கதைத்தொகுப்பு: கிரைம்

277 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சலி அய் லவ் யூ…

 

 நான் ஏன் திருடக் கூடாது? வேறு வழி இல்லாமல் எனக்கு அந்த எண்ணம் தோணுச்சு. கேட்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனா உங்களுக்கும் என்ன மாதிரி அழகான காதலி இருந்தால் அதுதான் தோணும். இந்த உலகம் அநியாயங்க. ஒரு பக்கம் நினைச்சுப் பார்க்க முடியாத அளவிற்குத் துட்டு வச்சுருக்கானுங்க. இன்னொரு பக்கம் என்ன மாதிரி அன்னக் காவடிங்க. ஒவ்வொரு நாளும் வாழ்க்கைய நடத்துவதற்குள்ள டங்குவார் அறுந்து போவுது. உண்மையிலே நம்மள ஒருத்தர் படைச்சிருந்தா ஏன் இவ்வளவு வித்தியாசம் வச்சிருக்கணும்?இப்படி


கொலைதூரப் பயணம்

 

 அந்த இரண்டு கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக; ஒன்றை ஒன்று முந்திக்கொண்டும், பிந்திக்கொண்டும் நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து கொண்டு போய்க்கொண்டிருந்தன. உல்லாசப் பயணமாக நானூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கரைனாடு என்ற ஊரை நோக்கி அருணும் அவன் நண்பர்கள் மூன்று பேரும் உற்சாகம் மேலிட பயணித்துக்கொடிருந்தனர். அருணின் காரில் சர்வேஸ்வரன் அமர்ந்திருந்தான். இன்னொரு காரில் செந்திலும்,,சதாவும்,பயணித்தனர். அருணும், செந்திலும், காரோட்டுவதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளும் போட்டி நடந்து கொண்டிருந்த வேளையில் அருணின் கார் ஒரு மூதாட்டியின் கொய்யாப்பழக்


ஒரு குற்றம் தற்கொலை செய்து கொள்கிறது..!!!

 

 ஆஆஆஆ….. பயங்கர அலறல் அந்த அமைதி பள்ளத்தாக்கின் நாலா பக்கமும் எதிரொலித்து பீதியைக் கிளப்பியது ! என் கையில் இருந்த Cannon கேமராவை நழுவ விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டேன்! உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது! ‘ அடப் பாவி! இதற்குத்தான் அந்த கொஞ்சல் கொஞ்சினாயா???? ‘ மறுபடியும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு view finder வழியாகப் பார்த்தேன்! ஒரே கூட்டம் கூடி விட்டது! ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை! என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை!


ரகசிய டைரி

 

 மதன்……மதன்…என்று கூறி கொண்டே வந்தான் வருண். பின் மதனை பார்த்ததும்,மச்சான் வாடா ஜாகிங் போவோம் என்றான்.அதற்கு மதனோ எல்லாரும் காலையில தான் ஜாக்கிங் போவாங்க ஆனா நீ மட்டும் மத்தியானம் இந்த மொட்டை வெயிலை ஜாகிங் போறது மட்டும் இல்லாம அதுக்கு என்ன வேற துணைக்கு கூப்பிடுற என்னடா மச்சான் நியாயம் என்றான். வருணோ மதனை பிடிச்சு இழுத்து வாடா என்றான்.வருணும் மதனும் ஓடி விட்டு சாலையில் ஒரு ஓரமா அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.அங்கு ஒரு டைரி


நீயா !?

 

 அன்று அந்த புகழ் பெற்ற வில்லன் நடிகர் ஜெகன், சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் சத்தியமூர்த்தியின் எதிரே அமர்ந்து தன் மனக்குழப்பத்தைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ஜெகன் நடிகிறார் என்றாலே அப்படம் வசூலில் சக்கை போடு போடும். சமீப காலமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் விஸ்வாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரே வெறுப்பாக வரும் காரணம் புரியவில்லை. விஸ்வா, ஜெகனுக்கு நல்ல நண்பன். கதாநாயகனாக ஜொலித்துக்கொண்டிருப்பவர். “கொலை செய்து விடலாம் போல ஒரு வெறுப்பு ஏன் வரவேண்டும் டாக்டர் ? என்னை குணப்படுத்திக்கொள்ள வேண்டும்”.


அதிகாலை மூன்று மணிக்கு

 

 என் பேரு மணி .நம்ம கூட இன்னைக்கு பேச போறது இன்ஸ்பெக்டர் ஜெகன்.ஒரு மருத்துவர் கொலை வழக்கில் நீங்க செம்மையா குற்றவாளிய கண்டுபிடிச்சிங்க சார்.அதை பத்தி மக்கள் கிட்ட கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் என்றார் பத்திரிகையாளர் மணி. உடனே ஜெகனும், எங்களுக்கு ஒரு போன் கால் வந்திச்சு ஒரு பிணம் பழைய குடோனுல இருக்குனு.நாங்க எங்க டீம்வோட போனோம். விசாராணை பண்ணதுல தான் தெரிய வந்தது அவர் ஒரு மருத்துவர்னு அவர கிட்டத்தட்ட ஒரு வாரமா


மர்மத்தின் மறு பக்கம்

 

 இந்த விளம்பரத்தைப் பார்த்தாயா மீனா? அன்றைய செய்தித் தாளில் வந்திருந்த விளம்பரத்தை என் மனைவியைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். அதில் வந்திருந்த செய்தி இதுதான். “நன்றி.மிகவும் நன்றி. இந்த போட்டோவில் இருப்பவர், எங்கள் உறவினர் ஆவார்கள். எழும்பூர் ரயில் நிலயத்தில் அவர், மாரடைப்பினால் கீழே விழும் தருவாயில்; அவரைத் தாங்கி, தன் மடியில் கிடத்தி முதலுதவி செய்த நபருக்கு எங்கள் குடும்பம் கடமைப் பட்டிருக்கிறது. நன்றி விசுவாசத்துடன் நாங்கள் அந்நபரைப் பார்க்கவும், அவருக்கு எங்கள் காணிக்கைகளைச் செலுத்தவும் விரும்புகிறோம்.


கொள்ளையடித்தால்..?

 

 அக்பருக்குக் கை துறுதுறுத்தது. பத்து நாட்களுக்கொருமுறை கை அரிக்கும். தீனி போட வேண்டும். ‘கையில் மடியில் ஒன்றுமில்லை. ஆக… இன்றைக்குக் காரியம் நடத்தியே ஆகவேண்டும். ! ‘- மனசுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நகர சாலையில் ஆட்டோவை நிதானமாகச் செலுத்தினான். சிறிது நேரத்தில்…. “ஆட்டோ…! “- குரல் கேட்டது. வண்டியை ஓரம் கட்டி நிறுத்தித் திரும்பிப் பார்த்தான். பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் ஏகப்பட்ட பை மூட்டைகளுடன் வயதான தம்பதிகள். ஐம்பது வயது மதிக்கத் தக்கப் பெரியவர்தான் கையை ஆட்டினார். வட்டமடித்து


செம்பு மரங்களின் மர்மம்

 

 முன்னுரை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார்.


பக்கத்து வீட்டுக்காரன்

 

 இன்ஸ்பெக்டர் எதிரில் உட்கார்ந்திருப்பவர்களை உற்றுபார்த்தார். எதை வைத்து உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சரியில்லை என்கிறீர்கள்? சார் எப்பவுமே அந்த ஆள் எங்களோட சுமுகமா இருந்ததில்லை. ஆனா அவங்க சம்சாரம் கொஞ்சம் நல்லா பழகுவாங்க. ஒருவாரமா அவங்களை பாக்கமுடியலை. அவங்க எங்கயாவது வெளியே போயிருக்கலாமில்லையா? அவங்க எந்த விசயமுன்னாலும் அக்கம் பக்கத்துல சொல்லுவாங்க. ஊருக்கு போறத பத்தி யாருகிட்டயும் சொல்லவேயில்லை. சரி அவசர விசயமா அவங்க வெளியூருக்கு போயிருக்க வாய்ப்பிருக்கில்லயா?. சரிங்க சார் அப்படி இருந்தாலும் இந்த ஆள்