கதைத்தொகுப்பு: சரித்திர கதை

109 கதைகள் கிடைத்துள்ளன.

திலகவதியார்

 

 (1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாடும் குரல் பாட்டு புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண் மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில் நிகழுமலர்ச் செங்கமல நிரையிதழின் அகவயினில் திகழவரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார். தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணையஉறு நிலைவிலக்க உயிர்தாங்கி அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யார் இருந்தார். காட்சி : 1 [திலகவதியார் வீடு.


கானகத்திலே காதல்!

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முதல் பாகம் | இரண்டாம் பாகம் 1. சதிகாரர்கள் உல்லாசவனத்திலே ஜமீந்தார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே அடியார் சிவப்பழமும் அமர்ந்திருந்தார். ஜமீந்தார் முகத்தில் கோபம் கொதித்துக்கொண்டிருந்தது. சிவப்பழம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஜமீந்தாரின் அந்தரங்க ஆலோசனை யாளர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அடர்ந்து வளர்ந்த செடிகளின் பசுமையும், அவற்றின் இளம் இலைகளின் தலையை வருடி, மலர்ந்த மலர்களை அணிந்து, குறு குறுவென்று வந்து வீசும்


கானகத்திலே காதல்!

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதையைப்பற்றி! திரைக்கதை வரிசையிலே நான்காவது நூலாக கானகத்திலே காதல் வெளிவருகிறது. (அழகு நிலா, செல்வகுமாரி, அந்த இரவு முதலியவை மற்ற நூல்கள்). இவற்றிலே ‘அழகு நிலா’, இரு நண்பர்கள் என்ற பெயரில் படமாகிக்கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கலை என்ற பெருங்கடலிலே எத்தனையோ பெரு நதிகள் கலக்கின்றன. அவை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் வழியாக எத்தனையோ சிறு


இராமாயணச் சுருக்கம்

 

 (1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சான்றிதழ் பாலபோதினி உபபாட புத்தகம் IV – இராமாயணச் சுருக்கம் 1952 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(A) -ம் பிரிவில் பிரசுரிக்கப் பட்டதற்கமைய இப்புத்தகம் ஒரு நூல் நிலையத்திற்குரிய புத்தகமாக உபயோகித்தற்கு வித்தியாதிபதி


சகுந்தலை சரிதை

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19 10. சகுந்தலை அத்தினாபுரிக்குப் புறப்பட ஆயத்தமாதல் தீர்த்த யாத்திரையினின்று திரும்பிவந்த கண்ணுவர், ஒருநாளிரவு தமது மாணாக்க னொருவனை அழைத்து, இரவு எத்தனை நாழிகைகள் கழிந்துவிட்டன’ வென அறிந்துவரு மாறு அனுப்பினார். மாணாக்கன் சென்று பார்த்த பொழுது, மருத்துப் பூண்டுகளுக்குத் தலைவ னான சந்திரன், மேற்கு மலையில் மறைந்தான்; எதிர்ப்புறத்தில் வைகறை


சகுந்தலை சரிதை

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19 1. சகுந்தலையின் பிறப்பு விசுவாமித்திர முனிவர் முதலில் அரசராக இருந்து, பின்பு தவஞ்செய்து முனிவரானவர். அவர் அரசராக இருந்தபோது அவருக்குக் கௌசிகராசா என்று பெயர். கௌசிகராசா ஒருமுறை தமது படைவீரர் களுடன் வேட்டையாடச் சென்றார். வழியிலே வசிட்டமுனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அங்கே சென்றார். வசிட்டர் முனி சிரேட்டர்; சாந்தமே உருவானவர்;


இளங்கோ

 

 (1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறிப்பு: ‘இளங்கோ’ நாடகம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியரைப் பற்றிய கற்பனை. காட்சி : 1 [ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளுக்குமுன் ; சேர நாட்டில் வஞ்சிமா நகரை அடுத்த பூங்கா ; துறவிகள் சிலர் தம்முள் பேசிக் கொள்கிறார்கள்.] துறவி-1 : அடிகள் இந்த ஊருக்குப் புதியவராக வருகிறீர்களோ ? துறவி-2 : இல்லை. முன்பு ஒருமுறை வந்தது


கப்பல் தலைவன் காதலி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பயங்கரமான பெரிய சப்தத்துடன் சுழற் காற்று வீச ஆரம்பித்தது. அன்று கடலுக்குக் கொம்மாளந்தான். அலைகள் மலைபோல் உயர்ந்து கரையில் திட்டுத் திட்டாக இருந்த பாறைகளின் மேல் மோத ஆரம்பித்தன. கண்ணைப் பறிக்கும் மின்னலும் காதைத் துளைக்கும் இடி முழக்கமும் மனத்திற்கு நடுக்கத்தைத் தந்தன. இப்படிப்பட்ட இரவில் அச்சத்தைக் கொடுக்கும் இந்தக் கடற்கரைக்கு அருகிலுள்ள கற்பாறைகளுள் ஒன்றின்மேல் நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு என்ன


ஜராசந்தன் வதம்

 

 மகத நாட்டு அரசன் பிரகத்ரதன். காசிராஜனுடைய இரட்டைப் பெண்களை விவாகம் செய்து கொண்டான். இரு மனைவியர் மீதும் அளவில்லா அன்புடையவனாக இருந்தான். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அரசன் பிரகத்ரதனுக்கு சந்தானப் பிராப்தி இருக்கவில்லை. அதனால் மிகுந்த மன வருத்தம் உடையவனாக இருந்தான். ஒருமுறை வனத்தில் வசிக்கும் கௌசிகர் முனிவரை சந்தித்தான். தனக்கு புத்திரப் பேறு வேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். மாமரத்தினடியில் உட்கார்ந்திருந்த அவர் மடியில் ஒரு மாங்கனி வந்து விழுந்தது. கௌசிகர் முனிவர் அந்த கனியினை


சேயோன்

 

 கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருஇருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்ரருவி யாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறுகையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக்கொண்டுவருகிறான். கொற்றவை முது தாய் . ஆனாலும் அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர்.அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம்