கதைத்தொகுப்பு: சமுகநீதி

3429 கதைகள் கிடைத்துள்ளன.

ஜூனியர் ஆர்டிஸ்ட்

 

 தானொரு சிறந்த நடிகராக வேண்டும் என்பதே சத்தியனின் லட்சியம். வெள்ளித்திரையில் தனது முகம் தெரிந்து விடாதா? என்று ஏங்கும் ஒரு சராசரி மனிதன் மட்டுமல்ல, அதற்கான உழைப்பையும் விடாமுயற்சியையும் தன்னகத்தே கொண்டவன். அவனுடைய முக்கிய மற்றும் முதலாவது வேலை, புதிய படங்களை தயாரிக்கும் அலுவலகம் திறந்த உடனே அதற்கான ஆடிஷனில் கலந்துகொள்வது தான். பல ஆடிஷன்கள் கலந்து கொண்டாலும் தன் திறமையை காட்டும் அளவிற்கு கதாபாத்திரம் கிடைக்காததால், சிறு மனக் குழப்பத்துடன் அவன் காணப்பட்டு வந்தான். அவனுக்கு


மேன்மக்கள்!

 

 M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே சேர்ந்தவர். இன்னொன்று அவர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். இப்போது பார்த்து பேசினால் தான் உண்டு. அப்புறம் சொந்த ஊர் போய் விடுவார். பணியில் இருக்கும் போதே அதிகம் ஆடம்பரம் பண்ண மாட்டார். அத்தனை பேரும் பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தார்கள் அவர் வருகைக்காக. ராமசாமிக்கு கையும் காலும் ஓடவில்லை. பழைய நண்பர் அவர்.


ஆண்ட்ராய்ட் அம்மு…!!!

 

 அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் போட்டுக் கொண்டு , மஞ்சள் நிற பஸ்ஸிலிருந்து “டார்லிங் அச்சம்மா…! என்று இரண்டு கையையையும் நீட்டி அவளைக் கட்டிக் கொள்ளும் பேத்திக்காக அவள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார்…. இதைவிட வேறேன்ன சுகம் இருக்க முடியும்….??? வழக்கத்தைவிட பஸ் சீக்கிரமே வந்துவிட்டது..ஆதிரையின் நடையில் ஒரு மாற்றம்.. நேராக வந்து பாட்டியைக் கட்டிக் கொண்டு ‘ஹாய்…அச்சம்மா…


ஒரு தேவதையின் குரல்

 

 தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல புகையிரதம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாசலம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இறங்கவேண்டிய இடம் அண்மித்துக்கொண்டுவர அவரது மனதில் பதட்ட உணர்வும் அதிகரித்தது. இந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியிலும், அநுராத. புரத்தில் இறங்க வேண்டியேற்பட்டது தனது கஷ்ட, காலமே என எண்ணிக்கொண்டார். எதிர்பாராமல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங் களினால் தத்தமது சொந்த இடங்களுக்கு ‘ ஏற்றுமதி செய்யப்பட்ட விசித்திர அனுபவம் பெற்றவர்களில் அவரும் ஒருவர். (அவர் வேலை செய்கின்ற சிங்களக்.


பயணம்

 

 பெங்களூர் விமான நிலையம். இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன். விமானம் வந்து நின்றதும் அதில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, ஒரு பதினைந்து இந்திய ராணுவ வீரர்கள் வேக வேகமாக வந்து என் இருக்கையைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள். ராணுவ உடையில் அனைவரும் கம்பீரமாகக் காட்சியளித்தனர். கதவுகள் சாத்தப்பட்டு விமானம் மெல்ல ஊர்ந்தபோது, விமான பணிப்பெண்கள் இரண்டுபேர் கடமையே என பாதுகாப்பு


சின்ன மீன் பெரிய மீன்

 

 சரியான போஷாக்கின்மையே தன்னுடைய குழந்தைகளினதும், மனைவியினதும் நோய்க்கான ஒரே அடிப்படைக் காரணம் என்பதை சுந்தரேஸ்வரன் நன்றாகவே அறிவான். எனினும், அதற்கு மாறாக அவனால் எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. எல்லாக் கடன்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் அவனுக்கு கையிலே சம்பளமாக வந்து சேருவது முன்னூற்றி எட்டு ரூபா அறுபது சதங்கள் மட்டுமே. அவனது நான்கு குழந்தைகளும் ஓரமாக ஒதுங்கிப் போய்ப் படுத்திருந்தன. பொழுது இப்போதே இலேசாக விடியத் தொடங்பியிருந்தது. மனைவி ஆனந்தலோசனி கிணற்றடியிலே, கடுமையாக வந்த இருமலை லேசாக


துரோகமான நட்பு

 

 மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அந்த நகரம் இந்த இரவு பதினோரு மணி அளவிலும், வாகனங்கள் குறையாமல் சென்று கொண்டிருந்தன. சென்னைக்கும், உள் தமிழ் நாட்டுக்கும் அது முக்கியமான பாதை ஆதலால் இரவு முழுக்க கூட வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். வாகனங்கள் சென்ற அளவுக்கு எதிர் வினையாக ஆட்கள் நடமாட்டம் சுத்தமாக குறைந்து ஒரு வித தூக்கத்தில் இருந்தது அந்த


க்ளப்

 

 ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம் , உயர் தர சாராயம், டின்னெர், அரட்டை எல்லாம் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரம் . எங்கும் கோலாகலம், சந்தோஷம், சிரிப்பு, பணத்திமிர், குடிபோதை. ஒரு ஓரத்தில், கிட்டத்தட்ட பத்து பேர் அமர்ந்து உயர் தர விஸ்கியை உள்ளே தள்ளியவாறு கதை அடித்துக் கொண்டிருந்தனர். முதலாளிகள், பண முதலைகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபதிகள். பேச்சு பண


இரவு வெளிச்சம்

 

 இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஓவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான முடிவையொத்த பல கதைகள் நேர்ந்திருக்கலாம். சில கதாரிசியர்கள்கூட ஒரேவிதமான கற்பனைகளைக் கொண்ட வேறு வேறு கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… எனது கதையொன்றை சினிமாப்படமாக்கிய இயக்குனர் ஒருவர், பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால் இது அவரது கதையல்ல… எனது


புலியும் பூனையும்..

 

 கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி வியர்வையில் ஊறியிருந்தனர். பெண்களின் கை இடுக்குகளில் வெண் சாம்பல் பூத்திருந்தது. சிலரது கன்னக் கதுப்புகளில் இடம்பெயர்ந்து, கண்மை. பின்னல்களில் பழுத்துக்கிடந்த மல்லிகைச் சரம். ஒழுங்குபடுத்தப் படாத போக்குவரத்து, ஆதில் நீரில் விழுந்து கரையேற முயற்சிக்கிற நாய்களைப்போல வாகனங்கள். இஞ்சி, புதினா, பச்சைக்கற்பூரம், ஸ்டிக்கர்பொட்டு, வளையல், உள்பாடி, பனியன், ஜட்டி, சாமி சரணம், பணம் அள்ள பத்துவழிகள்,