறவுக்கு விலை… என எல்லாத்துக்கும் விலை கொடுத்து அல்லது விலைக்கு வாங்கி, கடைசியில் நம்மையே நாம் விலையாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகிறோமா..?? அல்லது அந்த கட்டாயத்திற்குள் நாமே நுழைந்து கொள்கிறோமா…???.. வாழ்வின் விடை தெரியாத வினாக்கள் எண்ணற்றவை. அம்மா…!! நான் போயிட்டு வரேன்…..” – துளசி. “ இருடாமா..!! சாப்டுட்டுப் போ…!! “ என்றவாறே, இட்லியை பிட்டு


அன்புதான் இன்ப ஊற்று !

 

 அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர் வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து விட்டான். அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர் பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக் கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை. புத்தசாமியார்களும் அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம், உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். அன்பு வடிவான புத்த பகவானும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூறியதையும், அதனைக் கடைபிடித்தால், நாட்டில் அமைதிநிலை ஏற்படும் என்றும் கூறினார்கள். அவர் கூறியதெல்லாம் அசோக


Ms.ஜான் நேதன்

 

 ‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த மேசையிலிருந்த பீட்டர் சூயிங்கத்தைக் குதப்பிக் கொண்டு கேட்டான். ~~என்ன இரண்டு நாள் சிக் லீவ் போட்டதற்கு இரண்டு கிழமை சம்பளத்தை வெட்டியிருக்கின்றார்கள். பார்க்க எரிச்சலாக இருக்கிறது’ ~~யாரும் வேலை தெரியாத பேர்ஸனல் ஆபிசர் புதிதாக வந்திருப்பார்கள். எங்களின் சம்பளத்தில் கை வைத்துப் பிராணனை வாங்குகின்றார்கள்’ பீட்டர் வழக்கம் போல ஒரு விமர்சனத்தைக் கொடுக்க, பீட்டர் ஏதோ


பெரிய மனுஷி

 

 “ஹலோ..மூர்த்தி..?” “டே., கார்த்திகா வயசுக்கு வந்துட்டா டா..!” “எப்ப கா..??” “இன்னைக்கு மதியம், school-க்கு போன பொன்னு, வயத்த புடிச்சுட்டு வந்துட்டா டா, எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, வூட்டுல இருக்க கிளவி வேற என்னென்னமோ சொல்லுது” என்று அழுகாத குறையுடன் பேசினாள் சசிகலா. தனது சீருடையில் INK பட்டதால் வந்த தகராறில் சக மாணவி வயிற்றில் அடித்ததும், சுருண்டு விழுந்தாள் கார்த்திகா, “இதெல்லாம் பெரியவங்க வஷயம், சீக்கிரம் அவ அம்மா கிட்ட விட்டுட்டு வாங்க”


நேற்றைய நிழல்

 

 “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தொ¢விப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார். “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம். அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!” “என்னாவாம்?” “யாருக்குப் புரியுது! ” அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு கோபம் வந்தது. அதற்குப்


நெடுஞ்சாலையில் ஒரு…

 

 சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர் இருக்கிறது. இரைச்சலுடன் போகும் பெரிய லாரிகளின், கண்டெய்னர் வாகனங்களின், கார்களின், சத்தங்களுக்கிடையில் சிலுசிலுவென்று பனிச்சாரலுடன் வீசும் காற்றினால் குளிர் கவ்வுகிறது. இங்கிருந்து வலப்புறம் பிரிந்து செல்லும் மண்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையும், மலை சார்ந்த பசுமையும் சூழ்ந்த ஹள்ளியோ, பள்ளியோ கிராமம் இருப்பதை இங்கிருந்தே பார்க்கமுடிகிறது. கட்டடங்கள் புகைபடிந்து தெரிகின்றன…இந்த இடத்தில் விட்டுவிட்டு பறக்கும்


உடலொன்றே உடமையா!

 

 எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன் மற்றவர்கள் ஒரு மாதிரிக் மற்றவர்கள் பேச்சுக்கு இடம்கொடுக்கவேண்டும்?” ‘மற்றவர்கள் கதைப்பதைப் பற்றி இவன் கதைக்கிறான். இவர் யார் மற்றவர்கள் இல்லாமல்? என் மனைவி சுசீலாவைப் பற்றி என்னிடம் கதைக்கும் போது இவன் ‘மற்றவர்கள்’ இல்லாமல் யாராகி விட்டான்?’ தியாகராஜன் மௌனமாக மேலெழும்பிக் கொண்டிருக்கும் ‘லிப்டை’ ஏறிட்டுப் பார்க்கிறான். 10 -11-12 இலக்கங்கள் மஞ்சள் லைட்டில் கண்ணடித்து