கதைத்தொகுப்பு: கிரைம்

225 கதைகள் கிடைத்துள்ளன.

இதோ இன்னொரு மனிதன்

 

 அந்த மண்பாதை சட்டென தன்னை குறுக்கிக் கொண்டு ஒத்தையடி பாதையாக வளைந்து நெளிந்து நீண்டு கிடக்க, உயிர் வலிக்க வெளிவரும் அலறலோடு, கிழிந்த உடையுடன் அவள் காற்றோடு கலந்து காற்றை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்….நான்கு மனிதர்கள்… அவளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்… விரட்ட விரட்ட விரட்டுதல் எளிது என்பது போல……. இரைக்கும் மூச்சை கச்சிதமாக அளந்து கொண்டு ஓடுவதாகத் தெரிந்தது……. காதுக்கெட்டிய தூரம் வரை கண்ணாய் தெரிந்த பூமியில் குதிரையோட்ட தட… தட….. பட…பட…காற்றுப் புரவியோ…? என்று


பரம இரகசியம்

 

 “என்ன சிவம் கையுக்குள்ளை எதையோ மூடிவைத்திருக்கிறாய் எனக்கும் காட்டேன்.” “முடியாது.. அது பரமசிவத்தின் பரம இரகசியம்.” “உன் நண்பன் சந்திரனான எனக்குத் தெரியக் கூடாத பரம இரகசியமா?. உனக்குள் மட்டும் அந்த இரகசியம் இருந்துவிட்டால் அப்படி ஏதும் நடக்கக் கூடாதது ஒன்று உனக்கு நடந்து விட்டால் பிறகு அந்த இரகசியம் ஒருத்தருக்கும் பயன் இல்லாமல் மறைந்து போகும்” “உண்மைதான். ஆனால் நான் கண்டுபிடித்த விஷயத்தை வேறு யாரும் கொப்பியடித்தால் அல்லது பிழையாகப் பாவித்தால்…..” “ சந்திரா. அதுக்குத்


இரவுக் காட்டில் திராட்சை தோட்டம்

 

 கதவை உடைத்துக் கொண்டு உள் செல்கையில் எல்லாம் முடிந்திருந்தது…. வாசுவை மெல்ல இறக்கி.. கழுத்தில் இருந்த கையிற்றை அவிழ்த்தார்கள்…. ஊர் கூடி நின்றது…. “அவனும் எத்தன நாள்தான்… போராடுவான்….? முடியல…! அதான்… கதையை முடிச்சுகிட்டான்…..” என்றபடியே…அவனை நீட்டி படுக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள்… புலம்பினார்கள்… அவனின் பாட்டி ஒப்பாரி வைக்கத் துவங்கியது….. இது பெரும்பாலோர் எதிர்பார்த்த முடிவுதான்….இருந்தும்…. அவன் எப்படியாவது மீண்டு விடுவான் என்றே ஒரு நம்பிக்கை அந்த வீட்டை சுற்றி ஒரு ஆன்மாவைப் போல… சுற்றியது…. ம்ஹும்….


பாலியல் பாதைகள்

 

 ராஜாராமன் சென்னையிலுள்ள அந்தப் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜக்ட் மனேஜர். அவன் மனைவி வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாளை சேவிக்க மூன்று வயதுக் குழந்தையுடன் தன் ஊரான ஸ்ரீரங்கம் சென்றிருந்தாள். மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஜாலியாக தனிமையில் இஷ்டத்துக்கு சுற்றுவதென்றால் அவனுக்கு ஏகப்பட்ட குஷி. அன்றும் அப்படித்தான்… ஏழு மணிக்கு கம்பெனியிலிருந்து வீட்டிற்கு கிளம்பியவன் வழியில் இரண்டு பெக் குடித்துவிட்டு பிறகு சாப்பிட்டவுடன் வீட்டிற்கு செல்லலாம் என நினைத்தான். நங்கநல்லூரிலுள்ள தன் வீட்டிற்கு செல்வதற்குமுன் அருகே ஏர்போர்ட்


கெம்ப ராஜ்

 

 கடிதத்தைப் படித்ததும் அந்தப் பிரபல வங்கியின் மேனேஜருக்கு பயத்தில் வியர்த்தது. உடனே போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு போன் செய்து விவரம் சொன்னார். கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனே கமிஷனர் ஆபீஸுக்கு வரச் சொன்னார்கள். கடிதத்துடன் பெங்களூர் எம்.ஜி ரோடிலிருந்த வங்கியிலிருந்து, இன்பான்ட்ரி ரோடின் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு விரைந்து சென்றார். கடிதத்தைப் படித்த கமிஷனர், “கவலையே படாதீங்க.. இது சும்மா மிரட்டல்தான்.. எதுக்கும் க்ரைம் டி.எஸ்.பி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிரலாம்” என்று இண்டர்காமில் அவரை அழைத்தார். க்ரைம்


சபலம்

 

 மோஹனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் காசாளர் வேலை. பத்து வருட சர்வீஸ். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அதே குறைந்த சம்பளம்.இவனைவிட நிறையப் படித்துவிட்டு வேலையின்றி தெருவில் அலைந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தினந்தோறும் சந்திப்பதாலும் தனக்கு கல்யாணமாகி மனைவி, குழந்தை இருப்பதால் இருக்கின்ற வேலையை தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நின்று விடக்கூடாது என்ற பயத்தினாலும் அவன் சம்பள உயர்வே கேட்டதில்லை. சம்பள உயர்வுகேட்டாலே கொடுக்கத் தயங்கும் முதலாளிகளிடம் கேட்காமல் இருந்தால் எப்படிக் கிடைக்கும்? மோஹனுக்கு ரொம்ப


மானிட வேட்டை

 

 இருட்டில் மூழ்கி இருந்தது அறை. கட்டில் பக்கத்தில் இருந்த பெரிய டிஜிட்டல் வாட்ச் மணி 10.20 எனக் கூறியது. அந்த இரவு நேரத்தில் நிமிட நேர நிசப்தத்தை கூட விரும்பாதவன் போல் பேசினான் ஜன்னல் ஓரம் நின்றிருந்த பரத். “பயமா இருக்கு சித்தப்பா..” இதே வார்த்தைகளை வேறு வேறு உடல்மொழியோடு முன்னமே அவன் சித்தப்பா என்றழைத்த மூர்த்தியிடம் பல முறைக் கூறிவிட்டான். இதே வேறு சூழ்நிலையில் இந்த வார்த்தைகளை அவன் கூறியிருந்தால் தலையில் கொட்டி “டேய்.. எத்தனை


சுழலும் வீடுகள்

 

 கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று பத்திரிக்கைகளில் வெளியானது சென்னை கொசப்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர் விநாயக மூர்த்தி. (வயது 42) இவரது மனைவி வசந்தா (வயது 28). விநாயக மூர்த்தி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நடந்த விபரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது – விநாயக மூர்த்தி மதுரையைச் சேர்ந்தவர்.


பெளர்ணமி நிலவில்

 

 பாஸ்கருக்கு தன் இளம் மனைவி பவானியுடன் ஐந்தாவது மாடியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது மிகவும் பிடித்திருந்தது. புதிதாகத் திருமணமான இந்த ஐந்து மாதங்களாக இரவு உணவு முடிந்ததும் இருவரும் மொட்டை மாடிக்கு வந்து விட்டால் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த பிளாக்கில் குடியிருக்கும் அனைவருக்குமே டெரஸ் சொந்தமானது என்றாலும், மற்ற குடித்தனக்காரர்கள் எவருமே இரவில் அங்கு வருவதில்லை. பகலில் ஏதேனும் துணிகள் காயப்போடுவதோடு சரி. இவர்கள் ஐந்தாவது மாடியில்


இனஸ்பெக்டர் குமார்

 

 குமார் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தான்.ஆனால் அன்றைய மழை சூழல் குமாருக்கு சிறிது தடையை தூவி பெய்து கொண்டிருந்தது. குமார்,மழை பெய்கிறதே சற்று உடற்பயிற்சி மேற்கொண்டு விட்டு செல்லலாம் என நினைத்து உடற்பயிற்சியில் இறங்கினான்.அந்த அளவுக்கு உடற்பயிற்சி பிரியன் அவன். அவனை நீதிமன்ற வழக்கு மனதளவில் பாதித்திருந்தது.இது அவனது 13வது நீதிமன்ற பயணம். நான் ஏன் நீதிமன்றம் போகனும் என தனக்குள் கேட்டு சிந்திக்க ஆரம்பித்தான். அவன் கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது. குமார் ஒன்றும் சாதாரணமானவன் அல்ல அவன்