கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

513 கதைகள் கிடைத்துள்ளன.

சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு

 

 அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் : உமக்கு என்ன வேலை? சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது. வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா? சாட்சி : ஆம். இருக்கிறது. வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ? சாட்சி : கட்டிடமாக. விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு சாட்சி : ஒரு லட்ச ரூபாய்


அரசனும் அறிஞனும்

 

 அறிவிலும் செல்வத்திலும் வலிமையிலும் தனக்கு இணையாக எவரும் இல்லை என்று இறுமாப்பு கொண்டிருந்தான் ஒரு மன்னன். அவனைத் திருத்த அறிஞர்கள் பலரும் முயன்று தோல்வியடைந்தனர். அரசன் தன் பிறந்தநாளில் தன் அரண்மனையைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஊர்வலம்வரப் பல்லக்கில் புறப்பட்டான். அப்போது ஒர்அறிஞன் பிச்சைக்காரனைப் போல் வேடம் பூண்டு, தன் கையில் செல்லாக்காக ஒன்றை வைத்துக்கொண்டு, “இவ்வரசன் என்னிலும்பணக்காரனல்ல; இவ்வரசன் என்னிலும் பணக்காரனல்ல” என்று கூவிக்கொண்டேயிருந்தான். அரசனது காவலர்கள் அவனை தாக்க முயன்றனர். இதுகண்ட அரசன் அவனை


ஊர்வலம்

 

 திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது. மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர். அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க. அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார். அவர்கள், ‘அவரல்ல,


இரு குரங்கின் கைச்சாறு

 

 பரம்பரை அனுபவம் என்பது சிறிதும் இல்லாமல், குருவை அணுகிக் கேளாமல், தானே ஒருவன் ஒலைச் சுவடிகளைப் படித்து வைத்தியம் செய்யத் தொடங்கினான். ‘ஒத்தைத் தலைவலிக்கு இரு குரங்கின் கைச்சாறு தடவக் குணமாகும்’ என்று ஒலைச் சுவடியிலிருந்தது. இவன், இதற்காகக் காட்டிற்குச் சென்று இரண்டு குரங்குகளைப் பிடித்துக் கொண்டுவந்தான். பாறையிலே அதன் கைகளை வெட்டி நசுக்கிச் சாறு பிழியலானான். அப்போது அங்கே வந்த பெரியவர், ‘தம்பீ! என்ன இது?’ என்று காரணம் கேட்டார் இவன் தான் ஒலையில் படித்த


கடுக்காய் வைத்தியர்

 

 ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என எண்ணி, பழைய மருந்து களை தேடினான். கடுக்காய் மூட்டை ஒன்றுதான் கிடைத்து, இதை வைத்தே பிழைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ஒரு சமயம், இரண்டு பெண்டாட்டி கட்டிய ஒருவன் எப்போதும் மூத்தவளுடன் சண்டை போட்டான்.


அகத்தியரும் தேரையரும்

 

 தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது, அவர் அருகில் இருந்த மாணாக்கர்களில் ஒருவர் – கொட்டாங்குச்சியிலே நீரைக் கொண்டுவந்து தேரையின் முன்னே காட்டினார். அது மூளையை விட்டுத் தண்ணிரிலே தாவிக் குதித்தது. நோயாளிக்கு


மரக்கவிப்புலவர்

 

 சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – – ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெறஎண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார். ‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது


வாழைப்பழம்

 

 தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ – என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது. தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே கூறுவர். இந்தச் சிறப்பு ‘ழ’ – ஒலி – தமிழ் மக்கள் சிலரால் உச்சரிக்கப்படுவதில்லை. திருச்சிக்குத் தெற்கே சில ‘ழ’ளை ‘ள’ ஆக உச்சரிப்பர். (எ – டு) ‘ஐயா, கடைக்காரரே உங்களிடம்


திரு.வி.க. – மறைமலையடிகள்

 

 சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார். அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார் – ‘அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது – ரசம் அதிகாரம் பண்ணுகிறதா – என்பதும். ‘ரசம் அதிக காரமாக இருக்கிறதா?’ எனக் கேள்வியாகவும் பொருள்பட இருந்தது. – அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை


காட்டாரும் பண்டிதமணியும்

 

 ‘ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார் அவர்களும், திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர். அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள் – பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க விராது) தடியை ஊன்றி தட்டுத் தடுமாறி வருவதைப் பார்த்து, ‘ஐயா, கொஞ்சம் விழிப்பாக இருங்கள்; அவ்விடத்தில் ஒரு படி இல்லை’ என்று சொன்னார். அதற்குப் பண்டிதமணி சொன்னார் : “தாங்கள் சிவப்பழம் ஆயிற்றே, இறைவன் இருக்கும்