Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைத்தொகுப்பு: சமுகநீதி

3401 கதைகள் கிடைத்துள்ளன.

மனு சாஸ்திரம்

 

 (இதற்கு முந்தைய ‘கிளியோபாட்ரா’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மதுரை மருதன் இளநாகனார் பாடிய இன்னும் ஒரு பாடலில் பெண்ணின் கற்பு தெய்வத் தன்மை உடையது என்றும், அவள் பெறும் மகனால் குடி முழுதும் ஒளி பெறுகிறது (அகம் 184) என்றும் போற்றுகிறார். “கடவுட் கற்பொடு குடி விளக்காகிய புதல்வர் பயந்த புகழ்மிகு சிறப்பின்” என்பன அந்த வரிகள். இது மனுவின் கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகிய ராஜேந்திர பிரசாத் நிகழ்த்திய


பாலம்

 

 நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. தூரத்தில், பின்னால் தாமரைக்குண்டு விலக்கில் மட்டும் சில்லறை யாய் சில விளக்குகள். முன்னால் தூரத்தில் மாங்குளத்தில் விளக்கேதும் வெளித் தெரியா வண்ணம் சுற்றிலும் அடைத்துக்கொண்டு வாழைத் தோட்டங்கள், தென்னந் தோப்புக்கள். நிலவொளியில் காங்கிரஸ்காரன் போட்ட தார் ரோடு மெல்ல மினுங்கியது. ஏராளமான நொடிகள். இரண்டு பக்க வயல்காரர்களும் ஏதோரோட்டில்


பிரபஞ்ச நூல்

 

 1 இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான்


வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

 

 முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத துயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு துயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது. அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள். இலை துளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி


கடவுள் வாழ்த்து

 

 (1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குறள் கதைகள் முகவுரை இந்த இருபதாம் நூற்றாண்டில் மற்றகாட்டு அறி வுடை மக்கள் அடைந்திருக்கின்ற ஆட்சி நலவுரிமையை இந்தியரும் அடையப் பெருமுயற்சி யெடுத்தவர் மகாத்மா காந்தியடிகள். பிரிவுற்ற இந்தியா முறிவற்று ஒருமையுற உழைத்த அடிகளின் தூய உட்கோளைத் தன் மனக் கோளுக்கு மாறென்று எண்ணி வெறிகொண்ட விநாயக நாதுராம் கோட்ஸே, இறைவனைத் தொழும் தூய வேளை யிலே சுட்டுக் கொண்றான். அந்நாள் 1948


தானசீலன்

 

 பாம் பாம்…பேருந்துகளின் ஹாரன் சத்தம், விர்ர்ரூம்..கிரீச்.. சர்ர்க்க்…டூ வீலர்களின் உறுமலும் பிரேக் சத்தமும் அந்த காலை நேரத்தை பரபரப்பாக்கி கொண்டிருந்தன. காலை ஏழு முப்பத்துக்கே வெகு வேகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறது கோவை மாநகரம். ஜெயன் மேன்ஷனை விட்டு வெளியே வந்தான், விக்ரம் மேன்ஷன் இரண்டடுக்கு மாடிகளை கொண்டது. மொத்தம் 21 ரூம்கள். கிரௌண்ட் ப்ளோர் ஏழு, முதல் மாடியில் ஏழு, இரண்டாம் மாடியில் ஏழு ரூம்கள். ஒரு ரூமில் இரண்டு பேர் தங்க மட்டுமே அனுமதி.


அந்த ஒரு முத்தம்…

 

 குறிப்பு: சுமார் 32 வருடங்களுக்கு முன் நான் வேலை பார்த்த இடத்தில் ஆங்கிலத்தில் எழுதி சிறு பரிசையும் வென்று முதன் முதலாக அந்த கம்பெனியின் மாத இதழில் வெளியான என் முதல் சிறுகதை ஆகும். தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் அது… வாசு வேலைக்கு வந்து தான் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசிக்கலானான். அவன் ஒரு கட்டிட தொழிலாளி… நாள் சம்பளத்தில் வேலை செய்பவன்… ஒரு பீடியை பற்ற வைத்தவன், எதிரே இருந்த இரண்டு மாடியை


நாணயக்கயிறு

 

 “மாடா! டேய் …. எழும்படா!” “நான் கத்துறான் கத்துறன் அவன் விரும கட்டை மாதிரிக் கிடக்கிறான்…எழும்பன்ரா எருமை!” “மூதேவியாருக்கு நித்திரையெண்டால் போதும்!…மாடுமாதிரிக் கிடக்குது…” “ராசாவுக்கு நான் கத்துறது கேக்கயில்லையோ?…பொறும் வாறன்!” அம்மாவினுடைய அதட்டலில் ‘மாடு’ இன்னும் எழும்பவில்லை; நான் எழும்பிவிட்டேன். மேற்கொண்டு நிலவிய மௌனம் ‘அம்மா’ அடுத்த நடவடிக்கையில் இறங்கப் போகின்றா என்பதை உணர்த்தியது. வெளியே கடுமையான பனி பெய்கிறது. இன்னும் இருள் அகலாத அதிகாலை. போர்வையை இழுத்து உடலை மூடிக்கொண்டு சொகுசைத் தேடுகிறேன். வெளியே, சீமெந்துத்


கிளியோபாட்ரா

 

 (இதற்கு முந்தைய ‘சங்ககாலப் பெண் புலவர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) உலகிலேயே மிகப் பழமையான புஸ்தகம் ரிக்வேதம். சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வான சாஸ்திர அடிப்படையில் இதை நிரூபித்துள்ளனர். அவர்கள் கணக்குப்படி குறைந்தது கி.மு 4500; அதாவது இன்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தில் அவை தொகுக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டு வரை எப்படிப் பல புதிய பாடல்களும் உள்ளதோ


கொரானா நெகடிவ்

 

 எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை முதலில் வெளிப்படையாக அருகிருப்பரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் போக போக அது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை. ஒரு வித சந்தேக உணர்வுடன்தான் பயணிக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக