கதைத்தொகுப்பு: சமுகநீதி

3663 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்குப் பிரதிநிதி?

 

 “அம்மா!” “யார், அது?” “ஐயா இருக்கிறாரா, அம்மா?” “இருக்கிறார்: என்ன சமாச்சாரம்?” “ஒண்ணுமில்லை, அம்மா! அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.” “ரொம்பப் பார்க்க வேண்டியதில்லையோ! ஒண்ணுமில்லாததற்கு அவரைப் பார்ப்பானேன்?” “இல்லை அம்மா! வந்து …..” “என்னத்தை வந்து……? ஐயாவைப் பார்ப்பதற்கு வேளை நாழி ஒன்றுமே கிடையாதா? நினைத்த நேரத்திலெல்லாம் பார்க்க வந்து விட வேண்டியது தானா? இந்தக் கொட்டும் மழையிலே எப்படித்தான் நீங்கள் வந்து இப்படிக் கழுத்தை அறுக்கிறீர்களோ தெரியவில்லையே!” இந்தச் சமயத்தில் புதிதாகச் சிநேகமான ஒரு பெரிய


கைமேல் பலன்

 

 ‘கொக்கரக்கோ’ என்று கோழி கூவிற்று. சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான். அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். இன்னெரு முறை கோழி கூவிற்று. அவன் மீண்டும் ஒரு முறை தன் மனைவியைப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நாளெல்லாம் நாய் மாதிரி உழைச்சுப்பிட்டு வருகிறாள், பாவம்? உடம்பெல்லாம் ஒரே அசதியாயிருக்காதா? எப்படி இம்புட்டுச் சீக்கிரத்தில்


தேற்றுவார் யார்?

 

 பணத்தை வீணாக்காதீர்கள்; “நேஷனல் சேவிங்ஸ் ‘சர்டிபிகேட்’டுகளை வாங்கி, பத்து ரூபாய்க்குப் பதினைந்து ரூபாயாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளுங்கள்!” என்னும் சர்க்கார் விளம்பரத்தைப் படிக்கும் போதெல்லாம் எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். “ஆஹா! ஏமி தயாளச் சித்த! எந்த பரோபகாரமு!” என்று அவர் தமக்குள் எண்ணிக் கொள்வார். பத்து ரூபாய்க்குப் பத்து வருடங்களில் அறுநூறு ரூபாய் வட்டி வாங்கும் அவருக்கு, சர்க்கார் கொடுக்கும் ஐந்து ரூபாய் வட்டியை நினைத்தால் சிரிக்காமலிருக்க


கதவு திறந்தது!

 

 டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை. ஏன்? அவருடைய உள்ளமறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது! அவன் எப்படி இறந்தான்? ‘போலீஸ் ரிப்போர்ட்’ அவருக்குப் பதில் சொல்லிற்று; வழி நடைப் பாதையிலே, கொட்டும் மழையிலே, குளிரிலே அவன் விறைத்துக் கிடந்தான் என்று! அவன் யார்? *⁠*⁠* அரசியல் கொந்தளிப்பில் குதித்து அதிகார


ஒரே உரிமை

 

 எங்கள் கிராமத்தில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக் கிறது. சென்ற தை மாத அறுவடையின் போது நான் அங்கே போயிருந்தேன். வயலில் மும்முரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. களத்து மேட்டில் நின்றபடி நான் வேலையாட்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் களில் ஒருவன் என் கவனத்தைக் கவர்ந்தான். அதற்கு முன்னால் அவனை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது – எங்கே பார்த்திருப்போம்? ஆம், அந்தச் சம்பவம் என் நினைவுக்கு வந்து விட்டது. அவன் பெயர் சோலையப்பன். சென்ற வருடம் சித்திரை


வைக்கோல்

 

 “34 18 59″ “ஆமாம் ஐயா!” “மிஸ்டர் எல்.ஆர். கேட்டன்?” “இல்லை ஐயா! வெளியே போயிருக்கிறார்!” “எப்போது திரும்ப எதிர்பார்க்கப்படுகிறார் என்று தயவு செய்து சொல்ல முடியுமா?” “தெரியாது… நீங்கள் யார் பேசுவது?” “நான் வால்ஸ் (இன்டியா) லிமிடெட்டிலிருந்து சோமசுந்தரம் பேசு கிறேன்… இன்று காலை பத்தரை மணிக்கு – பாம்பே டூ பாராபங்கிக்கான ஒரு கன்ஸைன்மெண்டை எடுத்துக் கொள்வதற்கு இரண்டு லாரிகள் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். மணி பத்தே முக்கால் ஆகிவிட்டது. இன்னும் காணோம்…. அது பற்றி


ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

 

 அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு


பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!

 

 கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க கதைப்புத்தகங்கள் வாசிப்பது என் வழக்கம். வழக்கம்போல அன்றும் அலுமாரியிலிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து கைகள் பக்கங்களைப் புரட்டியது. அச்செழுத்துக்களுக்கு மத்தியில் அழகான கையெழுத்தில் “பாமா” என்று எழுதியிருந்தது. பாமா – அவள் என் பள்ளித்தோழி. ஏழ வருடங்களுக்கு முன் உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரியொன்றில் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். பணக்காரியாக இருந்தாலும் “வாணி! வாணி!” என்று என்மேல் உயிரையே வைத்திருந்தாள். பாமா படிப்போடு மட்டும் நின்று விடவில்லை. நாடகம்,


காமரூபிணி

 

 [1] ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே? அவ யச்சியில்லா? முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ!” என்றார் நாராயணன் அண்ணன். பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் முழுக்க யட்சிகளும் நீலிகளும்


நாக்கிழந்தார்

 

 “தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு உபசாரம் செய்யவா, தங்குவார்! அதோ பாருங்கள். அவர் எவ்வளவு கவலையுடன் காரில் உட்காருகிறார்.