கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

534 கதைகள் கிடைத்துள்ளன.

அதுதான் அம்மா – ஒரு பக்க கதை

 

 விக்னேஷ் அலுவலக வேலையில் மூழ்கி இருந்தான். செல் ஒலித்தது. என்ன உமா? எனக்கு காலையிலே இருந்து தலைவலிங்க லேசா ஃபீவரும் இருக்கு. சீக்கிரம் வந்தீங்கன்னா டாக்டர்கிட்டே போகலாம். என்ன உமா ஆபிஸ்லே ஆடிட்டிங் நடக்குது. நம்ம டாக்டர்தானே, நீ மட்டும் போய் வா. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் செல் ஒலித்தது. இம்முறை உமா அல்ல, அவன் அம்மா! என்னடா விக்கி, நல்லா இருக்கியா! உமா எப்படி இருக்கா? நல்லா இருக்கேம்மா, நீ எப்படிம்மா இருக்கே?


கடத்தல் – ஒரு பக்க கதை

 

 ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார் கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. தனது தொழில் கச்சிதமாக முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்துவதற்காகத்தான் திருப்பதிக்குச் சென்றிருந்தார்தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம் வந்து உண்டியலின் அருகே சென்றார்.ஒரு லட்ச ரூபாயை ஒட்டு மொத்தமாகப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டாரகள்.


பட்டுப் புடவை – ஒரு பக்க கதை

 

 நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா. கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது லட்சம் என அவளது அப்பா சொன்னார். புடவையை டிசைன் செய்தது. நந்திதாவுக்கு கணவனாக வரப்போகும் விஷ்ணு. இதுவரை எந்த மணமகளும் அணியாத வகையில் நந்திதாவின் புடவை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நந்திதாவின் மீது விஷ்ணு வைத்துள்ள காதல் அவளுக்குப் புரியும் என்பதால், செலவைப்பற்றி கவலைப் படாமல், காசை வாரி இறைத்து அந்தப்


பிரயோஜனம் – ஒரு பக்க கதை

 

 கடற்கரையிலிருந்த ஒருவர், மணலிலிருந்து எதையோ எடுத்துக் கடலினுள் எறிந்தவாறு இருந்தது என் கவனத்தைக் கவரவே, அருகில் சென்று என்ன சார் செய்யறீங்க? என்றேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஒரு பெரிய அலை வந்து நிறைய மீன்களைத் தூக்கிக் கரையிலே வஈசிட்டுப் போயிடுத்து. துடிச்சிருக்கற அதுகளை ஒவ்வொண்ணா எடுத்துக் கடல்ல போட்டுக் கொண்டிருக்கேன் என்றார் அவர். சிரித்தேன் நான். இவ்வளவு மீன்கள் கிடக்க எல்லாத்தையும் போடறதுக்குள்ளே விடிஞ்சிடும். இங்கே மட்டும் இவ்வளவுன்னா இந்த பீச்சிலே மத்த இடங்களிலே எவ்வளவு


சுயநலம் – ஒரு பக்க கதை

 

 டேய் செல்லம். இந்தப் பழத்தைக் கொண்டு போய் பாட்டிகிட்டே கொடுத்திட்டு வந்திடுப்பா’ வீட்டுக்குள் வரும்போதே மகனை விரட்டினார் பத்மநாபன் நுழையறதுக்கு முன்னாடியே அம்மா ஞாபகம் வந்திடுச்சா? குழந்தையை இந்த விரட்டு விரட்டுறீங்க? சிடு சிடுத்த கெஜலட்சுமியிடம் மற்றொரு பழ கவரை தந்த பத்மநான், ‘இத பாரு கெஜா…பெத்த வயிறு குளிர்ச்சியா இருத்தாத்தான் நாம நல்லா இருக்க முடியும். அது மட்டமில்லாம குழந்தைங்க வளரும்போது அப்பா அம்மாகிட்டே நிறைய விஷயம் கத்துக்குங்க….இப்ப நான் என் அம்மாவை எப்படி நடத்துகிறேனோ,


பங்கீடு – ஒரு பக்க கதை

 

 “இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு கேட்டான் அமுதன். “அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து விட்ருவாருடா…கவலைப்படாதே!’ குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என் மனைவி. அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. “எடுங்க…. உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ‘ உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார். “வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க’ என்றேன். “என்னடா, அப்பாவை அழைச்சிட்டுப் போகலையா?’ அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அண்ணி


வாழைமரம் – ஒரு பக்க கதை

 

 குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான். வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை. “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா இதன் சரித்திரம் என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து


பரிசோதனை – ஒரு பக்க கதை

 

 ”ஹலோ! இது ராஜா ராமனா?” மறுமுனையில் ராஜாராமன். ”ஆமாம், நீங்க?’ ”நான் ராகம் ஆஸ்பத்திரியிருந்து டாக்டர் சம்பத், நீங்கள் வயிற்றுல ஒரு வித்தியாசமான வலின்னு வந்து மருந்து மாத்திரை வாங்கிட்டுப் போனீங்களே, சரியாயிட்டுதா?” ”நூறு சதவீதம் சரியாயிட்டுது. நினைவு வெச்சு கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்குது டாக்டர்” என்று சம்பாஷனையை முடித்தார் ராஜாராமன். நர்ஸ் வில்லி, டாக்டரைக் கேட்டாள். ”ஏன் டாக்டர் அந்த பேஷண்ட் மேல் என்ன அவ்வளவு அக்கறை…போன் போட்டெல்லாம் விசாரிக்கிறீங்க?’ ‘அக்கறையெல்லாம் ஒண்ணும் இல்லை.


அனுபவம் – ஒரு பக்க கதை

 

 “என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது சென்டிமென்டா..?” – மேனகா தன் தாய் கனகாவிடம் கேட்டாள். ”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம் அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில் விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள் கனகா. துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது. “விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா தெரியும்?”, மேனகா


எதிரிக்கு எதிரி – ஒரு பக்க கதை

 

 “என்ன பார்வதி உன்னோட இரண்டாவது மருமகள் கூடவும் சண்டையாமே! நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே! இப்ப பாரு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு உன்னை வெளியில் அனுப்பிட்டாங்க!’ கடைத்தெருவில் பார்த்துக் கேட்டாள் கோமதி! “அதுக்குதான் பார்வதி சண்டை போட்டேன்!’ “எதுக்கு?’ புரியாமல் கேட்டாள் கோமதி! “என்னோட மூத்த மருமகள் நல்ல பணக்காரி! இரண்டாவது மருமகள் கொஞ்சம் இல்லாத குடும்பம். அதனால் பெரியவள் சின்னவளை ரொம்பவே அலட்சியப்படுத்தினா! இதனால் பசங்களுக்குள்ள மனஸ்தாபம் வந்துருச்சு! இவங்களை ஒண்ணு சேர்க்க