கதைத்தொகுப்பு: காதல்

769 கதைகள் கிடைத்துள்ளன.

காட்சிப் பிழை

 

 ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தரி மறுபடியும் கண்ணாடியை எடுத்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்! “கண்ணாடியே ! கண்ணாடியே ! உலகத்திலேயே யார் மிகவும் அழகு ?? “என்ற ராணியின் கேள்விக்கு ‘ஸ்னோ ஒயிட் ‘என்ற பதிலைத் தான் அது சொல்லுமாம்!! புகழ் பெற்ற ,சிறுவர்களுக்கான மாயாஜால கதை… சுந்தரிக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவளும் கண்ணாடியைப் பார்த்து இதே கேள்வியை எத்தனை முறை கேட்டிருப்பாள்? எப்போதும் அது சொல்லும் பதில்.. “சுந்தரி ! சுந்தரி !” ஆனால்


நானும் ஒரு மனிதனே

 

 கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே இருக்கிறது இந்த கடல். அவ்வளவு காதலா இந்த மணல்மேல்? பார்க்க பாவமாய் இருக்கிறதே! இந்த கடற்கரையை மூடும் அளவிற்கு ஒரு பெரிய கை இருந்தால், அழகாய் எல்லா மணலையும் தள்ளி கடலிடம் சேர்த்து விடலாமே! இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சரவணனின் கால் பாதம் கீழ் இருக்கும் மணல் கடல் நீரால் கரைந்து போவதை உணர்ந்தான். நம்மால்


பொழைச்சேன், இது எல்லாம் கனவா?

 

 நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன்.என் அப்பா ஒரு துணிக்கடையிலே வேலை செய்து வந்தார்.என் அம்மா ஒரு கையிலே தைக்கும் தையல் மெஷினை வைத்துக் கொண்டு, அக்கம் பக்க த்திலே இருந்த பெண்கணிகளுக்கு ‘ப்ளவுஸ்’’நைட்டி,உள் பாவாடை’ போன்றவற்றை எல்லாம் தைத்துக் கொண்டு கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்தாள். நான் பிறந்து பத்து வருடம் கழித்து எனக்கு ஒரு தம்பிப் பிறந்தான். நான் சின்ன வயதிலே இருந்து காலையிலே ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து என் வீட்டுக்குப் பக்கத்திலே


ஒரு காதல் கதை

 

 பெங்களூர் விமான நிலையத்தில் திருவனந்தபுரம் போவதற்காக காத்திருந்தார் டாக்டர் கிருஷ்ணன். இது அவருடைய தனிப்பட்ட ஆசை, எதிர்பார்ப்பு காரணமாக அவரே ஏற்படுத்திக்கொண்ட பயணம். டாக்டர் வனமாலா என்ன சொல்லப் போகிறாளோ என்கிற எதிர்பார்ப்பு ஏராளமாக அவருள் அடங்கிக் கிடந்தது. டாக்டர் வனமாலாவை அவருக்கு முப்பது வருடங்களுக்கு மேலாகப் பழக்கம். அப்போது வனமாலா, பஞ்சாபகேசன் என்கிற பஞ்சு, மற்றும் கிருஷ்ணன் மூவரும் ஒன்றாக திருவனந்தபுரம் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார்கள். வனமாலா சொக்க வைக்கும் அழகு என்பதால் அவள்


மலரும் வாசம்

 

 ‘அப்பா போன்… அப்பா போன்…’ மகளின் குரலிலேயே அலைபேசியின் அழைப்பொலியை பதிவு செய்து வைத்திருந்தான் அவன். “ஹலோ… ஹலோ… வணக்கம், நான் பிரேம் குமார்.” “எப்படியிருக்கிங்க?” பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டபின் சற்று தயங்கித் தயங்கி, “எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று கேட்டார். பிரேம் குமார் பேங்க் ஆஃப் இந்தியாவின் மும்பை சாக்கிநாக்கா கிளையில் சில வருடங்களுக்கு முன் மேலாளராக பணிபுரிந்தபோது அவனுக்கு அறிமுகமானவர்; நல்ல மனிதர். இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு


அவளுக்கென்று ஒரு கனவு !!!

 

 “Hello ! Evening ஏழு மணிக்கு மேல free யா??” மறுமுனையிலிருந்து வந்த பதில் அவளுக்கு மகிழ்ச்சியான ஒன்றாய் இருந்ததை அவளது முகம் காட்டியது. “Thank you! வழக்கமான இடம் ! Ok.. Bye..” “Ms.ANITA..MBA…VICE PRESIDENT..” இந்த பெயர் பலகைக்குப் பின்னால் உட்கார பட்ட பாடு அனிதாவை ஒரு ஆணவக்காரியாக ‌ மாற்றியிருந்தால் தப்பேயில்லை. “யார் எப்படி விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை “என்ற முகம்தான் அனிதாவின் அடையாளம். அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை நவீன்


இரண்டு பிரம்மச்சாரிகள்

 

 மேடும் பள்ளமும் வளைவும் நெளிவுமாக இருந்த அந்த கிராமத்தின் தார் சாலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற்ற களிப்பில் அவனின் கார் துள்ளி துள்ளி ஓடிக்கொண்டிருந்தது . வலது புறமாக ஒருக்களித்து உட்கார்ந்து , தன்னை கடக்கும் மரங்களையும் ,மனிதர்களையும் , கால் நடைகளையும், பாதி வறண்டுபோன அல்லது பாதி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளையும் , ஒரு குழந்தையைப் போல பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்தான் . அகலம் குறைந்த அந்த சாலையில் ஒரு காரும் ஒரு இரண்டு சக்கர


குனவதியின் காதல் மன்னன்

 

 அத்தியாயம் 1 – முன்னிருட்டில் ஒரு முகமன் பாண்டிய நாட்டின் ராஜேந்திரபுரி- அந்த முன்னிருட்டுப் பொழுதிலும் அடுத்த நாளை இனிதே துவங்க, தயங்காமல் ஆயத்தமாக நின்றன புள்ளினங்கள்! அரண்மனையைச் சுற்றிலும் ஆங்காங்கே நின்றும் நடந்தும் காவல் வியூகம் அமைத்து நின்ற வீரர்களின் படை ஓசை; வீரர்கள் சவாரி செய்த போர்க் குதிரைகளின் குளம்பொலி ஓசைகள்; இவை மட்டும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தன. அரண்மனை, உறக்கத்திலும் ஒளிமயமாக விளங்கியது. படைவீரர்களுடன் தீப் பந்தங்களை ஏந்திய ஏனைய காவலர்களும்


காதல்காரன்

 

 “ஐ ஹேட் யூ” காதல் உரையாடல்கள் எப்போதும் ரொமாண்டிக்காய் அமைவதில்லை. உணர்ச்சிகள் எல்லை மீறியது. அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவள் திணறினாள். இதற்கு மேல் அவள் பொறுமை காக்கபோவதாக உத்தேசமில்லை ‘பளார்’ என அவனை அறைந்தாள். அறைந்த மாத்திரம் பட பட வென பொறிந்தாள். “உனக்கு புரியலயாடா??? நீ எனக்கு வேணாம்” திரும்பி போக வேகம் எடுத்தவள் மறுபடியும் அவனை பார்த்து சொன்னாள். “ஐ ஹேட் யூ” இந்த வார்த்தை இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


காதலின் மறுபக்கம்

 

 ஸ்காபரோ வைத்தியசாலையின் நான்காம் மாடி கட்டிடத்தில உள்ள இருதய நோயாளிகளின் வார்டில் 421ம் அறையில் படுத்திருந்த இந்திரனுக்கு கடந்த மூன்று தினங்களில் நடந்தது எல்லாம் கனவு போலிருந்தது. முப்பது வயதுடைய இந்திரனுக்கு இந்த இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வந்து இருதயம் பாதிப்படையும்; என்று அவனது நண்பர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்ஜியோகிராம் செய்து பார்த்த பின்னர் இருதய வைத்திய நிபுணர் பிலிப்ஸ் சொன்னது இந்திரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. “உமது இருதயத்தின தசைகள் வெகுவாக தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளது. அதோடு