கதைத்தொகுப்பு: சமுகநீதி

3429 கதைகள் கிடைத்துள்ளன.

பாமர மேதை

 

 மோதரன், சுற்றியிருந்த ஈரத்துண்டு, அவன் இடுப்பில் இருந்து நழுவி, தொடைகள் வழியாக ஊர்ந்து, முழங்கால்களில் ஓடி, தரையில் குதித்து விழுந்தது. அந்த துண்டுக்கு இருந்த நாணம் கூட, அவனுக்கு இல்லை. கிழே விழுந்த அந்த ஈரத்துணி, யாரையும் பார்க்க விரும்பாதது போல் ஒட்டு மொத்தமாய் சுருங்கி சுருண்டு கிடந்தது. ஆனால் அவனோ வாராந்தாவி ருந்து வரும் வெளியாட்களின் நேரடிக் கண்பார்வைக்கு உட்படும் அந்த அறையின் கதவை சாத்தாமலே, அங்கும் இங்குமாய் ஓடினான். பீரோவை திறந்து துணிகளை வீசிப்போட்டான்.


பொருள் மிக்க பூஜ்யம்

 

 அந்த கன்றுக்குட்டி, புலிப்பாய்ச்சலில் காட்டைக் கிழித்தும், காற்றைப் பிடித்தும், பறப்பதுபோல் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரே மலையை, இரு மலையாய்க் காட்டும் மடிப்பு வெளி: மரித்ததுபோல் இறங்குமுகமும், மறுபிறவி எடுத்ததுபோல் ஏறுமுகமும் கொண்ட மலைப்பூமி, இந்த இரு முகங்களுக்கு இடையேயான மலைத்தொட்டில். பூமிப்பெண்ணின் மார்பகமாய் விம்மிப்புடைத்த அந்த மலைப்பகுதியின் ரூபத்தையும், அதற்குத் தாவணி போட்டது போன்ற மேகத்தையும், முக்காடான ஆகாய அரூபத்தையும், எவரும் தத்தம் கற்பனைக்கேற்ப வேறு வேறு வடிவங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். அப்படிக் கற்பித்துக் கொண்டால், மலைகளே


முகம் தெரியா மனுசி

 

 தண்டோராக்காரன், தான் செல்வதற்கு, அந்த குக்கிராம குடிசை மண்டிக்கு தகுதியில்லை என்று கருதியதுபோல், ஊருக்கு புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளித்தபடி, டும் டும் ஒலிகளோடு, திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான். “ஸ்ரீ உத்திரம் திருநாள் மகாராஜா திருமனஸ் அவர்கள், ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால மார்த்தாண்ட வர்மா குலசேகர கிரீடபதி, மன்னை சுல்தான் மகாராஜா, ராஜ்ய பாக்கியோதைய ராமராஜா பகதூர்ஷம் ஷெர்ஜங் மகராஜா, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தேர்விழாவை தரிசிக்க நாளை மறுநாள் வந்து, ரெண்டு


முத்துமணிமாலை!!!

 

 இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது . ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை! இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், போய் நின்று விட வேண்டும் என எண்ணி, வரிசையில், கடைசியில் போய் நின்றாள். அந்த வரிசையில் நின்ற எல்லோரும், கையில் பழங்களும், பரிசுப்பொருட்களும் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த தேவி, கொஞ்சம்


ரம்மியமான காலங்கள்

 

 நான் எழுபதுகளில் திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் படித்து வளர்ந்தேன். டெக்னாலஜியில் டெலிபோன்; மொபைல்; கலர் டிவி; வாட்ஸ் ஆப்; முகநூல் என உலகம் சுருங்கி விட்டாலும், பல நல்ல ரம்மியமான சங்கதிகள் நம்மைவிட்டு விலகி விட்டன. என்னுடைய சிறு வயது முதல் இளமைக் காலம் வரை, எங்கள் ஊரில் பெரும்பாலும் தனி வீடுகள்தான் இருந்தன. பிரிட்ஜ், டிவி, வாஷிங்மெஷின் போன்றவைகள் எங்கள் வீடுகளில் கிடையாது. கிரைண்டர், மிக்ஸி, டூ வீலர் போன்றவையே அப்போது ஆடம்பரம்தான். ஏ.ஸி.யா? அப்படீன்னா என்ன?


ஆலய தரிசனம்

 

 அபிராமியம்மா மீளாத்துயிலில் ஆழ்ந்திருந்தா. வெள்ளை வெளேறென்ற அவவின் முகத்தில் ஒரு நாணயம் அளவு குங்குமப்பொட்டு மிளிர்ந்து கொண்டிருந்தது.நிரந்தரப் புன்னகையொன்று இதழ்கடையில் விரிந்து முகத்தை மேலும் பொலிவுபடுத்தியது. வாழ்வினை நிறைவாக அனுபவித்துப் பூர்த்தியாக்கிச் சுமங்கலியாகப் போகிறேன் என்ற நினைப்பு அவரது புன்னகைக்குக் காரணமாகலாம். இந்தக் காலத்தி பூட்டப்பிள்ளையைக் காணும் வரை வாழ்வது சாதாரண காரியமா? அதிக நோயாலும் அறுபது ஆண்டுகளாகத் தம் ஜீவனோடு கலந்து விட்டவளின் பிரிவைத் தாங்க முடியாமலும் உண்டான துயரங்களைத் தன்னுள் அடக்கி அந்த நினைவுச்


பேருந்தில் வந்த பேரழகி

 

 அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பியபோது எனக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நண்பன் பிச்சமுத்து. “வாடா, ஏன் தாமதம்..?” என்றான். “அலுவலகத்துல எனக்கு மேலே இருந்த அதிகாரி திடீர்னு வேலையை ராஜினாமா பண்ணிட்டார். இப்ப எல்லா வேலையும் என் தலையில விழுந்துடுச்சு.” என்றவாறே காலணிகளைக் கழற்றினேன். “அப்ப உனக்கு கூடிய சீக்கிரம் பதவி உயர்வு கிடைக்கப்போகுதுன்னு சொல்லு.” என கிண்டலடித்தான் பிச்சமுத்து. “அதெல்லாம் அவ்வளவு லேசுல கொடுத்துடமாட்டானுங்க. மாடு மாதிரி உழைக்கணும்…” என்று நான் சொல்லிக்கொண்டே நாற்காலியில் அவனுக்கெதிரில் அமரவும்,


ஸுசீலா எம்.ஏ.

 

 நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா? ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள்.


வைர மோதிரம்

 

 1 ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரசரவென்று போய்க் கொண்டிருந்தன. அந்த வண்டியில் அமர்ந்திருந்த கனதனவான்களுக்கு மட்டும், அப்போது ராஜாராமனுடைய மன நிலைமை தெரிந்திருந்தால், அப்படி அலட்சியமாய் போயிருப்பார்களா? அன்றிரவு அவர்களால் கவலையின்றித் தூங்கியிருக்க முடியுமா? சுருங்கச் சொன்னால், அப்போது ராஜாராமனுடைய உள்ளம் ஒரு லட்சம் செங்கல்லை வேகவைக்கக்கூடிய காளவாயைப் போல் எரிந்து கொண்டிருந்தது. அந்தத்


மாடத்தேவன் சுனை

 

 முன்னுரை ராமநாதபுரம் ஜில்லாவில் நடைபெறவிருந்த ஓர் ஆண்டு விழாவுக்காக நான் ரயில் ஏறிப் பிரயாணம் செய்ய நேர்ந்தது. அப்போது நாடெங்கும் தண்டவாளம் நகர்ந்து ரயில் வண்டி கவிழ்ந்தது பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த காலம். எனினும் நான் ஏறிய அதே ரயிலில் ஒரு கனம் மந்திரியும் ஏறியிருக்கிறார் என்ற தைரியத்தின் பேரில் கவலையற்றிருந்தேன். ‘தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு.’ என்னும் திருவள்ளுவரின் திருவாக்கைக் கடைப்பிடித்து நம் மந்திரிமார்கள் உறக்கமின்றி, தேச நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்