கதைத்தொகுப்பு: சமுகநீதி

3479 கதைகள் கிடைத்துள்ளன.

செந்தமிழ் நாட்டிலே

 

 “எழுத்தாளன் பிழைக்க வேண்டுமானால் அவன் எண்ணமும் எழுத்தும் ஒன்றாயிருக்கக் கூடாது; எண்ணம் வேறு, எழுத்து வேறாய்த்தானிருக்க வேண்டும். இல்லையானால் அவன் வாழப் பிறந்தவனல்ல; சாகப் பிறந்தவன்!” இந்த அபிப்ராயத்தைத் திருவாளர் சதானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. “கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக எண்ணத்தையும் எழுத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டேன். தம்பி! இது செத்தவர் வாழும் தமிழ்நாடு; நானும் செத்தபின் வாழ்வேன்” என்பார் அவர். “வயிற்றுப் பிழைப்பைக் கேவலமாக நினைக்கும் இவர் வாழ்ந்த மாதிரிதான்” என்று நான் எண்ணிக் கொள்வேன். ஏனெனினல்


சுயநலம்

 

 வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி, மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்! காலையில் எழுந்ததும் வேலப்பன் கடை வீதிக்குச் சென்று சில தேக்குமரத் துண்டுகளையும், பிரம்புக் கத்தைகளையும் வாங்கி வருவான். தேக்குமரத் துண்டுகளை அறுத்து, இழைத்து கூர் வாங்கி கட்டில்களாகச் செப்பனிடுவது வேலப்பனின் வேலை. பிரம்புகளை யெல்லாம் பிளந்து கட்டில்களுக்குப் படுக்கை பின்னி விடுவது வேலப்பனின் மனைவியான முருகாயியின்


ஏழையின் குற்றம்

 

 சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளைச் சிலர் தங்கள் குல வித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா? அதுபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி. அவன் அப்பன், பாட்டன், அந்தப் பாட்டனுக்குப் பாட்டன் எல்லாம் சீதாராமச் செட்டியாரின் முன்னோர்களிடம் பரம்பரை பரம்பரையாகவே கூலி வேலை பார்த்தவர்கள். செட்டியார் கடைக்கு வந்து இறங்கியதும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடை உள்ளில் அடுக்குவான்.


வாழப் பிறந்தவன்

 

 “ஏ, குழந்தே” என்று இரைந்தான் இருளப்பன். “என்னப்பா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் கேதாரி. “ரொம்ப நாளா உன்னை ஒண்ணு கேக்கணும் கேக்கணும்னு எனக்கு எண்ணம்…” “கேளேன்” “உன்னைப் பத்தி ஊரிலே நாலு பேரு நாலு விதமாப் பேசிக்கிட்டு இருக்காங்களே அதெல்லாம் நெசந்தானா?” “என்ன பேசிக்கிட்டு இருக்காங்க?” “ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் நீ பார்க்கிறயாம், பார்த்துச் சிரிக்கிற யாம், கூடிப் பேசறியாம் – இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்களேம்மா, இதெல்லாம் நெசமான்னு கேக்கறேன்?” கேதாரி களுக்கென்று சிரித்தாள்.


திக் திக் திக்

 

 சவூதி அரேபியாவின் ஜூபைல் நகரிலிருந்து ஒரு இருபத்தெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபுஹத்ரியா என்ற இடத்தின் அருகில் சுற்றிலும் பாலைவனத்தால் சூழப்பட்ட எந்திர ஆய்வாலை அது. நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அங்கு பணி எதுவும் ஆரம்பிக்கப்படாமல் சுமார் ஆறுமாதங்கள் ஆலையை முழுமை செய்யும் கட்டுமானப்பணிகளும் அதன் மேற்பார்வைகளும் சென்றுகொண்டிருந்தன. அனைவரும் பகலில் வேலைக்குச் செல்வதும் மாலை வீடு திரும்புவதும் வழக்கம். இரவில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மட்டும் வாசலில் ஒரு சிறிய அறையில் இருப்பார். ஆறுமாதம்


சமரசம்

 

 கால்ஷீட் எல்லாம் பேசி முடித்து, சம்பளத்தொகையும் பேசி முடிக்கப்பட்டபின் அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காக தயாராக டேபிளின் மேல் வைத்திருந்த ஒயின் கிளாசை தூக்கி பிடித்து காட்டினான் ஷியாம். எதிரில் இருந்த தயாரிப்பாளர் தனபாண்டியன் தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு நான் வருகிறேன் என்று திரும்பினார். என்ன சார்? நீங்க கலந்துக்கலையா? இல்லை சார் ஒரு இடத்துக்கு போகணும், தப்பா நினைச்சுக்காதீங்க. பணம் உங்க வீட்டுக்கு வந்துடும். வரட்டுமா, மீண்டும் கை எடுத்து வணங்கி விட்டு கிளம்பினார். சே


மெல்லத் தெரிந்து சொல்

 

 எந்த அப்பாவனு கேட்டுட்டானே இந்த பொடிப்பய. விசயம் என்னவா இருக்கும். மனசு போட்டு குடைந்து தள்ளியது. என்னவோ சென்னைய ரொம்ப ஒழுக்கமான உயர்ந்த இடத்தில வச்சிதான் இவ்ளோ நாள் கோட்டை கட்டிக்கிட்டு இருந்தேன். இங்கயும் இப்டித்தானா. அதிக யோசனையால் தலை லேசா வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. விரலால் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுக் கொண்டே சோபாவில் சாய்ந்தேன். என்ன டீச்சரம்மா இன்னிக்கு ஸ்கூலயே தலையில வச்சி கொணந்த மாதிரி இருக்கீங்க. கேட்டுக்கொண்டே பக்கத்தில் அமர்கிறார் கணவர். சொல்லவா வேண்டாமா? யோசித்தேன். அதற்குள்


அலைகளால் அழியாத தூசு..!

 

 கழுத்துவரைபோர்வை போர்த்தி சோர்ந்து, சுருண்டு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த 30 வயது இளைஞன் இனியன் மல்லாந்து படுத்து கண் விழித்தான். மூங்கில், தென்னங்கீற்றுகளிலான கூரை பார்வையில் பட்டது. அப்படியே கண்களை இறக்கி நோட்டமிட்டான். செம்மண் சுவர்களாலான குடிசை புரிந்தது. வாசல் திறந்திருக்க வெளியே…. “லெமூரியாக் கண்டம் எனும் குமரிக்கண்டம். ஆழிப் பேரலைகளால் அழியப்பட்ட பெரும்பூமி. இது….பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது…..”படிக்கும் சிறுமியின் குரல் கேட்டது. “அறம் செய விரும்பு. ஆறுவது சினம்…”ஆறு வயது சிறுவனின் குரலும் சேர்ந்து கேட்டது.


கிளி பேசுகிறது!

 

  அந்த பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் எத்தனையோ விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள்! இலைகளில்தான் எத்தனை யெத்தனை வகைகள்; மலர்களில்தான் எத்தனை யெத்தனை நிறங்கள்; மணங்களில் தான் எத்தனை யெத்தனை விதங்கள்; கனிகளில்தான் எத்தனை யெத்தனை சுவைகள்! அம்மம்மா! அவற்றின் அழகை மனதினால்தான் உணர முடியுமே தவிர, வாயினால் விவரிக்கவே முடியாது. எல்லோருக்கும் பொதுவாக இயற்கை அளிக்கும் அந்தச் செல்வத்தை பங்களாவில் குடியிருந்த ஒரு சிலர் மட்டும் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.


காரியவாதி

 

 விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து நாட்களாகிவிட்டன. இதன் காரணமாக அவனுடைய மனைவியான பொன்னி கண்ணயர்ந்து ஒரு வார காலமாகி விட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் “என்னுடைய வயிற்றுக்கு வழி என்ன?” என்று அவர்களைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை. இவர்களுக்கெல்லாம் கார்டியனாக இருந்தது ஒரே ஒரு கறவை மாடு. எஜமானும் எஜமானியும் தன்னை எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்கச் செய்தாலும், அது இயற்கையாகக் கிடைக்கும் புல் பூண்டுகளை மேய்ந்து விட்டு வந்து, வேளைக்கு