கதைத்தொகுப்பு: சமுகநீதி

2709 கதைகள் கிடைத்துள்ளன.

அந்திம கிரியை!

 

 டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கா,” என்றார். ”இல்ல சார்… சன்னிதி தெருவில் உள்ள நாடார் கடையிலே, ‘டெலிவரி’ பண்ணிட்டு இருக்கும்போது, ஒருவர் மயங்கி விழுந்துட்டாரு… நாடார், உங்களை அழைத்து வரச்சொன்னார்,” என்றார், சிவா. அடுத்த ஐந்தாவது நிமிடம், நாடார் கடையில் இருந்தார், டாக்டர். பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரை பார்த்தவுடன், ‘ஸ்டெதாஸ்கோப்’பை வைத்து, மார்பில் இரண்டு கைகளாலும் அழுத்தி


போர்

 

 எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ஆட்டுவிக்கிறார்கள்?. எப்பொழுது போர் அறிவிக்க போகிறார்கள்? பக்கத்தில் இருந்த ராணி சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்? கேட்டார் ராசா. இல்லை இந்த வெள்ளையர்களை பாருங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிறத்தை பற்றி பெருமை, அதை நாம் மதிக்கவில்லை


தப்புக்கு தண்டனை!

 

 வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள் மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் அம்பலவாணன் மட்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருக்கு சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லை. அவர் முதியோர் இல்லத்தில் வந்து தஞ்சம் அடைந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. அப்போது அவருக்கு பழைய நினைவுகள் வர…. அன்று தன் மகன் சக்தி பத்தாம்


மயானம்

 

 அனைவரின் இருப்பை அழிக்கும் கடைசி இடம். ஓ வென்று இருந்தது, கடைசியாக எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று எரிந்தபடி இருக்க, அருகே உள்ள கொட்டகையில் புல் பூண்டு முளைத்து , பயன்பாடாற்ற கொட்டகையில் ஆடு ஒன்று விளையாடிக் கொண்டு இருந்தது, தன் குட்டியுடன். வெட்டியான் ஈசானம் ஓரமாக அமர்ந்து தனது காலை நேர சிற்றூன்டியை மதிய நேரத்தில் உண்டுக் கொண்டு இருந்தான். அவன் மனைவி தண்ணீர் எடுத்து வந்து வைத்துவிட்டு, யோவ்..காசு இருந்தா கொடுய்யா மதியத்துக்கு குழம்பு வைக்கனும்,


மிதிலாநகர் பேரழகி

 

 சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் சிரமணர் தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்ப துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு பகை அற்றவர் என்றும் கூறலாம். தன்னை இகழ்வோரைக் கோபித்தலும் புகழ்வரைப் போற்றுதலும் இல்லாதவர். அன்பும் அருளும் நிறைந்தவர். இறப்பையும், பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்யவேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர். அது மட்டுமின்றி ஐம்புலன்களையும் தன்வயப் படுத்தியவர். யான்,


படமா?பாடமா?

 

 மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது வழக்கம். புதுப்புது சினிமாவா எடுத்துப்போட்டும் கையிலே நாலு காசுப் பார்க்க முடியலை, என்ன படமா எடுக்கிறானுங்க, நம்ம உசிரைத்தான் எடுக்க்றாஙக என்றும் திட்டுவார், ஏதோ இதை நம்பி ஐந்து குடும்பங்கள் இருக்கே என்றும்,


என்னது இல்லை!

 

 “ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து எடுப்பது குற்றம் போல,நிலத்திலிருந்தும் எடுக்கிறதும் குற்றம் தானே?”…என்ற சிந்தனை கலைத்துக் கொண்டே இருக்கிறது. வீதியில் கிடக்கிற போது ,வெறுமனே கிடக்கிறதே என்று அதனை கடந்தும் போகவும் முடிகிறதா, முடியிறதில்லையே?.”.கனம் கோர்ட்டார் அவர்களே,இலங்கைப் பயங்கரவாதச் சட்டத்தில் எவை,எவையெல்லாம் குற்றங்கள்?அஸ்கிரியப் பீட தேரர்களிடம் கேட்டு, கேட்டுச் தீராத சந்தேகங்களை….எல்லாம் எங்கே தீர்த்துக் கொள்வது.? என்ற அவசரத்தில் ,கழுத்தும் வாங்கி,”அட,கழுத்திலேயும்


சதுரங்க புத்திசாலிகள்

 

 வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடனே அலுவலகத்துக்கு வரும் மகன், அங்கு வந்தவன் அப்பாவின் அந்த நிலையை பார்த்து என்னப்பா? என்ன விசயம்? குரல் கேட்டதும் தன்னிலை பெற்ற மயில்சாமி “மந்திரி சுகவனம்” போயிட்டாராம்மா வருத்தத்துடன் சொன்னார். இதை கேட்ட மயில்சாமியின் மகன் மந்திரி போயிட்டாருன்னா நீங்க ஏம்பா


உழைக்கும் கரங்கள்

 

 உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல உன்னத வரலாறுகள் ஆங்காங்கே ஆழப்பதிந்து காணப்படுகின்றன. அத்தகைய வரலாறுகள்தான் இன்றும்கூட மானிடவியல் வரலாற்றுக்கு அணி சேர்ப்பனவாக உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் நியூரம்போக் பிரதேசத்தின் கிராமமொன்றில் ஒரு ஏழைத்தொழிலாளியின் மகனாகப் பிறந்த அல்பிரெச்ட் டூரர் என்பாரின் வரலாறும் அத்தகைய உன்னதம் மிக்க கதையாகவே கருதப்படுகிறது. டூரர் என்ற அந்த பதினைந்து வயது இளைஞன் அவர்கள் குடும்பத்தின் பதினெட்டு பிள்ளைகளில் ஒருவனாக இருந்தான். அவனின் தந்தை அல்பிரெச்ட் அருகில் இருந்த கல்லுடைக்கும்


தனக்கு மட்டும்

 

 அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு? விசயம் கொஞ்சம் முக்கியந்தான் கட்டிக்கொடுத்த பொண்ணு முழுகாம இருக்கா, அவளை மாப்பிள்ளை வீட்டுல இருந்து வளைகாப்பு பண்ணி கூட்டியாரணும். இது ஏழு மாசம், எப்படியும் இழுத்து புடிச்சு செலவு பண்ணாலும் ஏழெட்டாயிரம் கழண்டிடும். நேத்து