கதைத்தொகுப்பு: கிரைம்

260 கதைகள் கிடைத்துள்ளன.

காத்திருக்கும் தூக்குமேடை

 

 முட்டாள்தனமாக காதலித்து, அந்தக் காதலனுடன் சேர்ந்து தன் குடும்பத்தில் ஒரே இரவில் ஏழு கொலைகளைச் செய்துவிட்டு, தற்போது காதலனுடன் தூக்குக் கயிறுக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் உண்மைக் கதை இது… சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தூக்கில் இடப்படப் போகும் பெண்மணி என்பதால் பரபரப்புடன் நாடே உற்று நோக்குகிறது. ஏற்கனவே இருந்த பெண்களுக்கான பிரத்தியேக தூக்குமேடை மதுரா நகரில் புதுப்பிக்கப்பட்டு விட்டது. தூக்கை நிறைவேற்றப் போகும் பவன் குமார் என்பவன் தற்போது அரசின் இறுதி உத்திரவிற்காகக் காத்திருக்கிறான்.


கடத்தப்பட்ட குழந்தை

 

 ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தது கவனத்தை கவருவதாக இருந்தது. இருந்தால் அந்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கலாம், மென்மையான நீல கலரில் சட்டையும், அழுத்தமான நீலத்தில் ஸ்கர்ட்டும் உடைகள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு இவள் கண்டிப்பாய் உறவாய் இருக்க வாய்ப்பு இல்லை, அந்த பெண்ணும் மாநிறமாய் இருந்தாலும்


வட்டம்

 

 தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான். தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள , ராஜதுரை மாடியிலிருந்து குதித்து விட்டான். ஆனால் இறக்க வில்லை. ராஜதுரைக்கு மூளையில் நல்ல அடி. அவன் தன் சுய நினைவிழந்தான். மீண்டும் கோமாவிலிருந்து மீண்டு வருகையில், அவன் செய்த கொலையைப் பற்றி, ராஜதுரைக்கு எந்த நினைவுமில்லை. அவன் மனைவி பற்றி ஒரு நினைவுமில்லை.


வஸ்தாது வேணு

 

 “ஏய் இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்” என்றான் வேணு நாயக்கன் அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக் காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். “ஏஹே காது கேட்கவில்லையா? போலீஸ்காரன் குடி வருவதைப் பார்க்கக்கூடாது, சட்டத்துக்கு விரோதம்; ஜெயிலில் போட்டுவிடுவார்கள்’ என்று சொல்லி வேணு நாயக்கன் பலமாகச் சிரித்தான் ஆனால் மங்கம்மாளுக்கு இந்தப் பரிகாசம் புரியவில்லை .


குண்டு வெடிப்பு…!

 

 பேருந்து நிலைய கூட்டத்தினிடையே தனித்து நின்ற ஆளை அடையாளம் கண்டுகொண்டதும் தினாவிற்குள் மகிழ்ச்சி. மெல்ல சென்று நெருங்கி அவன் தோளைத் தொட்டான். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். தொட்டவனை மிரட்சியுடன் பார்த்தான். “கவின் ! என்னைத் தெரியலே..?” அவனுக்குக் குரலைக் கேட்டதும்தான் இவனை அடையாளம் தெரிந்ததது. “ஹே..! தினா…!” சட்டென்று மலர்ச்சியை கவின் நண்பனின் கையைப் பிடித்தான். “மன்னிச்சுக்கோடா. ரொம்ப நாள் பிரிவு. நீ தாடி மீசையோட வேற இருக்கே. சத்தியமா அடையாளம் தெரியலே…!”நிஜமாகவே மன்னிப்புக் கேட்டு நண்பனின்


கங்கையின் புனிதம்!!!

 

 கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை… கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்…. கங்கையில் உயிர் பிரியவேண்டுமேன்றே தவம் கிடக்கும் பாவாத்மாக்கள்….. அவள் தூய்மை அனைத்தையும் தொலைத்துவிட்டு …இதோ…மனித கழிவுகளையும்…. அழுகிய உடல்களையும்…..குப்பை கூளங்களையும்…. தன் மேல் வாரி இறைத்த அத்தனை அழுக்கையும் சுமந்து கொண்டு … வாய் மூடி மௌனமாய்… ஒன்றும் செய்ய இயலாமல்…!!!! கங்கை மீண்டும் புனிதமடைய என்ன வழி …??? புனித நதியை சாக்கடையாய் மாற்றிவிட்டு… இன்னும் அவள்


மூணு பவுன் சங்கிலி…

 

 அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் உதவி ஆய்வாளர் பாண்டியன் முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்து அவர்கள் முகத்தைப் பார்க்காமல் பேசினார். பாவம் அந்தப் பெண் அவர் பார்வையால் நெளிந்து கொண்டிருந்தாள். வலதுபக்கம் பெஞ்சில் ஒரு ஆள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கிறார். ஷர்ட் இன் பண்ணி


கதைக்குள் நான்

 

 வயதாகிக் கொண்டிருப்பதால் இரவு இரண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறது, இங்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்குமா? தூங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. சட்டென்று மேசையின் மேல் வைத்திருந்த “டைரி” ஞாபகம் வந்தது. எழுந்து விளக்கை போட்டு அதை தேடினேன். மேசையின் மேல் வைத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது காணவில்லை வரவர ஞாபகமறதியும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இங்கு தானே வைத்திருந்தோம்? சுற்று முற்றும் பார்த்தேன். என்னை போல் வயதான ஒற்றை கட்டிலின் வலது


வேல்விழி

 

 சிரித்து பின் அழுது அவள் சொன்னது என்ன? வேல்..! வேல்..! கார்திகேயன் தன் மகளை அழைத்தார். ஏன் அப்பா கூப்பிட்டீர்கள்? “உன்னைக் ஹாஸ்டலில் விட்டுவிட்டு நான் நேரத்தோடு திரும்ப வரனும். ரெடியாகி விட்டாயா? காரை ஷெட்டிலிருந்து எடுக்கட்டுமா? வேல்விழியின் அம்மா, அகிலாண்டேஸ்வரி, “எங்கே இந்த கோபியும், கோதையும் தொலைஞ்சு போனாங்க.” என புலம்பிக்கொண்டே தன் மகளுடைய ஸூட்கேஸ்களை தூக்கிக்கொண்டுவந்து ரெடியாக வாசல் அருகே வைத்தாள். ஒவ்வொரு வார விடுமுறைக்கும்கூட வேல்விழியை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார் கார்த்திகேயன். வேலின்


தென்றல் வரும் நேரம்

 

 சிவானி, வாசலில் கோலம் போட்டு முடித்தபின் .கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். பின்னாலேயே கேட் திறக்கும் சப்தம் கேட்டு நிலைவாசல்படியிலேயே நின்று திரும்பிப் பார்த்தாள். சூட்கேஸை இழுத்துக்கொண்டு ஒருவன் வந்துகொண்டிருந்தான். இவ்வளவு அதிகாலையில் யார் வருவது என சிவானி யோசித்தாள். அங்கேயே நின்றுகொண்டு “யார் நீங்கள்? யாரைப் பார்க்க வேண்டும்?” என வினவினாள். வந்தவன், “ம்ம் எல்லாம் என் நேரம். ஜெயம் அம்மாள் இருக்காங்களா? அவங்களுக்காவது என்னை அடையாளம் தெரிகிறதா பார்ப்போம்” என்றான். சப்தம் கேட்டு உள்ளிருந்து