கதைத்தொகுப்பு: கிரைம்

225 கதைகள் கிடைத்துள்ளன.

கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை

 

 “அப்பாடி! ஒங்களோட இப்படி தனியா வந்து எத்தனை காலமாச்சு!” கண்களில் கிறக்கத்துடன் கணவரைப் பார்த்தாள் லலிதா. ஏழு ரிங்கிட் கொடுத்து வாங்கிய இளநீரை நாசுக்காக உறிஞ்சினாள். நீர்த்துப்போயிருந்த ஆரஞ்சுப்பழச் சாற்றை ஸ்ட்ராவால் கலக்கியபடி, “கொலைக் குத்தவாளிங்களையே நடுங்க வைக்கற நான் என்ன, அவ்வளவு சுலபமா லீவு எடுத்துக்க முடியுமா?” என்று கண்ணைச் சிமிட்டியவர் — அம்மாதிரியான வழக்குகளில் புலன் துலக்கும் நிபுணரான சிவம். “ஒங்க பெருமை எங்கிட்ட வேணாம்!” விளையாட்டாய் கோபித்தாள் மனைவி. “இந்த இடம் ரொம்ப


எச்சரிக்கை (இது உங்களுக்கும் நடக்கலாம்)

 

 மதிய நேரம் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது… மழைக்கு பின்னால் வரும், வெயில் அதிகப்படியான வெப்பத்தை சுரந்து கொண்டிருந்த நேரம்…அனல் காற்று, அணத்திக் கொண்டு வருவதும் போவதுமாய் இருந்தது. தூரத்தில் பேச்சுகளற்ற, ம்ம் ….ம்ம் …..ம்” என்ற இரைச்சல் வெற்றிடமெங்கும் நிறைந்து இரைந்து கிடந்தது. கண்ணில் பட்ட மரங்களெல்லாம் சிற்பமாகி நின்றன…மரக்கிளைகளில், இலைகளில் மினுங்கிக் கொண்டிருந்த சூரிய ஒளி, எங்கெங்கோ பட்டு, சிவக்குமாரின் கண்களையும் உரசிக் கொண்டிருந்தது….. கையில் பிரம்புடன் அந்த பள்ளியின் வராண்டாவில் நடந்து கொண்டிருந்த


சுனாமி

 

 டிசம்பர் 26, 2004. காலை பத்தரை மணி. சுனாமியால் தேவனாம்பட்டினம் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து எங்கு பார்த்தாலும் சேரும் சகதியும், வேரோடு சரிந்த மரங்களும், இடிந்த கட்டிடங்களும், அதனூடே பிணங்களும்…சோகமான சூழ்நிலையில் தவித்தது. கடலூர் அரசு மருத்துவ மனைக்கு பிணக் குவியல்கள் தொடர்ந்து வந்தபடியே இருந்தன. அழு குரலும், அரற்றல்களும் காண்போரின் அடிவயிற்றைக் கலக்கியது. மாறிச் சாமியின் வீடு தேவனாம்பட்டினத்திலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருந்ததால் அங்கு பாதிப்பு எதுவும் இல்லை. தன் மனைவி வடிவுக்கரசியை பத்திரமாக


9 வது கொண்டை ஊசி வளைவு

 

 யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது…. இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் … தெளிவாக இருந்த முகத்தில்… நிஜம் அணிந்து கொண்ட முகமூடியை ரசிப்பது போல இருந்த மனநிலையை சற்று தள்ளி நிற்க சொல்வது போல ஒரு பாவனையை வலிய வர வைத்துக் கொண்டு தலையை சீவினான்… “எதுவும் நடக்கப் போவதில்லை… எல்லாம் சரியாவே நடக்கப்போகிறது… இனி ஒரு வழி செய்வோம்… என்பதை நிரூபிக்கும் நாள் இது… இது எனக்கான நாள்…. இங்கு நானே கடவுள்….


புலன் விசாரணை

 

 இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி. உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது. க்ரைம் இன்ஸ்பெக்டர் ரங்கநாத் தன் அலுவலக அறையில் அன்றைய பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வாசலில் நிழலாடவே நிமிர்ந்து பார்த்தார். உள்ளே வந்த ஒரு நாகரீகமான இளஞன், முகத்தில் ஏராளமான சோகத்துடன், “இன்ஸ்பெக்டர், ஐ யாம் பாஸ்கர். நேற்று மாலையிலிருந்து என் மனைவியைக் காணவில்லை. நீங்கள்தான் எப்படியாவது அவளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்” – குரல் உடையச் சொன்னான்.


ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

 

 ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை. சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார். சாதாரண நாட்களில்


ஆலமரத்தின் அடியில்

 

 இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது. தூக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் திவாகர். வாசலில் எவரோ கார் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்தை தொடர்ந்து வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான். வெளியே முகத்தில் ஏராளமான பதட்டத்துடன் குமார் நின்றிருந்தான். பெங்களூரின் இரவுக் குளிரிலும் வியர்த்தான். “திவா, நான் இப்ப மிகப் பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்… ஒரு கொலை பண்ணிட்டேன். நீதான்


ஒகனேக்கல்

 

 பாஸ்கர் சொல்கிறான்: அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்கள்தான், பாவம் திவ்யாவின் வாழ்க்கை முடிந்துவிடும். எவரும் சந்தேகப் படாத வகையில் அவளை ஓகனேக்கல் அருவியின் உச்சிக்கு அழைத்துச் சென்று ‘ஹோ’ வென இரைந்து பொங்கிவிழும் அருவியினுள் தள்ளிவிடப் போகிறேன். உடனடியாக அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்று, என் அன்பு மனைவி பாறையிலிருந்து தவறி அருவியினுள் விழுந்து விட்டாள் என


சோதனை

 

 பொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன். “ நாளை எனக்குச் சோதனை…. என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்…. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.” இந்த இரண்டு வருடப் பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அரைகுறைச் சிங்களத்தில் கெஞ்சியது அந்தப் பொலிஸ்காரனுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை. “காகன்ட எப்பா; நிக்கங் இன்ட” அவன் அலட்சியமாகக் கூறியபடி வெளியே பூட்டைப்போட்டுப் பூட்டினான். எனது


எய்தவன்

 

 பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்… பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் ‘ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில்