கதைத்தொகுப்பு: சமுகநீதி

3429 கதைகள் கிடைத்துள்ளன.

படிப்பும் பதவியும்

 

 “தம்பி, நீ பரீட்சைகள் எல்லாம் எழுதிப் பாஸ் பண்ணி, பட்டங்கள் வாங்கியிருக்கலாம். ஓயாது புத்தகங்களைப் படித்துப் படித்து அறிவு விருத்தி செய்துகொண்டிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பதனாலே ஒண்ணும் நடக்காது. தபாலில் எழுதிப் போட்டு விடுவதனாலும் பிரயோசனமில்லை . பல பேரையும் நேரில் பார்த்துப் பேசிப் பழகணும். பெரிய மனிதர்கள் சில பேருடைய தயவு உனக்கு வேணும். இதெல்லாம் இல்லையென்றால், இந்த உலகத்தில் நீ நன்றாக வாழ முடியாது….” “வேலையில்லாதவன்” என்ற பட்டத்தோடு உலாவிய இளையபெருமாளுக்கு, அவனுடைய உறவினர்


கணக்கு பிணக்கு புண்ணாக்கு

 

 முட்டாள்? மாத்ஸ், சயின்ஸ் வராட்டி பள்ளிப் படிப்பை விட்டுட்டியா? சரி இப்போ என்ன பண்ற? வனஜா எங்க ஊருப் பொண்ணு சென்னைல காலேஜ் படிக்கிறவ கேட்டாள் என்னை நாக்கு பிடுங்கி சாகிற மாதிரி. என் வீட்டிற்கு எதிர் வீட்டு பொண்ணு. சின்ன வயசில பாண்டி ஆடியது. ஒன்னா கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சோம்.அவளை அப்பவே அவ மாமா நல்லா படிக்கிற பொண்ணூன்னு மெட்ராஸ் கூட்டிக் கொண்டு போனவர். நான் ஒம்பதாங் கிளாஸ் முழுப்பரிட்சை எழுதின கையோட என் மாமாவோட


நாயும் பொன்னும்!

 

 இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்! ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்யும். பின்பு அவர்களால் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ளும் .இதுதான் அந்த நாயினுடைய அன்றாடம் வேலையாக இருந்தது. அப்போது நாயானது கர்ப்பமாக இருந்தது. ஒரு நல்ல நாளில் இரண்டு பெண் குழந்தைகளைப்


இரண்டு பாபிகள்

 

 இருள் கவியவில்லை இன்னும்… நாகரிகப் பெருநகரம் அசுரவேகத்தோடு, ஆரவாரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் வேளை, மாலை நேரம். புற்றுக்களிலிருந்து கிளம்பி எங்கெங்கும் திரிகிற எறும்புகள் போல, அலுவலகங்களில் அடைபட்டுக் கிடந்துவிட்டு வெளியேறிய உழைப்பாளிகள் – இயந்திரங்களை ஓட்டிப் பிழைக்கிறவர்களும், பேனா ஓட்டி வாழும் குமாஸ்தாக்களும், பிறரும் – வீடுகளை நோக்கிச் செல்லும் வேளை. உளச் சோர்வும் உடல் சோர்வும் இருந்த போதிலும், வீடு எனும் ஜம்பப் பெயரை உடைய பொந்துகளிலும் வளைகளிலும் குகைகளிலும் ஒடுங்கிவிடும் ஆசையோடு சென்ற இந்த


வழி விடுங்க…

 

 உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா…? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை செய்கிறார்கள். 12 பெண்கள். மீதி ஆண்கள். இந்த 12 ல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் பாஸ் மார்க் வாங்கும் அழகில் உள்ள பெண்கள் மூன்று. சித்ரா, கௌரி, நிர்மலா. சித்ராவிற்கு ஏற்கனேவே திருமணம் ஆகிவிட்டது. கௌரி தபால் பிரிவில் வேலை செய்யும் மகேசைக் காதலிக்கிறாள். இதில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருப்பது நிம்மி என்றழைக்கப்படும் நிர்மலா. இந்த


பொய் இல்லாமல் ஒரு நாள்!

 

 இந்த நாகரிக உலகில், சின்ன சின்ன பொய்கள் மட்டும் பேசி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த என்னிடம் நண்பன் ஒருவன் தினமும் சொல்லும் பொய்களால் கோப்பபட்டு ஒரு நாள் உன்னால் பொய் பேசாமல் இருக்கமுடியுமா? என்று சவால் விட்டு விட்டான்.உடனே அவனிடம் நாளையே இருந்து காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டதால், நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமா?..முதலில் தண்ணீர் பஞ்சம் என்னை சோதித்தது. ஏங்க தண்ணி வர்ற லாரி வந்துருச்சான்னு பார்த்துட்டு வாங்க? வரலையின்னா எப்ப வருமுன்னு கேட்டுட்டு


தாயின் மணிக்கொடி

 

 அதோ, எக்ஸ்பிரஸ். சென்னை – கொச்சி எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ஓட்டமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது! அவன்….? யாரோ ஒருவன்! என்னவோ ஒரு பேர்! ஏதோ ஓர் ஊர்….. ஊர் என்றவுடன் – ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’ என்று பாட்டு ஓட்டமாக ஓடிவரவேண்டாமோ? அவன் …. கிடக்கிறான்! எக்ஸ்பிரஸ் வேகம் அதிகமாகிறது. ஜாக்கிரதை! நாட்டிலே இப்போதெல்லாம் ‘ரோஷ உணர்ச்சியைப் பற்றி ரொம்பவும் தூக்கலாகவே பேசப்பட்டு வருகிறது. அதனால்தானோ என்னவோ, அந்தத் துரிதவண்டி கொச்சியைக் குறிவைத்துப் பூஞ்சிட்டாகப் பறக்கிறது; பறந்து கொண்டிருக்கிறது.


கொரோனா

 

 “டாக்டர், நான் ‘சையின்ஸ் டுடே’ எடிட்டர் தியாகு பேசறேன்… நாங்க கொரானா பத்தி விஞ்ஞான பூர்வமாக ஒரு கட்டுரை உங்களிடம் கேட்டிருந்தோம். ஆனால் நீங்கள் தத்துவார்த்தமாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி விட்டீர்கள்… ஏன் டாக்டர்?” “இதுதான் இப்போதைய உண்மை தியாகு. உலகமே கொரானா பற்றி செய்வதறியாமல் திகைத்துப்போய் கிடக்கிறது. அதனால்தான் உண்மையை எழுதி அனுப்பினேன்… முடிந்தால் பப்ளிஷ் பண்ணுங்க, இல்லைன்னா வேண்டாம்…” டாக்டர் ஜெயராமன் மொபைலைத் துண்டித்தார். எடிட்டர் தியாகு மறுபடியும் ஒருமுறை டாக்டர் ஜெயராமனின்


வினை

 

 “அனு உனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாயே, இப்போது எப்படி இருக்கிறாய், மருத்துவரிடம் சென்றாயா” “பரவாயில்லை வனிதா மருத்துவரிடம் போகவில்லை, எனக்கு சரியாகிவிட்டது, அதனால் போகவில்லை பள்ளிக்கு வந்துவிட்டேன்” “உன் முகம் சரியில்லையே வாட்டமாகவே இருக்கிறதே, நீ மருத்துவரிடம் போயிருக்கலாமே” “ஆமா வனிதா ரொம்ப சோர்வாக இருக்கிறது, அதனால்தான் முகத்தில் அப்படி தெரிகிறது, போகப் போக சரியாகிவிடும்” “சரி வா அலுவலகம் உள்ளே செல்வோம், நேரமாகிவிட்டது தாமதமானால் மேலாளர் திட்டுவார், உனக்கு பதவி உயர்வு வரும் நேரத்திலா


சுந்தரம் செய்தது தவறாங்க…

 

 “கனம் ஜட்ஜ் வருகிறார்,எல்லோரும் எழுந்து நில்லுங்க” என்று கோர்ட் ப்யூன் குரல் கொடுக்கவே கோர்ட் வளாகத்தில் இருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஜட்ஜ் வந்து தன் சீட்டில் உட்கார்ந்தவுடன் எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள். தனது மூக்குக் கண்னாடியைக் கழட்டி விட்டு எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்தார் ஜட்ஜ். பிறகு வழக்கு பைலை அவர் எதிரில் பிரித்து வைத்துக் கொண்டார்.அதை நன்றாகப் படித்து விட்டு,கைதி கூண்டில் நின்றுக் கொண்டு இருக்கும் நபரைப் பார்த்தார்.அவர் முகம் சுளித்தார். கைதிக்