கதைத்தொகுப்பு: சமுகநீதி

3761 கதைகள் கிடைத்துள்ளன.

கம்பெனி கௌரவம்

 

 “இது என் நாய் அல்ல, நிச்சயமாய்” “புக் பண்ணின ரசீது இருக்கு. உங்களுடையது அல்லவா? உங்களுடையது தான்!” இரண்டாம் வகுப்பு வெள்ளைக்காரப் பிரயாணியின் கோபம் அதிகமாயிற்றும் “நான் ஸென்ஸ்! என் நாய் எனக்கு அடையாளம் தெரியவில்லை என்று சொல்ல என்ன தைரியம் ! எங்கே என் நாய்?” என்று அடி வயிற்றிலிருந்து கத்தினான். மெயில் கார்டு திருஞானம் சாந்தமாக , “அதோ, உங்கள் நாய்” என்று வண்டியில் கட்டியிருந்த நாயைச் சுட்டிக்காட்டினான் மறுபடியும். வெள்ளைக்காரப் பிரயாணி ஆத்திரத்துடன்,


பந்தயம்

 

 ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு வரும் காபூலிப் பட்டாளம் எங்கள் கிராமத்தின் வெளிப்புறத்திலே உள்ள ஒரு பெரிய தென்னந்தோப்பிலே முகாம் போட் டிருந்தது, சென்ற ஒரு வாரமாக. விரும்பத் தகாதவர் கூட்டத்தினரோடு கூட்டத்தினராக இவர்களும் போலீஸாரால் கரு தப்பட்டிருந்தபடியால், கிராம எல் லைக்கு உள்ளே தங்குவதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுபடவில்லை. இவர்கள் வந்தது முதல் கிராமத்தில் ஒரே பர பரப்பு. இவர்களை அராபியர் என்றும் கூப்பிடுவ துண்டு. “அராபிப்படை வந்திருக்கு. பிடித்துக் கொண்டு போய் விடுவான்கள். நகைகளைப் பிடுங்கிக்


தச்சன்

 

 டாக்டர் ராகவன் அறை. அவர் அழைப்பு மணியை அழுத்தினார். உள்ளே வந்த நோயாளிக்கு வயது சுமார் எழுபது இருக்கும் . “உட்காருங்க! என்ன பிரச்னை உங்களுக்கு?” டாக்டர் கேட்டார். “எனக்கு ஒண்ணும் பிரச்னையில்லை டாக்டர் .வீட்டிலே தான் உங்களை நான் பார்க்கனும்னு சொன்னாங்க!” என்றார் ஆணித்தரமாக உள்ளே வந்த நோயாளி . “அப்படியா?” என்று ராகவன் தன் உதவியாளரை இண்டர்காமில் கூப்பிட்டார். “பானுமதி! இங்கே இருக்கிற பேஷன்ட் வீட்டிலேருந்து யாராவது வந்திருக்காங்களா? அவங்களை உள்ளே வரசொல்லுங்க !”


சிக்கமுக்கிக் கற்கள்

 

 காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு…….. பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து


கொடி(ய)ப் பருவம்

 

 மார்த்தாண்டம், அந்தத் தெருவை குறுக்கும் நெடுக்குமாய், இடதுபக்கம் நடந்து வலதுபக்கம் திரும்பியுமாய், பலதடவை நடந்து விட்டாலும், இன்னும் நடையை நிறுத்தவில்லை. பனியன் போடாததால், அவரது வெள்ளைச் சட்டை வேர்வை பெருக்கில் முதுகில் சரிகைபோல் ஒட்டி, இடுப்பிற்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியை கேரிபேக்கில் வைக்கப்பட்ட சதைப்பிண்டமாய் காட்டியது. பலதடவை அந்தத் தெருவை அளவெடுத்து விட்டதால், அவர் உடம்பில் துருப்பிடித்த முதுமை, கால்களை நடக்க வைக்காமல், நகர்த்திக் கொண்டிருந்தது. ஆனாலும், உடம்பை சுமக்கமுடியாமல் சுமந்தபடியே, தொடர் நடையாய் நடந்தார். அந்த


திருப்பம்

 

 நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது ‘பைத்தியக்காரப் பொண்ணு’ என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே வாய் மத்தியில் கோடிட்டது. வீட்டுக்கு வந்ததும், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். அந்தப் புறா, தனது குஞ்சுகளோடு, பறந்துபோனதை, இன்னும் அவரால் நம்ப முடியவில்லை. நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் அந்த பெரிய


நான்காவது குற்றச்சாட்டு

 

 பர்வின், மாணிக்கத்திடம் சிறிது கடிந்துதான் பேசப்போனாள். ‘இங்கே வரப்படாதுன்னு சொன்னேனே’ என்று சொல்வதற்காக குவிந்த உதடுகள், செவ்வரளி பூ மொட்டாய் தோன்றின. ஆனாலும் அவரை, – முகம் தொலைத்த மனிதராய், கண்களை மட்டுமே கொண்டவராய் பார்த்ததில், அந்த மொட்டுப் பூ மலர்ந்தது. அவரிடம், வீட்டில் அல்லாவின் பேரில் சொன்ன ஆறுதலை, இப்போது, தான் வைத்திருக்கும் கோப்பின் ஆணையாக ஆறுதலாக்கினாள். ‘கவலப்படாதீங்க… எல்லாம் நல்லபடியாவே முடியும்… அதுவும் இன்றைக்கே முடிந்துவிடும்’. மாணிக்கத்தின் பார்வை, அவள் வழியாய் தாவி அந்தக்


சாமந்தி ⁠சம்பங்கி ⁠ஓணான் இலை

 

 அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் – அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு ‘ஓம் வக்ர துண்டாயா’ பன்றபோது, கீரைக்காரி மாரியம்மாள் தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் ‘ஓம் விகடாயநம’ என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், சும்மா ‘கும்’முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த


ஒருவழிப் பாதை

 

 அலுவலகமே அல்லோல கல்லோலப் பட்டது. கொடியவன் என்று கொடிகட்டிப் பறந்த பழைய சேல்ஸ் மானேஜர் கழிவதாலும், புதிய சேல்ஸ் மேனேஜர் புகுவதாலும் அலுவலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். பழையவரைவிட எவரும், மோசமானவராக இருக்க முடியாது என்ற அனுமானமே, புதியவருக்கு, ஒரு தகுதியாக வாய்ந்தது. மானேஜிங் டைரக்டர், “திஸ் இஸ் யுவர் பிராஞ்ச். ஹி ஈஸ். ஹெட் கிளார்க் சோணாசலம்…” என்று சொல்லி விட்டு, புதியவரை அங்கே புகுத்திவிட்ட திருப்தியில் போய்விட்டார். செக்‌ஷன் ஆட்கள் அனைவருமே எழுந்து நின்றார்கள்:


காவலாளி

 

 கொள்ளை இருட்டு கொள்ளையர்களே வேட்டைக்கு வரத்தயங்கும் இருள் மயம்… அந்த கட்டிடத்திற்கு பின்னணியாக உள்ள பாறைப் பொந்துகளும், அவைகளின் பின்புலமான மலைக் குவியல்களும், மரம், செடி, கொடிகளும், மங்கிப் போகாமலே மறைந்து போய் விட்டன. சாலையில் ஒளி உருளைகளாய் செல்லும் வாகனங்களைக்கூட காண முடியவில்லை. ஒப்புக்குக்கூட ஒரு மின்மினிப் பூச்சி இல்லை… கதிர்வேலுக்கு லேசாய் பயம் பிடித்தது. உடலை சல்லடை செய்வதுபோல் அரித்தத கொசுக்களைக்கூட ‘ஆள் துணையாக,’ அவன் விட்டு வைத்தான். அவை அவன் காதுகளில் ஏறி