கதைத்தொகுப்பு: சமுகநீதி

3667 கதைகள் கிடைத்துள்ளன.

ஜனதா சலூன்

 

 அரவிந்த் மதுராந்தகம் வட்டத்தில் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்தார்.அவர் மனைவி வேலைக்கு போகவில்லை.மகன் மணிவண்ணன், கல்லூரி மாணவர்மகள் பூர்ணா மதுராந்தகம் அரசு ப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள்.அரவிந்த் அவர் மகன் மற்றும் மகள் இருவரையும் சிறு குழந்தைகளாக இருந்த சமயத்தில் மதுராந்தகம் அரசு நூலகத்தில் செய்தித்தாள்கள் படிக்க ,வார் ,மாத இதழ்கள் படிக்க மற்றும் நூலகத்தில் உறுப்பினர் ஆக சேர்த்து புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்படுத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் இலஞ்சம் பெறாமல் வேலை செய்யும் நபர்களில்


நிலவு முளைத்தது

 

 தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டான். மங்கிய இருளில் ஆங்காங்கே சிலர் படுத்திருந்தனர். சிறு துவாரத்தின் வழி வருகின்ற மின்விளக்கின் வெளிச்சத்தில் முகங்களை சரியாக தெரியவில்லை. இவன் நிமலன்…. அவன் பார்த்திபன்…. அந்த மூலையில் கிடப்பவன் திலகன். வந்த சில நாட்களுக்குள் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்கள் உண்மையிலேயே குற்றம் செய்தவர்களா? சந்தேகத்தின் பேரில் கைதாக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் தானா? வுப்சாரிக்கும் துணிச்சல் இன்னும் வரவில்லை. பொலிஸ்காரர்களைப் பற்றிய


காமராஜ் நாற்காலி

 

 (இதற்கு முந்தைய ‘கண்ணீர்த் துளிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). அதிகாரத்தில் இருக்கும் போதும்; அதிகாரத்தில் இல்லாதபோதும் என அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எதிர்கால இந்தியாவில் அரசியல்களுக்கான அங்கீகாரங்களை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ளும் மனசாட்சி இல்லாத செயல் முறைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு ஈவேராவின் மன மாற்றத்தை அவன் அப்பா ஒரு உதாரணமாகப் பார்த்தார். பெரியாரிடம் அப்பா இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. இது அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. 1967 சட்டசபைத் தேர்தலில் தோற்றுப் போயிருந்த


பாம்பு மனிதன்

 

 உயரக்கிளை பரப்பியிருந்த மரத்தை வெறித்துப் பார்த்தார் முஸ்தபா வாத்தியார். சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து சரிந்து கிடப்பது அவருக்கு சௌகரியமாக இருந்தது. மனதிற்குள் ஏதோ ஒரு அழுத்தம் இனம் புரியாத நெருடல் விரக்தியாய், வெறுமையாய் மூளைக்குள் கவிந்தன. ஜனமும், மரணமும் மனித வாழ்வின் எல்லைக் கோடுகளா? இடைப்பட்ட ஜீவித இருப்பில் மனிதன் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்துச் சாதனை நிகழ்த்த வேண்டாமா? என்பது குறித்து அவருக்கு ஒரு வெறித்தனமான உடன்பாடு இருந்தது. நரம்புகள் தளர்ந்து இளமை வற்றிய


இது இவர்கள் உலகம்

 

 மேல் மாடியில் நின்று சிரத்தையோடு பாதையை வெறித்துப் பார்த்தேன். கீழே நெடுஞ்சாலை பரபரப்பாகிக் கொண்டிருந்தது. விரையும் வாகனங்களும், பாதசாரிகளுமே நகரின் பிரதான பாத்திரங்கள். வேலை தேடித் தேடி அலைந்து அலுத்து, இறுதியில் அறிந்த ஒருவரின் அனுசரணையில், ஒருவாறு வேலை கிடைத்தது. இது பிரமாதமான வேலையில்லை. சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும் ஹோட்டல் ஒன்றில், பில்மாஷ்டர் வேலை. பட்ட துன்பங்களுக்கு மாதம் மூவாயிரம் கிடைக்கிறது. இப்போதைக்கு இது பரவாயில்லை . ஆனால், மிகச் சமீபத்தில் எனக்கு இங்கு வேலைமாற்றம் கிடைத்திருப்பது


அக்னி மழை

 

 கல்லூர்க் கிராமம் விடியலுக்கு முன்னே பரபரப்புக்கு ள்ளாகியிருந்தது. இதமான சீதளக்காற்று மரங்களைத் தழுவி வந்து வீசியது. முன் தினம் இரவு அர்த்தராத்திரியில் நிகழ்ந்த அந்தக் கொடூரம், கிராமவாசிகளின் உரையாடலுக்கு கருப்பொருள் ஆனது. சம்பவத்தை செவியுற்ற கணத்திலிருந்து என் மனம் அதிர்ந்து துடிக்கிறது. இது போன்ற துர்ச்சம்பவங்களால், எனக்குள் இருக்கும் இலக்கிய ஆன்மா விகசித்து, அலறத் தொடங்கவிடும். கண்ணுக்கு நேரே சாட்சியாகிப் போன வேண்டாத நிகழ்வுகள், மனதில் சங்கடத்தை தோற்றுவிக்கின்றன. நிஜங்கள் மட்டும் கதைகளாகி விடுமா? இதை ஒரு


மீட்பு

 

 வானொலியிருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்திருந்தது. இன்று உடம்பிற்கு சரியில்லை. நோய்க்கான சமிக்ஞை தென்பட்டது. மேனிக்குள் அரக்கன் புகுந்து கொண்ட வலி, உளைச்சல், எல்லாம் நீரிழிவு நோயின் உபாதை. உடலெங்கும் பரவியிருந்தது. இன்றைய யுகத்தில் சர்க்கரை நோயை விலைக்கு வாங்கிக் கொண்டு சங்கடப்படுவோர் ஏராளம். கட்டுப்பாடான உணவு, நேரத்திற்கு மாத்திரை, தினமும் தேகாப்பியாசம் என்றிருந்தால் நோயின் உக்கிரம் தணிந்திருக்கும். அசட்டையாக இருந்து குருதியேற்றங்களை அலட்சியம் செய்வதால், மேனியில் சீனியேறி சங்கடங்களை தோற்றுவிக்கும். இது கடுமையான நோய்களோடு கூட்டரசாங்கம் அமைத்துக்


ஒற்றைப் படகு

 

 லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை ஞாகப்படுத்துகிறது.இலங்கையிலிருந்து என் சினேகிதர்கள்.உறவினர்கள்,பெற்றோர் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கோண உறவின் அடிப்படையில் எழுதும் கடிதங்கள் என் உள்ளத்தின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுண்டு.சிலவேளைகளில்,நேரம் கிடைத்தால் உலகில் எவருமே இல்லாத இ.டத்திற்கு ஓடிப்போய்த் தனிமையில் இருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றும். ‘ஏய் பாலா’ என்ற குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறேன். தெரிந்த முகம்! தூரத்தில் நிற்கிறது. உள்ள பொதுத்தெரு என்பதையும் மறந்து மிகவும்


கைமேல் கூலி…

 

 “மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?” உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்… “உள்ளேயிருந்து கோணி படுதாவை விலக்கிவிட்டு வந்தாள் மாரியம்மா…வயிறு லேசாக மேடிட்டிருந்தது…!” “என்னங்கண்ணா…. பொழுது இன்னும் விடியல…அதுக்குள்ளாற?” “வெங்காயம் தோண்டணும் பிள்ள… ஆள் குறையா நிக்குது… இன்னும் இரண்டு பேர் இருந்தா சரியா இருக்கும்…உன்னிய கூப்பிட சங்கட்டமாத்தான் இருக்கு…முடியுமான்னு பாக்க வந்தேன்…!!” “என்னங்கண்ணா …. மூணு மாசம் தானே ஆவுது… எனக்கும் செலவுக்கு பணம் வேணாமா….? போங்க…பின்னாடியே வரேன்….!” அண்ணா…ஒரு நிமிசம்…பக்கத்து தெரு


சித்தரைத் தேடி…

 

 சும்மா இருக்கிறவனைச் சுண்டி, சுரண்டி விடுறது… ஆசை, ஆவல்தான்!! என்ன புரியலையா…?! இது முகவுரை. பொருளுரைக்கு வர்றேன். நான் கடவுள் மறுப்பாளன். எந்த நிலையிலும் கடவுள் இருக்கிறான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவன். இப்படிப்பட்ட எனக்கு…. கால எந்திரம், காலப்பயணம் பத்தி தெரிஞ்சிக்கனும்ன்னு ஆசை. அதனால் அவைகளைக் கணனியில் தேடிப் பிடிச்சேன். எல்லாம் சாத்தியம் இல்லாதது மாதிரியே தோணுச்சு. அப்போதான்… இந்த சித்தர்கள் இடையில் புகுந்தாங்க. அவுங்க…. தன் உடலை ஒளி உடலாக்கி அண்டவெளியில் பயணம் செய்து வேற்றுக்கிரகங்களுக்குப் போயிருக்காங்க.