Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: சமுகநீதி

3404 கதைகள் கிடைத்துள்ளன.

நாணயக்கயிறு

 

 “மாடா! டேய் …. எழும்படா!” “நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!” “மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!…மாடுமாதிரிக் கிடக்குது…” “ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…பொறும் வாறன்!” அம்மாவினுடைய அதட்டலில் ‘மாடு’ இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மௌனம் ‘அம்மா’ அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகின்றா என்பதை உணர்த்தியது. வெளியே கடுமையான பனி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை. போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே, சீமெந்துத்


கிளியோபாட்ரா

 

 (இதற்கு முந்தைய ‘சங்ககாலப் பெண் புலவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) உலகிலேயே மிகப் பழமையான புஸ்தகம் ரிக்வேதம். சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வான சாஸ்திர அடிப்படையில் இதை நிரூபித்துள்ளனர். அவர்கள் கணக்குப்படி குறைந்தது கி.மு 4500; அதாவது இன்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தில் அவை தொகுக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டு வரை எப்படிப் பல புதிய பாடல்களும் உள்ளதோ


கொரானா நெகடிவ்

 

 எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை முதலில் வெளிப்படையாக அருகிருப்பரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் போக போக அது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை. ஒரு வித சந்தேக உணர்வுடன்தான் பயணிக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக


முட்டையிலிருந்து கோழி

 

 வித்வான் சுவாமிநாதன் தன் பூஜையை‌ முடித்துக் கொண்டு பால்கனியில் அமர்ந்தார். கீழே‌ ஏதோ பாட்டுக் குரல் கேட்கவே தோட்டத்தை க் குனிந்து நோக்கினார். தோட்டக்காரன் மணியும் அவன் தங்கை கவிதாவும் ஏதோ பாடிக் கொண்டே புல் களைந்து கொண்டிருந்தனர். அவர்களை மேலே வரும்படி கூப்பிட்டார் சுவாமிநாதன். அவர்கள் இருவரும் உடனே மேலே ஓடி வந்தனர். *நீங்கள் இப்போது என்ன பாட்டு பாடிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்டார். அப்போது டிரைவர் மாணிக்கமும் கூடவே வந்தான். மாணிக்கம் சொன்னான். “இவங்க


தேவதைகளின் நல்கை

 

 அவள் குடித்திருக்கிறாள் என்பதை வண்டிக்குள் ஏறிக்கொண்ட கணத்திலேயே உணர்ந்துகொண்டேன். அவளிலிருந்து Baccardia + Caramel லின் கூட்டுக்கந்தம் விட்டுவிட்டுக் கமழ்ந்தது. குடிக்காதவர்களை மட்டுந்தான் ஏற்றிக்கொள்வது என்கிற கோட்பாட்டை டாக்ஸிக்காரர்கள் வைத்துக்கொண்டால் எம்தொழில்முறையில் அது வேலைக்காகாது. அதுவும் வாரவிடுமுறை/விடுமுறை தினங்களில் வரும் வாடிக்கையாளர்களில் செவ்விகிதத்தினர் குடித்துவிட்டே தம் பயணங்களைத் தொடர்வர். குடித்ததனாலேயே டாக்ஸியை நாடுபவர்களுமுண்டாம். சில உற்பாதங்களைச் சகித்தே தீரவேண்டும். அதொரு கோடைகாலம், அவளுக்கு முப்பது வயதிருக்கும், நல்ல மொழு மொழுவென்று தசைப்பிடிப்பான தேகம். அதை ஒப்புவிக்கும் கட்டையான


சங்ககாலப் பெண் புலவர்கள்

 

 (இதற்கு முந்தைய ‘ஈடிணையற்ற பெண்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சங்க காலத்தில் பல சிறந்த பெண் புலவர்கள் இருந்தனர். உதாரணமாக குறமகள் குறி எயினி; காமக்கணி பசலையார்; ஒவ்வையார்; நல்வெள்ளியார்; நக்கண்ணையார்; மதுரை ஓலைக் கடையத்தார்; நப்பசலையார்; வெள்ளி வீதியார்; வெறிபாடிய காமக்கண்ணியார்; நன்முல்லையார்; ஆதிமந்தியார்; ஊண்பித்தை; ஒக்கூர் மாசாத்தியார்; நன்னாகையார்; நச்செள்ளையார்; பூங்கண் உத்திரையார்; பூதப் பாண்டியன் தேவி; குறமகள் இளவெயினி; ஏணிச்சேரி முடமோசியார்; முடத்தாமக் கண்ணியார்; அங்கவை, சங்கவை (பாரி


பயிற்சிமுகாம்

 

 அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்க‌ள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். விலகப் போகிறேன்; வெளிநாடு போகப் போகிறேன், கல்யாணம் முடிக்கப் போகிறேன்…எனக் கதைத்துப் பேசி இலகுவாக வெளியேறி விட முடியும். உறுப்பினர்கள் வெளியேற முடியா விட்டாலும் தீவிரமான விதி முறைகள் அமுலாக்கல்கள் இல்லை. ஆனால்


பயணம்

 

 கொழும்பு கோட்டையிலிருந்து, காங்கேசன் துறை நோக்கிச் செல்லும் புகையிரதம்; தபால்வண்டி, இன்னும் சில நிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும் என சிங்களத்திற் சொல்லப்பட்டது. அநுராதபுர புகையிரத நிலையம். வடபகுதிக்குச் செல்ல இருந்த பிரயாணிகளிற் சிலர் ஓரளவாவது சிங்களம் தெரிந்தவர்களாயிருந்தபடியால் (அரசாங்க அலுவலர்) இந்த அறிவிப்பில் ஆயத்தமடைகின்றனர். “தமிழ் தெரிஞ்சவங்கள் ஆரேன் இல்லையோ…என்னவோ சிங்களத்திலை மாத்திரம் தான் சொல்லுறாங்கள்.” – இதை இன்னொருவர் எரிச்சலுடன் ஆமோதிக்கிறார். “ஓமெண்டுறன்!” புகையிரதம் அட்டகாசத்துடன் வந்து நிற்கிறது. “என்ன சனமப்பா!…ஒரு நாளும் இந்த


அவர்கள்

 

 அறைக்குள் வந்து தன் எதிரில் சுவாதீனமாக அமர்ந்த அந்த இரு சுடிதார் அழகு இளைஞிகளைப் பார்த்ததும் சந்திரன் முகத்தில் மலர்ச்சி. “சந்திரன் ! நாங்க ரெண்டு பேரும் அதுக்காக வரலை. ஆண் விபச்சாரம் பத்தி புள்ளி விபரம் எடுக்க வந்த பத்திரிகையாளர்கள். !” என்றாள் ஒருத்தி! பயப்படாதீர்கள்! இதையே உயிர் மெய் எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்து ஓரெழுத்தாக இல்லாமல் பிரித்து எழுதி இருக்கிறேன். அவ்அர்க்அள் அற்ஐக்க்உள் வ்அந்த்உ த்அன் எத்இர்இல் ச்உவ்ஆத்ஈன்அம்ஆக்அ அம்அர்ந்த்அ அந்த்அ இர்உ ச்உட்இத்ஆர்


ஈடிணையற்ற பெண்கள்

 

 உண்மையில் அனைத்துப் பெண்களும் மிகவும் பவித்ரமானவர்கள். ஆனால் முந்தைய காலத்தில் அவர்களை ஆண்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தவிர பெண்களை ஒரு போகப் பொருளாகவே கருதினர்., பாருங்களேன்… ‘பெண் புத்தி பின் புத்தி; கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்ற பழமொழிகள் ஆண்களால் இயற்றப்பட்டு வெளியே உலவின. ஆனால் இவைகள் கண்டிப்பாக தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிக்கும் பழமொழிகள் அல்ல. ஒரு மன்னன் செய்த அநீதியைக் கூட துணிவுடன் அரசவைக்குள் நுழைந்து கேள்வி கேட்ட சம்பவமும் தமிழகத்தில் உண்டு. மனு