கதைத்தொகுப்பு: குடும்பம்

5055 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

  அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 “வாட்? அப்ப ராஜேஷ் சேலத்த விட்டு வெளியவே போகலயா?” “ஆமாம் மேடம். உங்கள கேட்காமயே இன்னும் சில விஷயங்கள் சேகரிச்சேன். அதுல சில புது விஷயங்கள் கூட கிடைச்சு இருக்கு” “அது என்ன?” “ராஜேஷோட லாஸ்ட் 6 மன்த்ஸ் கால் டீடெயில்ஸ் வாங்குனேன் மேடம். அதுல கடைசி 3 மாசம் அவர் ஃபோன் கால்ஸ் ரொம்ப அதிகமாகி இருக்கு. அதுவும் 4 பேருக்கு தான் ஃப்ரீக்வண்ட் கால்ஸ் போய்


கண்ணம்மா

 

 யாழ்ப்பாணக் குடாநாட்டில், வலிகாமம் வடக்கில், பாக்கு நீரணையைத் தழுவி உள்ள கடலோரக் கிராமம் மயிலிட்டி. ஒரு நெய்தல் நிலக் கிராமம் அக் கிராமம் தமிழ் நாட்டில் உள்ள கோடியக்கரையில் இருந்து தெற்கே 22 மைல் தூரத்தில், பாக்கு நீரணையின் இலங்கைக் கரை ஓரத்தில் அமைந்த கிராமம் என்பதால் அடிக்கடி அவ்வூர் மக்கள் தமிழ் நாட்டுக்குச் சென்று வருவதுண்டு. ஒருகாலத்தில் இலங்கையின் பிரசித்தமான மீன்பிடி துறைமுகங்களில், இரண்டாம் துறைமுகமாய் திகழ்ந்த இடம் மயிலிட்டித் துறைமுகம். மாவீரர்கள் பலர் பிறந்த


நேசம் சுமந்த வானம்பாடி

 

 “என்னங்க உங்கப்பாக்கிட்ட இது வேணுமான்னு கேளுங்க… சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது…” மருமகள் சுந்தரி, உள்ளிருந்து குரல் கொடுக்க “என்னது… ரேடியோதானே… அட அவரு ஆசையா வச்சிருக்காரு… கிடந்துட்டுப் போகுது போ” என்றான் பேப்பரில் இருந்து கண்ணை எடுக்காமல் சுதாகர். “ஆமா… பழசு பட்டையெல்லாம் சேத்துச் சேத்து வச்சிருக்கிறாரு… அவரு மாதிரித்தான் நீங்களும் இருக்கீங்க… பேப்பர் பேப்பரா சேத்து வச்சிக்கிட்டு…” என்று முணங்கியபடி பரணைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சுந்தரி. இந்த


நானும் மனைவியானேன்

 

 நானும் மனைவியானேன். ஒரு நல்ல மனைவியானேன். ஒரு கணவனைப் புரிந்து நடந்துகொள்ளக்கூடிய ஓர் அன்பான மனைவியானேன். கணவன் என்பவன் எப்படிப்பட்ட குணமுடையவனாக இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்ளும் மனைவியானேன். பதின்ம வயது வாழ்க்கையை என்னவென்று அறிந்துகொள்ளாமலேயே அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்த்தப்பட்டுவிட்டேன். அதுக்குள்ள என்ன கல்யாணம் என்ற தோழிகளின் கிண்டலையும் உறவுக்காரர்களின் பார்வையையும் நான் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை. சொல்பவர்கள் எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களின் தன்மை. அவர்களின் பார்வையின் சுமையைவிட என் தோளில்


கழுவாய்

 

 பெண் அலங்கார தேவதையாக சுமதி எதிரில் வந்து நிற்க….தலையைத் தூக்கிப் பார்த்த வெங்கடேசுக்குப் பேரதிர்ச்சி. அரண்டு போனான். குப்பென்று வியர்த்தது. ஒரு சில வினாடிகளில்…. “நீ போம்மா “பெற்றவர் சொல்ல அகன்றாள். “அ….அம்மா.. “அழைத்தான். “என்ன வெங்கிட்டு..”அருகில் அமர்ந்திருந்த மணிமேகலை கேட்டாள். “ஒ.. ஒரு விசயம்..”அவள் காதைக் கடித்து எழுந்தான். மகனின் குறிப்பை உணர்ந்த இவளும் எழுந்தாள். மகன் பின் நடந்தாள். வெங்கடேசு வாசலுக்கு வந்து… கொஞ்சம் மறைவாய் நின்றான். அருகில் வந்த தாயிடம்…. “இந்த பொண்ணு


ஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…

 

 அன்று சுதந்திரத் திரு நாள். நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் முடிந்திருந்தது. பள்ளிக்கூட கொடி ஏற்பு விழாவுக்கு நேரம் ஆகி விட்டதால் மணைவியை அவசரப் படுத்தினார் சிவராமன். “சீக்கிரம் காபியைக் குடு சிவகாமி.மணி ரொம்ப ஆயிடுத்து.நான் நேரத்தோடு பள்ளிக் கூடத் துக்கு போக வேண்டாமா சொல்லு.இன்னிக்கு எங்க பள்ளிக் கூடத்திலே கொடி ஏத்துவாளே.நான் அதுக்கு நேரத்துக்கு போக வேணாமா” என்று சிவராமன் அலுத்துக் கொண்டு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிவகாமி சூடான ‘காபி’யை டவரா


காய்க்காத பூக்கள்

 

 அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 மணிகண்டன் தனியாக வந்து கவிதாவிற்கு ஃபோன் செய்கிறான். “ஹலோ மேம்” “தனியா இருக்கியா மணி?” “யெஸ் மேம்” “எவிடென்ஸ் கலெக்ட் பண்றது மட்டும் இப்ப உன் வேலை இல்ல. கதிரவன் ஆக்டிவிட்டீஸ் அப்சர்வ் பண்ணு. கண்டிப்பா அவர் எதையோ மறைக்கிறாரு” “கதிர் சார் ரொம்ப நல்லவராச்சே மேம்” “நல்லவங்க தப்பு பண்ணாம வேணா இருக்கலாம். ஆனா சட்டத்த மீற மாட்டாங்கனு சொல்ல முடியாது. ஏன்னா சட்டம்


என்னவன்

 

 மாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த பூங்காவின் அழகு மனதில் பேருவகை பெருகச் செய்தது. என்னவனின் இருப்பு என்னை மேலும் சாந்தப்படுத்தியது. என் அருகில் என்னவனனின் கைகளப்பற்றியபடி அவன் தோளில் சாய்ந்திருந்தேன். இளமையில் இருந்த பிடியின் இறுக்கமில்லாது தளர்நது இருந்த கையை மெதுவாக வருடியபடி அவன் முகத்தை கண்டேன். பிடியின் இறுக்கம் மட்டுமே


வாடகை வீடு! – ஒரு பக்க கதை

 

 சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும். சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டின் வாடகை ஐயாயிரமும் மற்றது ஆறாயிரமும் சொல்கிறார்கள். இந்த ஐயாயிரம் சொல்லும் ஹவுஸ் ஓனர் மாடியில் அவர் குடும்பத்துடன் இருந்து கொண்டு கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விடுகிறார். ஆறாயிரம்


காராமணி

 

 ‘அப்பா, அங்கே இருக்கே, அது வாங்கித் தாப்பா ! ஶ்ரீகாந்த் என்னிடம் கோரிக்கை விடுத்தான். ஶ்ரீகாந்தான். கை விரல் நீட்டப்பட்ட திசையில், பலசரக்குக்கடையில் ஒரு மெல்லிய குறுக்குவாட்டுக் கம்பியில் நீளமாய் பொட்டல வரிசைகள் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. ‘எது வேணும்?’ ‘அதோ, அந்த சிப்ஸ் பாக்கெட். அது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்ப்பா. எனக்கு அது தான் வேணும் !’ ‘வேணாங்க. அது ரொம்ப காரம். சிவப்பு மிளகாய் போட்ட காரம். நாக்கு எரியும். வேற எதாவது கேளுங்க’.