கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1147 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் என் மனைவி

 

 திரைகட லோடி திரவியம் தேடிய தமிழர் பரம்பரையில் வந்தது முத்து ‘கிராண் டிரங்க்’ ஏறி தில்லியை வந்தடைந்தான். பல்கலைக் கழக பட்டமா பெற்றிருக்கிறான் அவன், வேலை கிடைக்காமல் போக? இரண்டு கைகள் இருந்தன; உறுதி இருந்தது மனதில். வந்ததும் வேலை கிடைத்து விட்டது. மத்திய சர்க்கார் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஐந்தாறு உத்தியோகஸ்தர்களுடைய வீட்டையும், பாத்திரங்களையும் ‘விளங்க’ வைப்பதுதான் அந்த வேலை… மாதம் நூற்றிருபது ரூபாய் வந்தது. சேலத்தில் இடைப்பாடியைச் சேர்ந்த அவனுக்கு ஊரில் பெரிய


புவிராஜசிங்கி

 

 தேதி19 – வெள்ளி. சென்னை வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத் தட்டியதும் அறையில் ஒளி பரவியது. கைப்பேசியைப் பார்த்தான். அஞ்சுவிடமிருந்து அழைப்பு. “தூங்கிட்டு இருக்கேனே, படுக்கறதுக்கு முன்னாடிதானே பேசினேன். என்ன அவசரம்?” “இருக்கு. உன் தூக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைக்கப்போறே.” வலி நிவாரணத்திற்குச் சாப்பிட்ட மாத்திரையின் போதையும் விண்பயணத்தின் களைப்பும் கலந்து கசங்கிக் கிடந்தவனின் மனத்தினுள் மெல்லிய அச்சம் தோன்றி


பூங்காற்று புதிரானது

 

 பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல்


சிறை

 

 அன்று – கௌதம முனிவனின் குடிலில் பொழுது புலர்வதற்கு முன், ஏற்பட்ட விபத்து – இன்று பாகீரதிக்கு ஏற்பட்டுவிட்டது. நேரமும் காலமும் மனிதர்களும் தான் வேறு… வேறு… சம்பவம் ஒன்றுதான். அகலிகையைப் போல, தன் கணவனுக்கும் அந்நிய புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத மனுஷி இல்லை பாகீரதி. “கடங்கார… பாவி… நீ நாசமா போகப் போற…” — என்று அவள் மனதார சபிக்கிறாள். இனி மேல் சபித்துப் பிரயோசனமில்லை . சபிப்பதனால் பாகீரதியின் கற்பு திரும்பி வந்து விடவா


அற்றது பற்றெனில்

 

 ரயில் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘ஸ்டேஷனு’க்குள் தயங்கித் தயங்கிச்சென்றது, தமது மனநிலையைச் சுட்டிக் காட்டுவது போல் தோன்றிற்று. சபேசனுக்கு. கும்பகோணம் வந்துவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் சாரங்கபாணி சன்னதித் தெருவுக்குச் சென்று…. மூன்று தலைமுறையாக அவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டை அடைந்து விடலாம். இந்தத் தலைமுறையில், அவருக்கு வீட்டின் மீது வாரிசு உரிமையிருந்ததே தவிர, அநுபவ உரிமை இல்லை. ஐம்பத்தெட்டு வயதில் மத்திய அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து சங்கரய்யரும் அவர் மனைவி நீலாம்பிகை


தண்டனை

 

 குறள்: ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்‘ பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் அதில் ஒலிபரப்பான திரைப்படப் பாடல் களும் நாடகங்களும் தான் பாமர ரசிகர்களின் பிரதான பொழுது போக்குகளாக இருந்தன. அக்கால கட்டத்தில் வானொலியில் கோலோச்சிய ஒருசில நாடக நடிகர்களுள் பாலா பிரபல்யமானவன். பிரபல்யம்


அந்த ஒரு நாள்

 

 “சார், கொஞ்சம் wait பண்ணுங்க. வயசானவங்களுக்கு மொதல்ல பண்ணிடறோம். காலைல இருந்து சாப்பிடாம வந்துருப்பாங்க. சுகர் பேஷண்ட்ஸ் வேற. அதுக்கப்பறம் உங்களுக்கு டெஸ்ட் பண்ணறோம். ஓகே-வா?” என அந்த மலையாள நர்ஸ் சொன்னபோது மறுப்பேதும் சொல்ல மனம் வரவில்லை. அழகிகள் என்ன சொன்னாலும் அதை மறுப்பேதுமின்றி கேட்டுக்கொள்கிற இயல்புடையவன் என்பதால். இன்னும் ஒரு மாதத்தில் அந்நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அதன் பொருட்டு அவர்கள் தந்த மருத்துவமனைப் பட்டியலில் இருக்கும் ஏதோவொன்றில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமாதலால் காலை


செம்பருத்தி

 

 அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். அம்மா வந்த வேளை என்னவள் மஞ்சு கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்தாள். எனவே இனியும் போர்வைக்குள் சுகம் காணமுடியாது என்று கண்டதும் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தேன். அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு வந்திருந்தார். முதல் நாள்


உதிர்ந்த சருகுகள்

 

 வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என கூறிவிட்டு பாத்திரங்களை கொண்டு கழுவப்போய்விட்டாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல தன் வேலையை பார்க்க சென்றுவிடுவாள் என நினைக்கவில்லை. மகிமா மட்டும், குளித்து முடித்து, கொஞ்சம் புது டீ-ஷர்ட்டும், ஜீன்ஸ்-உம்


இடுக்கண் வருங்கால்

 

 ரகுராமன் ஜன்னலருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து திசையற்ற பார்வையில் லயித்திருந்தான். கைய்யில் அவனே தயாரித்திருந்த காப்பியை சிறிது சிறிதாக தொண்டையில் இறக்கிக் கொண்டு சலிப்பு என்றில்லாமல் தீவிர சஞ்சாரம் என்றுமில்லாமலும் எப்பொழுதாகிலும் இப்படி சில மணித்துளிகளைக் கட்டிப் போடுவதில் ஒரு சிறிய சுகம். அதுவும் அது சற்று தனிமையில் கரைந்தால் இன்னமும் சவ்கர்யம்தான். ஒரு அந்நிய மண்ணில் காலமும் வெளியும் வீட்டையும் உறவையும் பிரித்துப் போட்டிருக்கிற மெளனத்தில் இது போன்ற மோனங்கள் வாய்ப்பதுண்டு. நினைத்தால் இமைப் பொழுதில்