கதைத்தொகுப்பு: சமுகநீதி

3481 கதைகள் கிடைத்துள்ளன.

சண்டையும் சமாதானமும்

 

 ஆம், அந்த ‘முடிவில்லாத சண்டை’ நடந்து கொண்டே தான் இருந்தது! அவை இரண்டில் ஒன்று அழியும்வரை அந்தச் சண்டை தொடர்ந்து நடந்தாலும் – நடக்கட்டும்; நடக்கட்டும்; அவற்றின் அழிவைப் பார்த்தபிறகாவது மற்ற ஜீவராசிகளுக்குப் பலாத்காரத்தில் உள்ள நம்பிக்கை தொலையட்டும்! நல்ல வேளை! நானும் ரங்கனைப் பின்பற்றியிருந்தால்? சரி, கதையை முழுவதும்தான் கேளுங்களேன்! *** நாங்கள் வசித்து வந்த மாந்தோப்பில் எங்களைப் போல் எத்தனையோ கிளிகள் வசித்து வந்தன. நானும் ரங்காவும் அடுத்தடுத்து இருந்த மரப் பொந்துகளில் வசித்து


பிழைக்கத் தெரியாதவன்

 

 நள்ளிரவு; தங்களையும் கொன்று தின்னத் துணிந்து விட்ட சீனர்களுக்கு அஞ்சியோ என்னமோ, நாய்கள் கூடக் குரைப்பதை நிறுத்தி விட்டிருந்தன. அந்த நிசப்தமான வேளையிலே, திடீரென்று ஓர் அலறல்; “ஐயோ, போச்சே! ஒரு மாதச் சம்பளம் பூராவும் போச்சே!” கேட்போரின் நெஞ்சைப் பிளக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவனின் இந்த அலறல் மாடி அறையில் உட்கார்ந்து, அடுத்தாற்போல் மந்திரி பதவியை அடைவதற்கான வழி வகைகளைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த தியாகி தீனதயாளரின் காதில் விழுந்தது – ஆம், அவர்


படித்தவர்கள்

 

 நடுப் பகல் நேரம்; காசாம்பு கொண்டு வந்த கஞ்சிக் கலயத்தைக் காலியாக்கிவிட்டுக் களத்து மேட்டுக்கு வந்தான் கண்ணாயிரம். அங்கே அவன் கண்ட காட்சி…… எந்த வேலையைத்தன் மகன் செய்யக் கூடாது என்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுப் படிக்க வைத்தானோ, அந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தான்! அதாவது, தந்தை விட்டுவிட்டு வந்த ஏரைப் பூட்டி, மாட்டை விரட்டி உழுது கொண்டிருந்தான் மகன். “ஏண்டா, முருகையா! இந்த வேலை செய்யவா உன்னை நான் படாத பாடு பட்டுப்


கலையும் வாழ்க்கையும்

 

 ஒளிப்பதிவாளர் ஒன்பதாவது கொட்டாவியை விட்டு விட்டு, ஐந்தாவது காப்பியின் துணையுடன் பத்தாவது கொட்டாவியை விரட்டப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போது, ‘மேக்-அப்’ அறையை விட்டு வெளியேறிய குமாரி கும்கும், பாட்டி பவனாம்பாளுடன் ‘செட்’டுக்குள்ளே பிரவேசித்தாள். அஜந்தாக் கொண்டை – அசல் அல்ல, போலி; அந்தக் கொண்டையைச் சுற்றிலும் முல்லை அரும்புகள் – அசல் அல்ல, போலி; காதன வோடிய கண்கள் – அசல் அல்ல, போலி; கனிவாய் இதழ்கள் – அசல் அல்ல, போலி… ஒரு


நாளை நம்முடையதே

 

 வழக்கம்போல் வேலை தேடித்தரும் நிலையத்திற்குச் சென்று, வழக்கம் போல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த வைகுந்தன், வழக்கம்போல்துண்டை விரித்துப் போட்டுச்சத்திரத்தில் படுத்தான். அப்போது கையில் காலிக் கப்பரையுடன் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த கைலாசம், “நண்பா, சாப்பிட்டு நான்கு நாட்களாகி விட்டன; இன்றும் ஒரு பருக்கை கூடக் கிடைக்க வில்லை!” என்றான் பெரு மூச்சுடன். “கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!” “கட்டத்துணியில்லை; வாங்கக் காசில்லை…” “கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!” “படுக்கப்பாயில்லை; இருக்க நமக்கென்று ஓர் இடமில்லை…” “கவலைப்படாதே


ஏசு நாதரின் வாக்கு

 

 வழக்கம்போல் காலை எட்டு மணிக்கெல்லாம் தம்முடைய ‘நர்ஸிங் ஹோ’மிலிருந்த நோயாளிகளைப் பார்வையிடுவதற்காக ஞானப்பிரகாசம் கிளம்பிக் கொண்டிருந்தபோது, “இன்னும் எத்தனை நாட்கள்தான் உங்கள் நர்ஸிங் ஹோமையும் வீட்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டாள், அவருடைய மனைவி அற்புதம். “பொழுது விடிந்தால் இந்தப் பல்லவிதானா?” என்றார் டாக்டர், தம்முடைய வழுக்கைத் தலையைத் தாமே தடவிப் பார்த்து ரசித்தபடி! “உங்களுக்கென்ன தெரியும்?-நேற்றுக்கூட என்னை ஒரு நோயாளி கேட்டார், ‘நீங்கள் எத்தனை நாட்களாக இங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன


இரு திருடர்கள்

 

 அன்று ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்து மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் மாந்தோப்புக்குப் போய்விட வேண்டும் என்று நேற்றே சொல்லி வைத்த பீட்டரை இன்னும் காணோமே? என்ற ஏமாற்றம் இன்னொரு பக்கம் – இவையிரண்டுக்கும் இடையே தவித்தபடி, அவன் வரும் வழி மேல் விழி வைத்துக்கொண்டிருந்தான் டேவிட். அவனைக் காணவில்லை; காணவேயில்லை. தன் வீட்டுக்கு நேர் எதிரேயிருந்த மாதா கோவிலின் மணிக் கூண்டைப் பார்த்தான் டேவிட், மணி இரண்டு! காவற்காரன் சாப்பாட்டுக்குப் போயிருக்கும் சமயத்திலல்லவா அவன் கை வரிசையைக் காட்ட


கொண்டு வா, நாயை!

 

 அன்று என்னவோ தெரியவில்லை; கம்பெனிக்கு வந்ததும் வராததுமாயிருக்கும்போதே, “கொண்டு வா, நாயை!” என்று என்னை நோக்கி இரைந்து விட்டு, மடமடவென்று மாடிக்குப் போனார் முதலாளி. முதலாளி என்றால், முதல் உள்ள முதலாளி இல்லை ; முதல் இல்லாத முதலாளி! ‘முதல் இல்லாத முதலாளியும் இந்த உலகத்தில் உண்டா?’ என்று நீங்கள் மூக்கின்மேல் விரலை வைக்காதீர்கள் உண்டு; வேறு எந்த உலகத்தில் இல்லா விட்டாலும் எங்கள் சினிமா உலகத்தில் நிச்சயம் உண்டு! ஆனால், இந்த ‘முதலாளி’ என்ற ‘பட்டம்’


செய்ததும் செய்வதும்

 

 தனக்கு உலகம் தெரிந்த நாளிலிருந்தே அவன் அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் – அவன் என்றால் அது அருணாசலத்தைக் குறிக்கும்; அவர் என்றால் அது பாங்கர் வேங்கடாசலபதியைக் குறிக்கும். பாங்கர் வேங்கடாசலபதியின் பங்களாவுக்குப் பக்கத்தில்தான் அருணாசலத்தின் பன்றிக் குடிசை இருந்தது – ஆம், பன்றிக் குடிசைதான் – யாரோ பன்றி வளர்ப்பதற்காகப் போட்டு வைத்திருந்த குடிசையை அவர்கள் ஐம்பது ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் – ஐம்பது ரூபாய் என்றால் அவர்களுக்கு லேசா? – அதற்காக நம் மத்திய


பதவி

 

 டண்டண், டண் டண், டண் டண், டாண் டாண்! “வயிறு பன்னிரண்டு மணிக்கே சாப்பாட்டு மணி அடித்து விட்டது; இவன் என்னடா வென்றால் ஒரு மணிக்கு அடிக்கிறான்!” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த ‘ஸ்டிக்’கைக் ‘கே’ஸின் மேல் வைத்து விட்டுக் கையைக் கழுவுவதற்காகக் குழாயடியை நோக்கிச் சென்றான் கதிர்வேலு. “எத்தனை மணிக்கு அடித்தால் என்ன, நம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதானே?- செய்தால் கூலி; செய்யாவிட்டால் வயிறு காலி!” என்று சொல்லிக்கொண்டே அவனைத் தொடர்ந்தான் கோவிந்தசாமி. “ஆமாமாம், நாமெல்லாம்