Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: சரித்திர கதை

45 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜகுமாரி

 

  சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது. பெயரளவில் மாத்திரம்ராணாவாக இருந்து கொண்டு பீம்சிங் அதைஆண்டு வந்தார்.அவரது குமாரி தான் கிருஷ்ணகுமாரி. பதினாறுவயது நிரம்பிய இளமை மயில். ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்குத் திருமணம் செய்துகொடுப்பதென்று நிச்சயத்திருந்தார்கள். ஆனால் திருமணமாகுமுன்பே அந்த ராஜா எதிர்பாராமல்இறந்து விட்டார். இந்த நிலையில் மற்றொரு ராஜபுத்திர ராஜ்யமான ஜய்ப்பூரிலிருந்து ஒரு படை உதயபூருக்கு வந்துசேர்ந்தது. கிருஷ்ணகுமாரியைத் தங்கள்


பூநாகம்

 

 நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன் நந்திவர்மன் அமர்ந்திருந்தான்.அப்போது வாயில் காப்போன் வந்து, திருமுனைப்பாடி சிற்றரசர் நரசிங்கமுனையார் வந்திருப்பதாகக்கூற, வரச்சொல்லி ஆணையிட்டபின் திருமுனைப்பாடியார் வந்தார்.   ‘‘வாருங்கள் திருமுனைப்பாடியாரே… என்ன சேதி?’’ ‘‘மன்னா… கடம்பர் குல மகளின் குலக்கொழுந்து நீங்கள். தங்கள் வீரத்தில் எமக்கு ஐயமில்லை.ஆனால், தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களை அலட்சியப்படுத்தாதீர்கள் மன்னா…’’ முக்கிய அமைச்சர் எழுந்து மெல்லப் பேசினார். ‘‘அறிவோம் முனைப்பாடியாரே.


யசோதரா

 

 உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழிவிகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்குஅறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கைபோல் பழகுபவள். அதனால்தானே ஓடோடி வந்துமூச்சு வாங்க இந்தச் செய்தியைச் சொல்கிறாள். பரபரப்போடு உப்பரிகை நோக்கிச் சென்ற ராணியசோதரா கீழே ராஜவீதியைப் பார்த்தாள். மக்கள்தங்கள் பழைய இளவரசரைப் பார்க்கும் ஆவலோடு,அவர் வரும் திசை நோக்கித் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தார்கள். ‘‘இந்தக் கபிலவாஸ்துவுக்கு மறுபடி வர எப்படி அவர் சம்மதித்தாராம்? தந்தையும் மனைவியும் மகனும்நாடும் வேண்டாம் என்று துறந்து


பேரரசு

 

 சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய மலைப் பகுதியின் ஏதோ ஒருசிகரம், பனிபடர்ந்து தெரிந்தது. தந்தையின் தளர்ந்துபோன நடை, கண்களில் தெரிந்த கவலை. இதற்கு சாணக்கியனுக்குக் காரணம்தெரியவில்லை. சிறிது நேரம் சிகரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், சாணக்கியன் பக்கம்திரும்பினார். நந்தப் பேரரசுக்கு எதிராக, தட்சசீலப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று திரட்டி, கிளர்ச்சிசெய்வதாக அங்கிருந்து செய்திகள் வருகின்றனவே இது உண்மையா?’’ ‘‘உண்மைதான். தனநந்த அரசின் இன்றைய ஆட்சி,


செம்பினாலியன்ற பாவை

 

 கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில் வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி சிறிய துக்கத்துடன் உடல் சந்தோசத்துடன் தன்னை ஆக்கிரமணம் செய்த ப்ரக்ருதியை நினைத்தவாறு தன் நோயினறிவையும் எண்ணிக்கொண்டே தனது மனையை நோக்கி விரைந்தான். அதற்கு முந்தைய நாள் இரவின் விளிம்பில் மாலையில் துளிரிய புஷ்பத்தை மோந்த தருணத்தில் திரியொளியும் ஓரணுவும் தானும் ப்ராணத்தியாகிக்க ஆயத்தப்பட்டதை அவ்விரவு முழுதும் சப்தமித்த முனகலினொலி வரிந்துகொண்டு காட்டியது. அது நிசப்தம் களைந்த