கதைத்தொகுப்பு: கிரைம்

288 கதைகள் கிடைத்துள்ளன.

குற்றவாளி யார்?

 

 கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி செய்துவிட்டு உட்கார்ந்தார். அவர் சில வக்கீல்கள் மாதிரி கோர்ட்டின் பச்சாதாபத்தையும், இளகிய ஹ்ருதயத்தையும் எதிர்பார்ப்பவர் அல்ல. கைச் சரக்கும் உணர்ச்சி நாடகமும் இல்லாமல் வெறும் விஷயத்தை மட்டும் விளங்க வைத்துவிட்டு உட்கார்ந்தார். விஷயம், விஷயம், விஷயம். இதைத் தவிர அமிர்தலிங்கத்திற்கு வேறு கவலை கிடையாது. விஷயமும் தர்க்கமும் கேஸை வாதிப்பதற்கு இருக்கும்பொழுது சோக நாடகம் போட


‘நானே கொன்றேன்!’

 

 லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது. அவர் தொழில் – அதுவும் பொழுதுபோக்காகத்தான் – கதை, நாவல்கள் எழுதுவது. எந்தப் பழைய நைந்த விஷயத்தையும் ரஸமாகவும் மனதைக் கவரும்படியாகவும் ஒரு புதிய தோரணையில் தான் எழுதுவார். அதிலே இவருக்கு நல்ல பெயர். ஏன்? புகழும் உண்டு. ஆள் பார்வைக்குக் கம்பீரமான, மனதை அப்படியே தன்னுள் வசீகரிக்கும் தன்மை வாய்ந்த தோற்றம். நாற்பது வயதிருக்கும்


ஜடை

 

 வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை. பார்க்க மோட்டாவாக இருந்தாலும், முதலாளி பொன்னுரங்கத்திற்குத்தான் எத்தனை குழந்தை மனசு! வீட்டிலும் அவனுக்கு அதிக வேலை இல்லை. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும், முதலாளி காரில் போறதும் தான் வேலை. மனைவி செவந்தி இறந்தபிறகு வேலய்யனுக்கு உலகமே இருண்டுபோனது. மனம் தளர்ந்து போனதில் ரிக்ஷா மிதிக்க முடியாமல், உடலும் தளர்ந்து போனது. ஒரு மாதம் வரை பைத்தியம்


கல்லறைக்குச் செல்லும் வழி

 

 நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள். புதிதாய் முளைத்தவை. சில இன்னும் முடிவடையாதவை. தாண்டி வயல்கள். சாலையின் இருமருங்கும் மரங்கள். மூப்பாகிப்போன, தாழத் தொங்கும் அதன் கிளைகள். சாலையில் சில இடங்களில் தார் மிச்சமிருந்தது. இடையிடையே மொண்ணையாயும் இருந்தது சாலை. கிளைப்பாதையில் சரளைக்கல் எடுப்பு. நடைபாதை போல அழகாய்க் கிடக்கிறது. சாலை, மற்றும் கூடச் சரிந்திறங்கும் கிளைப்பாதை, இரண்டன் நடுவே சிறு புல்லும்


கார் க்ரைம்

 

 பியர் கிண்ணத்தை மேசை மேல் வைத்தபடி திரும்பினான் ராம்குமார். அவனெதிரே அமர்ந்திருந்த அந்த மனிதரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இந்த க்ளப்பில் இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லையே என்று புருவத்தை நெறித்தபோது அவர் புன்னகைத்தார். “ஐயாம் டாக்டர் மாயகிருஷ்ணன்.சைக்யாட்ரிஸ்ட்”என்றார்.கைகளை நீட்டினார்.அதைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான் ராம்குமார். “டாக்டர்.ஐ நீட் யுர் ஹெல்ப்.நான் ஒரு சிக்கல்ல இருக்கேன்” “என்ன சொல்லு. எவளையாவது லவ் பண்ணி ஏமாந்துட்டியா” “இல்லை டாக்டர். என் பிசினஸ்ல லவ் பண்றதுக்கெல்லாம் நேரமில்லை.


பாராட்டு விழா

 

 சென்னை அண்ணா நகர் ஹெச் பிளாக் 24, 25, 26 ஆகிய மூன்று வீதிகளும் சந்திக்கும் முச்சந்தியில் தான் அந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணி இரவு 11 ஐத் தாண்டி சில நிமிடங்கள் ஆகி இருந்தது. விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டி தொண்டர் சிலர் முன்னரே வந்திருந்து ஆக வேண்டிய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். மற்ற தொண்டர்கள் சாரிசாரியாக விழாவுக்கு வந்த வண்ணம் இருந்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கும் தலைவர் வழக்கம் போல்


குற்றவியூகம்

 

 சென்னை காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் ஒரு அறையில், அந்த விசேஷக் குழு விவாதித்துக் கொண்டிருந்தது. அந்த கம்பீர அதிகாரி பேசுவதை சதுர மேஜையைச் சுற்றி அறையினுள் மெளனமாய் அங்கீகரித்தவாறு கேட்டு கொண்டிருந்தார்கள். இருந்தவர்களில் பாதி பேர் சாதாரண உடையிலிருந்தாலும் அளவு மீசை, கழுகுக்கண் சின்னங்கள் அவர்களுக்குள் ஒளிந்திருந்த போலீஸ் அதிகாரிகளை அடையாளம் காட்டியது. சுவரில் பிரதமர், முதல்வர் படங்கள் மற்றும் சம்பிரதாய காவல் துறையின் விசேஷ முத்திரைகள் அலங்கரிக்க, ஒரு பக்கத்திலிருந்த பலகையில் அவர்களின் குற்ற விசாரணைப்


கொல்வதற்கு வருகிறேன்

 

 முப்பது டிகிரி கோணத்திற்கு திறந்திருந்த அந்தக் கதவு, எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால், ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது. “க்ளக்’ என்ற ஓசையுடன், கதவு சாத்திக் கொண்டது. குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய அறை. சிறிய ஓசை கூட, மிகத் துல்லியமாக உள்ளே கேட்டது. முக்கியமாக அஜய் சிங்குக்கு! நான் யாரைக் கொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேனோ, அவனுக்குக் கேட்டு விட்டது… மிக அருகிலேயே, அரை இருட்டில் நெளியும் பாம்பு மாதிரியான இரானியத் தட்டிகள் இருந்தன. அதன்


பழிதீர்ப்பவன்

 

 Мститель : பழிதீர்ப்பவன் மூலம் : அன்டன் செக்ஹோவ் தமிழில் : மா. புகழேந்தி தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்த சிறிது நேரத்தில் பியோடோர் பியோடோரோவித்ச் சிகேவ், துப்பாக்கிகள் விற்கும் ஷ்முக் அண் கோ வில், கைத்துப்பாக்கி ஒன்றை வாங்க நின்று கொண்டிருந்தான். அவனது வெளித்தோற்றம், ஆத்திரம் , சோகம் கலந்த கலவையாகவும் மாற்றமுடியாத உறுதி கொண்டவனாகவும் காட்டியது. “என்ன செய்ய வேணும்னு எனக்குத் தெரியும்”, தனக்குள் சொல்லிக்கொண்டான்.”குடும்பத்தின் புனிதம் கேட்டு விட்டது, குலப்பெருமை சேற்றில்


கோர்சிப் போராளி

 

 Un Bandit Corse : கோர்சிப் போராளி மூலம் : கய் தே மாப்பசான் தமிழில் : மா. புகழேந்தி ஐத்தோன் காடு வழியாக சாலை மெல்ல முன்னேறியது. எங்களது தலைக்கும் மேல் பைன் மரங்கள் கூடாரமிட்டு இருந்தன. வீசிய காற்று எதோ ஓர் இசைக் கருவியை இசைப்பது போல் வித்தியாசமான ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. மூன்று மணி நேர நடைக்குப் பின் ஒரு வெட்ட வெளி தென்பட்டது, சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு பெரும் பைன்