கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1020 கதைகள் கிடைத்துள்ளன.

அன்றில்

 

 எனக்கு தெரியும் அப்பொழுதே” என்றபடி தனது பொருட்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினாள் நந்தினி. அவள் பின்னாலேயே சென்று கெஞ்சத் துவங்கினாள் சைந்தவி. “கொஞ்சம் பொறு. எல்லாமும் நல்ல படியாகப் போய் கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன விஷயம். இதைக் கையாள்வது சுலபம். நான் பார்த்துக்கொள்கிறேன். சொன்னால் கேள். ” சொன்ன படியே நந்தினியின் கையிலிருந்த ட்ராவல் பையை வாங்கிக்கொண்டு மறுபடியும் படிகளில் ஏறி அறைக்குள் வந்தாள் சைந்தவி. இந்த மாதிரி நடப்பது நந்தினிக்குப் புதிதல்ல. ஆகையினால் சைந்தவிக்கும்


உயர்வு நவிற்சி அணி

 

 ரகுராம சுப்ரமணியனை நான் சந்தித்தது திட்டமிட்ட சதி என்று தான் சொல்லமுடியும். யார் திட்டமிட்டது என்றால், எனது டீம் லீடர் நடேஷ். சென்ற வெள்ளிக்கிழமை என்னை அழைத்த போது ஒரு டீபகிங் இல் மூழ்கி இருந்தேன். “ரொம்ப உளைக்காத செல்லம்…என் காபினுக்கு வர்றே. உண்ட்ட பேசனும் எனுக்கு” நடேஷ் தஞ்சாவூர் பூர்வீகம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் அஹமதாபாத் என்பதால் தமிழ் திணறித் தான் வரும் .நாம் சிரித்தால் கண்டுபிடித்து விடுவான். அதனால் அந்தத் தமிழை இயல்பாகத் தான்


நினைவுத் தீண்டல்கள்

 

 மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடும் தற்போதைய நகர (நரக) வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது குழந்தைப்பருவத்தின் நினைவுகள் நெஞ்சைத் தழுவிச்செல்லும்போது இனம்புரியாத ஏக்கம் உருவாகிறது, அந்த வாழ்க்கையே தொடர்ந்திருக்கலாமோ என்று. நானொன்றும் நகரத்தின் அழுத்தமான வாழ்க்கையில் என்னை வெகுவாக அமிழ்த்திக் கொண்டவனல்ல. ம்ஹும்…அதெல்லாம் அந்தக்காலம் என்று பெருமூச்சு விட்டுப் பேச வயதில் பழுத்த பழமும் அல்ல. இருந்தாலும் என்னுடைய குழந்தைப்பருவம் எனக்குத் தந்து சென்ற நினைவுகள் இன்றும் ஆழ்நெஞ்சில் சுகமான வடுக்களாய் நிறைந்திருக்கின்றன. அவ்வப்போது அவை மேல்மனத்திற்கு


புன்னகைத்தார் பிள்ளையார்

 

 பிள்ளையாருக்கும் பர்வதத்திற்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து முடிந்த இந்த ஏழு வருட காலத்தில் கோயிலுக்கு அடிக்கடி வந்து மனதாரப் பிள்ளையாரைத் திட்டி விட்டுப் போவது அவள் வழக்கம். ‘இனி இந்த கோயில் வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்று சவால் விட்டுப் போவாள். ஆனால் மறுபடி வருவாள். திருமணமாகிப் பல வருடங்கள் கழிந்து அவளுக்குப் பிறந்த ஒரே மகன் சரவணன். சுறுசுறுப்பாக, புத்திசாலியாக , ஆஜானுபாகுவாக இருந்து அவளைப் பெருமிதப்படுத்திய மகன். ஒரு


இலையுதிர்காலம்

 

 (இச்சிறுகதை தினமலர்-வாரமலர் போட்டியில் பரிசு பெற்றது) பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா. “”இல்லை… அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்!” “”இதப்பாருங்க… மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்…” அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய்


அந்த ஃபாரினர் தான்!

 

 “சின்ன பக், யூனிட் டெஸ்ட்டிங்ல‌ எப்படி மிஸ் பண்ணிங்க ? இன்டக்ரேஷன் டெஸ்ட் வரைக்கும் வந்தாச்சு. டெஸ்ட் ரிசல்ட்ஸ் செக் பண்ணனும் எடுத்துகிட்டு வாங்க…..” என்று உடுக்கை அடித்தாள் டெக் லீட் வர்ஷினி. “ஹேய் இந்த சுடிதார் கலர் நல்லா இருக்கு. எப்ப வாங்கின ?” என்று கேட்டுக் கொண்டிருந்த சக டெவலப்பர் யாழினியிடம், “கொஞ்சம் பொறு, அச்சச்சோ குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது, இரு, அதுக்கு தீனி போட்டுட்டு வர்றேன்” என்று ஓடினாள் அருள்மொழி. “இன்னும் கொஞ்ச


பரவால்ல விடுங்க பாஸூ…

 

 அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அலுவ‌ல‌க‌ மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை ) அதே தான் ! ‘இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்’ என்று நினைத்திருந்தான் மூர்த்தி. வெள்ளைக்கார‌ர்க‌ள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்ட‌ன‌ர். மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் “அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம்


மதியழகனும் பூதமும்

 

 முன்னொரு காலத்தில் வீரபாண்டியபுரம் என்ற நாட்டில் மதியழகன் என்ற இளைஞன் இருந்தான். உடல் அளவில் பலசாலி இல்லை என்றாலும் புத்திசாலியான அவன் வேடிக்கையானவன், வினோதமான செயல்களை செய்வான். அவன் என்ன செய்கிறான் என்பது நிறைய பேருக்கு புரியாது. அந்த ஊரின் எல்லையில் இருந்த அடர்ந்த காட்டில் திடிரென்று ஒரு பெரிய பூதம் வந்தது, அது நரமாமிசம் சாப்பிடும் பூதம், அங்கே காட்டுவழியாக செல்பவர்களை பிடித்து சாப்பிடத் தொடங்கியது. அப்படி யாரும் கிடைக்கவில்லை என்றால் ஊரின் எல்லைக்குள் இருக்கும்


தரக்குறைவு

 

 ‘இதுக்கோசரமா ம்மே இருட்லே தனியா வந்து ரயில் ரோட் மேல குந்திக்கினு அய்வுறே… ‘சீ! அவங்கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிக்கினு எந்திரிம்மே…” ஐந்தாறு பிரிவு தண்டவாளங்கள் நிறைந்த அந்த அகலமான ரயில்வே லைன் மீது, இருட்டில் கப்பிக் கல் குவியலின் மீது அமர்ந்து அழுதுகொண்டிருந்த அவள், இந்தக் குரலையும் இதற்குரியவனையும் எதிர்பாராதவளாய், இவனைக் கண்டு திகைத்தவள் போன்றும், அஞ்சியவள் போன்றும் பதைத்தெழுந்து நின்றாள். அப்போது கனைப்புக் குரலை முழக்கியவாறு சடசடத்து ஓடிவந்த மின்சார ரயிலின் வெளிச்சத்தில், அடிபட்டு உதடுகள்


கொக்கரகோ

 

 ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே! “வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான். “இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?” என்று நான் வினவினேன். “அவர் என்னைப் பார்க்காமல்