கதைத்தொகுப்பு: சமுகநீதி

3667 கதைகள் கிடைத்துள்ளன.

அன்றாட விட்டில்கள்

 

 வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள். ‘இன்னும் ஏன்யா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க? போய்யா, போய் எங்கியாவது நாலு காசு தேத்திக்கிட்டு வாய்யா!…வயிறு ரெண்டு நாளா தண்ணியைத் தவிர ஒண்ணும் காணலய்யா!…’ ‘…’ ‘நீ ஆம்பள! உனக்கு எங்கியாவது எதாவது கெடச்சுடும். இந்தப் புள்ளிங்களப் பாரு. சுருண்டு, சுருண்டு தூங்குதுங்க. இப்படியே உட்டோம், செத்துரும்.’ முருகன் குத்துக்காலிட்டுக் கொண்டு பீடி புகைத்தான். அவன் காதில் செருகி


தேயிலைத் தோட்டத்து பெரியதுரை கொலை

 

 கண்டியில் இருந்து நுவெரேலியாவுக்கு போகும் வளைந்த A5 மலைப் பாதையில் 45 கிமீ தூரத்தில் புசெல்லாவா கிராமம் அமைந்துள்ளது பாதையில் இரு பக்கத்திலும் பச்சம் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களும் ரம்போட போன்ற நீர்வீழ்ச்சிகளும் கண்களை கவரும் . அந்த புசெல்லாவா கிராமத்தில் 500 தொழிலார்களை கொண்ட ஸ்டெல்லேன்பேர்க் (Stellenberg) தேயிலை தொட்டம் உள்ளது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அனேகர் தமிழ் நாட்டில் இருந்து கண்காணி முறையினால் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் . ஒரு அறை


பரிசுப்பொருள்

 

 பத்து வயதான வாசு பரபரப்பாக வண்ண காகிதங்களை கொண்டு எதையோ செய்து கொண்டிருந்தான். முகத்தில் வியர்வைத் துளிகள், சட்டை நனைந்திருந்தது. அடிக்கடி தன் அறைக் கதவைப் பார்த்துக் கொண்டான். அம்மா வந்துவிடப் போகிறார்கள் என்ற பயம்! எழுந்து போய்க்; கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தான். பின்னர் மீண்டும் தரையில் அமர்ந்து தன் வேலையைத் தொடங்கினான். எதையோ மறந்து விட்டவன் போலத் தன் பக்கத்தில் இருந்த மடிக்கணினியைத் தட்டினான். அதில் தெரிந்த காணொளியைத் திரும்பப் பார்த்தான், தான்


ஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல்

 

 முகவுரை தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி அவர்களின் ஆன்மா சாந்தி பெற வழிபடுவது மனிதனின் உரிமை . புத்தர் கூட ஆன்மாவுக்கும் எல்லா இனங்களுக்கும் மதிப்பு கொடு என்று போதித்தார். பௌத்த மதம் இலங்கையின் அரச மதம் என்று தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசசியல்வாதிகள் உண்மையில் புத்தரின் போதனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறி . ஆயிரம் சிப்பிக்குள் ஒரு முத்து என்பது போல் ஆயிரக்


அந்தோணியும் கிளியோப்பாத்ராவும்

 

 (1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. அந்தோணியோ : ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசியா நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் – கிளியோப்பாத்ராவின் ஆருயிர்க் காதலன். அவள் காதலால் வீரவாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன். 2. அக்டேவியஸ் ஸீஸர் : மூவருள் ஒருவன் – ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன் – அரசியல் சூழ்ச்சியில் வல்லவன்.மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானாடிய தலைவன்.


குட்டையில் ஊறிய மட்டைகள்

 

 தீவிரவாதிகளின் ஊடுருவலாலும், அவர்களின் சதித் திட்டங்களாலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரத்த பூமியாக மாறி இருந்தது. ஒருபுறம் சதித் திட்டங்களை முறியடிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்தச் செய்தியை வெளியிடுவதை இந்திய ஊடகங்கள் ஒரு சடங்காகவே பின்பற்றி வந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசியல் பத்திரிகை மட்டும் எப்போதாவது இந்த செய்தியை வெளியிட்டது. பத்திரிகை விற்பனையும் குறைந்து போனதால் பத்திரிகைக்குச் சொந்தக்காரரான எதிர்க்கட்சித் தலைவர், ஜம்மு காஷமீர்


பைத்தியங்கள்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவை தேடிவைக்க போவதில்லை. குழந்தைப் பருவத்தில் உருண்டு புரண்டு விளையாடிய மண்ணில் நான் இனிமேல் மிதிக்கப் போவதேயில்லை. “என்னை நீங்கள் ஒரு பைத்தியக்காறணெண்டு நினைக்கலாம். நான் உண்மையிலை ஒரு பைத்தியக்காரன் தான். ஒரு பொருளிலை அளவுக்கு மீறி ஆசை வைத்து, அந்தப்


நாணயம்

 

 காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தபடி இருந்தது. பெண்கள் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் நடந்தனர். டம்ளர் நிறைய சூடான காஃபியுடன் பொறுமையின்றி அமர்ந்திருந்தேன். ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளில் ஒன்றின் பாதையில் காஃபியை வைத்து விடலாமா என்று யோசித்தேன். தண்ணீர் போன்ற இந்தக் காஃபியைக் குடித்து முடிக்கிற வலி அகலும். விருந்தினர் வீட்டில் தரப்படுகிற காஃபியை முடிக்காமல் வைத்து விடக்கூடாது; குறிப்பாக அந்த விருந்தினர் உங்கள் மாமனாராக இருக்கும்போது. அது மரியாதையில்லை. விருந்தினர்


தன்வினை தன்னைச்சுடும்

 

 தான் பொறந்து வளர்ந்து வாழ்ந்த கிராமத்தை நோக்கி ரெண்டு கால்கள் நடந்து கொண்டிருந்தன… நடந்து கொண்டிருந்த பாதையோ சரியான பொட்டல் காடு… சூரியனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சியோ… நன்றாகவே சுட்டெரித்துக்கொண்டிருந்தான் நிலத்தை… கூட பேச்சுத்துணைக்கு கூட யாருமின்றி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தன கால்கள்… சிறிது வயதாகிவிட்ட காரணத்தால் நடையில் ஒரு தடுமாற்றம் இருந்தது… கால்கள் சிறிது சிறிதாக முன்னொக்கிச் செல்ல… மனது அதுபாட்டுக்கு பின்னோக்கி சென்றது… அப்பொழுது இவருக்கு சொந்தமா எக்கச்சக்கமான வயற்காடும் தோட்டமும் இருந்துச்சு… ஊருலேயே


மினிசோட்டாவின் கழுகு மலை

 

 அமெரிக்காவில் பெரிய ஏரிக்கு அருகே உள்ள மினசோட்டாவுக்கு வேலை நிமித்தம் என் குடும்பதொடு சென்றேன், என் மனைவி மாதங்கி மென் பொருள் போரியியலில் பட்டம் பெற்றவள். எங்களுக்கு விக்னேஷ் மட்டுமே ஒரு பிள்ளை. பத்து வயதான அவனுக்கு சிறு வயது முதல் கொண்டே பறவைகள் என்றல் ஆர்வம். பறவைகள் பார்ப்பது அவனின் பொழுது போக்கு. பறவைகள் பார்ப்பது என்பது வனப்பகுதிகளில் இயற்கையான வாழ்விடங்களில் அல்லது நகர்ப்புறங்களில் அவற்றின் மேம்பட்ட வாழ்விடங்களில், ஒருவேளை சொந்த முற்றத்தில் கூட பார்க்கப்படுவதாகும்.