கதைத்தொகுப்பு: சமுகநீதி

3422 கதைகள் கிடைத்துள்ளன.

ஏக்கக் கடல்

 

 ‘இன்னும் கினோவும் ஜீனோவும் கடலையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். கடலின் மேல் பரப்பு ஒரு பச்சைக் கண்ணாடி போல் பளபளக்கிறது. மிகுந்த துயரத்துடன் அவர்கள் வீசி எறிந்த அற்புத முத்து, கடல்பாசிகளுடைய நெளிந்த அழைப்புக்கு இடையில் மணலில் புதைகிறது. ஒரு நண்டின் நகர்வு உண்டாக்கிய மணல் மேகம் சிதறி அடங்குவதற்குள், முத்து காணாமல் போயிருந்தது. இதுவரை கேட்டுக்கொண்டே இருந்த முத்தின் சங்கீதம் சிறுத்து மெள்ள மெள்ள ஓய்கிறது…’ ஜான் ஸ்டீன்பெக்கின் ‘கடல் முத்து’ என்கிற குறுநாவலை நேற்று படித்து


கணக்கர் கடவுள்!

 

 இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது. அவசரப் பயணம் என்பதால் மதிப்புள்ள சாமான்கள் எதுவும் கொண்டு செல்ல வில்லை. கஸ்டம்சில் நேரம் எதுவும் வீணாகவில்லை. ஆனாலும் சென்னைக்கே உரித்தான ரௌடிகளின் மிரட்டல், விமான நிலையத்திலேயே ஆரம்பித்து விட்டது…. “அந்த ஆபிசர்


உருவத்தைத் தாண்டி

 

 ‘க்ளிக்!’ கறுப்புத் துணிக்குள்ளிருந்து தலையை வெளியே இழுத்த மாணிக்கம் நீண்டதொரு பெரு மூச்சு விட்டான். எதிரே பெரியவர்களும் குழந்தைகளுமாய் உட்கார்ந்திருந்த கூட்டம் எவ்வளவு தூரம் அவன் பொறுமையைச் சோதித்துவிட்ட தென்று அவனுக்கல்லவா தெரியும்! ஒரு நிமிஷம் அமைதியாய் உட்கார்ந்த கூட்டம் இப்போது சலசலத்துக் கலைந்தது. “படம் சரியாய் வந்திருக்குமில்லே?” என்றார் ஒரு நடுத்தர வயதினர் “அதைப் பத்திக் கவலையை விடுங்க!” “எப்போ கொடுப்பீங்க படத்தை?” இது ஒரு பெண் மணி. வேறு யார் இவ்வளவு அவசரப்படுவார்கள்! “நாளை


காற்று வெளியிடை…

 

 சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான். ‘சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து “என்ன சாகுல் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரிய


முனைவர்

 

 “பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக சாலையில் இறங்கிக்கொண்டாள். “அம்மா, நீங்க சொல்ற இடம், ரெயில்வே கேட்டை தாண்டி போனா வரும்னு நினைக்கிறேன். விசாரிச்சு போயிக்கங்கம்மா!” என்றார் நடத்துனர். “ரொம்ப தேங்க்ஸ் சார்!” என்றாள் நிவேதிதா. ‘இது தான் பழங்காநத்தத்துக்கு முந்தின ஸ்டாப்பிங். முதல்லயே கண்டக்டர் கிட்ட சொல்லி வெச்சது நல்லதாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள். மதுரை வெயில் சூடேறிக்கொண்டிருந்தது. ‘நீ ஒண்ணும் சிரமப்படவே


சன்னலொட்டி அமரும் குருவிகள்

 

 இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா ஏர்லைன்ஸில் முதன்முறையாக அவனைக்கண்டு தமிழில் பேசப்போக அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டாவது முறை. சூப்பர் மார்க்கெட்டொன்றில் வாங்கியப்பொருட்களுக்கானப் பணத்தைச் செலுத்தவென்று வரிசையில் காத்திருந்தபோது பார்த்திருந்தான். வரிசையில் நின்று ஒரு காரியத்தைச் செய்வதென்பது இவனுக்குப் பிடிக்காத விஷயம், அந்த எரிச்சலில் அவனிடத்தில் அக்கறை காட்டவில்லை. இவனுடைய நிறத்தில் யாரையாவதுப் பார்க்கச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தவிர மொரீஷியர், பாகிஸ்தானியர்,


நட்பே! உன் அன்பிற்கு நன்றி…

 

 மதியழகி, அம்மா, அப்பா, என்று அழகான சிறு குடும்பம் மதியழகியை சுருக்கமாக மதி என்று அழைப்பார்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மதியழகியின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். மதியழகி தன் அப்பா அம்மாவுக்கு ஒரே செல்ல பெண். மதியழகியால் அப்பாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்லூரி போகாமல் வீட்டிலியே அடைபட்டுக்கிடந்தாள் . தன் தோழிகள் , அம்மாவின் ஆலோசனைகளை கேட்டு மதியழகி கல்லூரிப்படிப்பை முடித்தாள். மதியழகிக்கு இன்டர்வியூவில் தேர்வு செய்து ‘அமெரிக்கா’ வில் வேலைகிடைத்தது. வெளிநாட்டிற்கு செல்வதனால்


சைக்கிள்

 

 வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க முடியாத வகையிலும் வசைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன. பக்கத்துத்தெரு சண்முகத்தின் மனைவிதான், ரூபவதியின் கணவனோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் ஒரு பத்து பதினைந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால்


நாசகாரக் கும்பல்

 

 அம்பி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். எதிரே சேறும் சகதியுமாயிருந்த வராகக் குளத்தை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். எதற்காகத் தூர்க்கவேண்டும், சேறும் சகதியுந்தானே வராகருக்கு ஏற்றதொரு இடம் என்று நினைத்தான் அம்பி. ஆனால் பாசி படர்ந்த அவ்விடத்திலிருந்து புறப்பட்டு ஊரில் வியாதியைப் பரப்பும் கொசுவுக்கு வராகர் ஒரு வழி செய்வாரானால், அவர் உவக்கும் இடத்தை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்… “கொசு ஓர் அரக்கன்; அவனை அழிக்க ஒரு புது அவதாரம் தேவை…’ அம்பியின் கற்பனை அவனுக்கே சிரிப்பைத் தந்தது.


ஆறுமுகசாமியின் ஆடுகள்

 

  ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி போட்டுக்கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆடுகள் வாய்க்கால் மேட்டிலிருந்து இறங்கி சின்னபண்ணையை நோக்கிச் சென்றன. “தோ…தோ…” ஆறுமுகசாமி ஆடுகளைப் பார்த்துக் கத்தினான். அவன் குரல் சின்னபண்ணை தோட்டத்தை நோக்கிச்சென்ற ஆடுகளுக்குக் கேட்டதுபோலும்.