கதைத்தொகுப்பு: சமுகநீதி

3761 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடு

 

 நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற மாதிரி நான் மெமரி லாஸ் பெசண்டு இல்ல, ஆனாலும் எனக்கு எதுமே விளங்கல?. ஊருக்குள்ளேயே ஓடி இருந்தாலும் எங்கயாச்சும் மறையலாம்., இல்ல, யாராச்சும் காப்பாத்துவாங்க, இப்டி வெட்ட வெளி புழுதி வயகாட்டுல ஓடிட்டு இருக்கேன்,


முத்துவின் உள்ளக் குமுறல்

 

 விரட்டிய நாயின் பிடியில் சிக்காத ஒருவனின் இதயத் துடிப்புடனும் பதட்டத்துடனும், முகத்தில் வழக்கமாய் இருப்பதைப் போல நடித்துக் கொண்டே சாதாரணமாய் வீட்டினுள் நுழைந்தான் முத்துக்குமார். தன் பேக்கை ஓரம் போட்டுவிட்டு, காஃபி கேட்போமா என்ற சிந்தனையில் இருந்தவனிடம் இந்தா காஃபி என்று கோப்பையை நீட்டினாள் தாய் பைரவி. ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு டியூசன் புறப்பட்டான் முத்து. வழக்கம் போல டியூசன் முடித்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனின் உள்ளம்


பாடமும் பாயாசமும்

 

 முதல் பாடவேளை, வகுப்பில் பாதி மாணவர்கள் இன்னும் வரவில்லை. முதல் வகுப்பு என்றால் பாடம் நடத்துவதற்கு லாயிக்கற்றது. முழுமையாக எல்லா மாணவர்களும் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஒவ்வொருவராக வருவர். ஒவ்வொருவரும் ஒவ்வொருக்குமான கதை சொல்வார். கேட்டால் நமக்குக் கோபம் தான் வரும். எனவே யாரையும் ஏன் தாமதம் என்று கேட்பதே இல்லை. சிறிது நேரத்தில் பாடம் நடத்த ஆரம்பித்தேன். ஒரே நேர்கோட்டில் மாணவர்களைக் கொண்டு வருவதற்கு, ஏதேனும் வெளி விஷயம் பேசி, வகுப்பின் கவனத்தை இழுத்துப்பிடிக்க


பயிற்சிமுகாம்

 

 அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று பெரிய டேவிட்! ஜீவன் பொதுவாகவே ‘எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?… என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும் சென்று வருவது அங்கிருந்து அறிந்தவற்றை அராலித் தோழர்களும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான். அதாவது ஒரு தபால்காரனின் வேலை தான் என்னுடையது என்பதை உணர்ந்திருந்தான். ஏ.ஜி.ஏ பொறுப்பாளர்


கிணறு

 

 சாலைக்குப் பக்கத்தில் தழைக் கின்ற காட்டில் சண்டாளன் மாரப்பன் தோண்டி வைத்த கிணறு… கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கிணறு தோண்டிய படி இருக்க, ஈட்டியோடும் கேடயங்களோடும் சுற்றிலும் அர சாங்க வீரசேனை காவலிருந்தது. வேற்று ஆள்கள் அன்னதானம் செய் யாதபடிக்கும் சிரமதானம் செய் யாத படிக்கும் அவர்கள் காவல் இருந்தார்கள்… முதலாவது 1874-ஆம் வருஷத் இல் பிரதியெடுக்கப்பட்ட கல்வெட் டுக் குறிப்பு. ஓரங்கள் எல்லாம் செல் லரித்து எழுத்துக்கள் மங்கிய பக்கத்


ஞானி

 

 சாமியார், இது அவரது பெயரல்ல..ஊரவர் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.. ஒற்றைக் கூரை போட்ட குடில் ..அவர் வாசஸ்தலம்… குடிலைச் சுற்றிப் பரந்து கிடக்கிறது விளைநிலம்.. கொட்டிலின் கிழக்குப் பக்கத்தில் பெரிய காய்கறித் தோட்டம்…கால்வாயைக் கடந்தால் பெரிய வயல் நிலம்… சாமியாரின் தந்தைவழி முதுசமாய் அவரை வந்தடைந்தவை… அவர் ஒரு இயற்கை விவசாயி…அவரது இடைவிடாத உழைப்பில் செழித்து இருக்கிறது பூமி.. சாமியார் விளைந்தவற்றில் தமக்கு உயிர்வாழ சிறிதளவு எடுத்துவிட்டு மிகுதி அனைத்தையும் ஊர்ப்பாடசாலை மாணவருக்கு மதிய உணவுக்காய் வழங்கிவிடுவார்..அவர்


சாதுர்யப் பேச்சுகள்

 

 புத்திசாலித்தனமும், சாதுர்யமும் எங்கும் எப்போதும் இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்பதுதான் இந்தக் காலத்திற்கான உண்மை!! விதவிதமான சந்தர்ப்பங்களில் விதவிதமான புத்திசாலிகள் விதவிதமாக நடந்துகொண்டு தங்கள் சாதுர்யத்தால் எப்படி நிலைமையைச் சமாளித்தனர் என்று பார்ப்போம்… நாட்டின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றினால் அவர் புது பொதுமேலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். அவர் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கிருந்து பதவி விலகிச் சென்ற பொதுமேலாளர் புதியவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். “ஸார், உங்கள் அறிவுரை எனக்கு என்ன ஸார்?” “இதோ இப்போது உங்களுக்கு மூன்று கடித


அவள் அன்பு தேவதையே

 

 வீதியை நோக்கி பார்த்தபடி முன் வாசல் படிக்கட்டில் இருந்து குருவிகள் ரீங்காரமிடுவதையும் வீதியால் வாகனங்கள் செல்வதையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரகு. வீதியில் வழக்கத்துக்கு மாறாக வாகனங்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. கொரோனா தொற்று நோய் வீரியம் காரணமாக நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. இது தான் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றமைக்கு காரணம். ஆயினும் வழக்கமாக காணக்கிடைக்காத சில குருவியினங்களுடன் பறவைகளின் தொகை அதிகமாகத்தான் காணப்பட்டது. வீதியில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தமையும் வாகன இரைச்சல்


மானுடம் மறையாது

 

 கவிதா பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.எதிர் வெய்யில் சுளீரென்று அடித்தது. மெள்ள நடந்து பஸ் ஸ்டாண்டு ஓரமாக இருந்த கடையில் ஒரு சோடா வாங்கினாள்.மெள்ள குடித்து முடித்து விட்டு புடவை தலைப்பில் வாயை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பாண்டிச்சேரி பக்கத்தில் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறாள். சென்னையை சேர்ந்த அவளுக்கு தினமும் இவ்வளவு தூரம் பஸ்ஸில் வருவது சோர்வை ஏற்படுத்தும்.அது மாணாக்கர்களிடம் கோபத்தை உண்டு பண்ணும் என்று தோன்றியதால் பாண்டிச்சேரி அருகில் தன் தோழியுடன் ஒரு


பொன்வண்டு

 

 (இதற்கு முந்தைய ‘கர்ம பலன்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கர்ம பலன்கள் பற்றி உபநிடதம் விளக்குகையில், ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டுபிடித்து அதை அடைகிறதோ, அதேபோல ஒருவனின் நல்ல கர்மமும் தீய கர்மமும் அவனை அணுகுகிறது என்கிறது. இந்த தற்செயல் ஒற்றுமையை அறிவு பூர்வமாக ஆராய்ந்தார் பிரபல விஞ்ஞானியான கார்ல் யங் (1875-1961). இதற்கு அவர் கொடுத்த பெயர் சிங்க்ரானிசிடி!! (Synchronicity). சிங்க்ரானிசிடி