கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

498 கதைகள் கிடைத்துள்ளன.

பயம்! – ஒரு பக்க கதை

 

 அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை, சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக் கண்களால் பேஷண்டை உற்றுப் பார்த்துப் பேசுவார். அவரது பேண்டுக்கு எப்போதும் பெல்ட் கிடையாது. அதிகபட்சம் ஐம்பது கிலோ இருப்பார். ஆனால் திறமைசாலி.முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறுவை நிபுணர். “இன்னும் ஒரு வாரத்தில் ஆபரேஷன் வெச்சுக்கலாம்!’ என்று மனைவியிடம் சொன்னவர், “உங்க தங்கச்சிக்கு இதேபோல ஆபரேஷன் நடந்ததே!’ என்றார். “ஆமா! நீங்கதானே சார்.. அவளுக்கு குடல்வால்


பதியன் – ஒரு பக்க கதை

 

 ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட். ”எப்ப பாரு…! அம்மா வீடு! அம்மா வீடு! கல்யாணம் பண்ணி மூணு மாதம் ஆயிருச்சு! அப்புறம் என்ன அம்மா வீடு! எரிச்சலோடு கத்தினான் அஸ்வின்”நீங்க உங்க வீட்டுலயே இருக்கீங்க! உங்களுக்கு தெரிலைங்க! ஆனா எனக்கு அப்படி இல்லையே!” என்றாள் ஹரிணி. ”எதிர்த்துப் பேசுற! ஒண்ணு இந்த வீடு இல்லை உங்கம்மா வீடு! நீயே முடிவு பண்ணிக்கோ” கோபமாகச் சொன்னான். “பார்த்துப்பா! உடைஞ்சிராம! மெதுவா வளைச்சு. மண்ணுக்குள் வை!” என்ற தாத்தாவின் குரல் கேட்டு


பாரம் – ஒரு பக்க கதை

 

 ”ஏங்க இத்தனை நாளும் சம்பளக் கவரை உங்க அம்மாகிட்டேதானே குடுத்தீங்க? நான் கல்யாணமாகி இப்பத்தானே வந்திருக்கிறேன், எங்கிட்ட கொடுத்தா உங்க அம்மா மனசு கஷ்டப்படும். வழக்கம்போல அத்தைகிட்டேயே குடுங்க” புது மருமகள் நிலா, கணவனிடம் கூறியதை கேட்டுக்கொண்டு வந்த சாரதா கூறினாள், ”இருக்கட்டும்டி மருமகளே! இனி நீதான் எல்லாம் பார்த்துக்கணும். இனி அவன் சம்பளக் கவரை உன்கிட்டே குடுக்கிறதுதான் சரி” தாயின் இந்த பதிலைக் கேட்ட சாரதாவின் இளையமகள் சுதா தாயை வினவினாள்,”ஏம்மா, அண்ணன் சம்பளக் கவரை


யாரைப் போல் சாப்பிடுவீங்க? – ஒரு பக்க கதை

 

 காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார், “நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’ என்றார். இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப் போல் ஏன் சாப்பிட வேண்டும்? “மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர். “உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப் போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு, “ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு மானை


அம்மா – ஒரு பக்க கதை

 

 “ஊரில், அம்மாவுக்கு உடல் நலமில்லை!’ மன சஞ்சலத்தில் இருந்தாள் சரஸ்வதி! அழைத்து வரலாம் என்றால், ஊரில் இவர் அம்மாவுக்கும் உடல் நலமில்லை! அதிகப்படியாக ஒரு ஆளுக்கு மேல் வீடும் தாங்காது. வருமானமும் போதாது. தன் அம்மா மேல் உயிரையே வைத்திருக்கும் அவரிடம் எப்படிச் சொல்வது, நானும் என் அம்மாவின் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்’ என்று, நினைத்து வருத்தப்பட்டாள். காலையில் சங்கர் கிளம்பும் போது, “சரசு! அம்மாவை இங்கே வரச்சொல்லி இருக்கேன்! மதியம் வந்துருவாங்க! பார்த்துக்கோ! நான் சாயிந்திரம்


முடிவு – ஒரு பக்க கதை

 

 ‘டேய்…நாளைக்கு என்ன செய்யப்போற?’ – ரவியைக் கேட்டான் சிவா. ‘வழக்கம் போலத்தான்.அப்பா, அம்மாவுக்காக, போய் தலையைக் காட்டிட்டு, பொண்ணு பிடிக்கலேன்னு சொல்லிடப் போறேன்!’ ”நியாயமாடா இது? வீட்டிலேயே விஷயத்தைச் சொல்லி தடுக்காம, பொண்ணு பார்க்குற வரைக்கும் போய் அவங்ககிட்டே சொல்றே…அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்!” ‘உண்மைதாண்டா. ஆனா என்னோட காரணத்தை எங்க வீட்டுல சீரியஸா எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஆனா பொண்ணுகிட்டே தனியா பேசும்போது சொல்லிட்டா, ‘அப்பாடா! இப்பவே தெரிஞ்சுதே’ன்னு சந்தோஷப்படுறாங்க!’ – சமாதானம் சொல்லிச் சென்றான் ரவி.


மருமகள் – ஒரு பக்க கதை

 

 திருமணமான இரண்டே வருடங்களில் மருமகள் மகனை அழைத்துக்கொண்டு தனிக்குடிதனம் போய்விடுவாள் என்று சாவித்திரி எதிர்பார்க்கவேயில்லை. அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள். “ஏங்க… நம்ம மருமகள் பண்ண வேலையைப் பார்த்தீங்களா… நினைக்க நினைக்க வயிறு எரியுது…’ சரவணன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். “ஏங்க… நான் இவ்வளவு புலம்பறேன். நீங்க ஒரு வார்த்தைகூட பேசாம கம்முனு இருக்கீங்க…சொல்லுங்க.. உங்க மனசுல என்ன இருக்குது?’ எரிச்சலோடு கேட்டாள்…. “சொல்லறதுக்கு என்ன இருக்கு… நம்ம மருமகளாவது தனிக்குடித்தனம் போக இரண்டு


மரியாதை – ஒரு பக்க கதை

 

 தனசேகர் ராணுவத்தில் 20 ஆண்டு சேவையை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் தன் மனைவியுடன் ஷாப்பிங் சென்றவன், காரை ஷாப்பிங் மாலுக்குள் நிறுத்தாமல், கடைக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வந்தான். இன்னொரு முறை அங்கே சென்றபோதும் காரை கடைக்கு வெளியேதான் நிறுத்தினான். அவன் ஏன் காரை ஷாப்பிங் மாலுக்குள் நிறுத்தாமல் வெளியே நிறுத்துகிறான்? என்பது அவனுடைய மனைவி மாலதிக்குப் புரியாத புதிராக இருந்தது. அன்று அந்தக் கடைக்கு


டியூஷன் – ஒரு பக்க கதை

 

 “மாலா, நாளையிலிருந்து சாயந்திரம் 4 மணிக்கு பேத்தி ஆர்த்தியை டியூஷனுக்குக் கூட்டிப் போகணும். டியூஷன் முடிந்ததும் மறுபடியும் கூட்டி வரணும் என்ன?’ என்றாள் மல்லிகா. “சரிம்மா. யாரும்மா டியூஷன் எடுக்கறாங்க. நல்லா சொல்லித் தருவாங்களா?’ என்றாள் வேலைக்காரி. “ஏன் உன் பேத்தியையும் அங்கே சேர்க்கலாம்னு நினைக்கிறயா?’ “ஏம்மா, அங்கே என் பேத்தியைச் சேர்க்கக் கூடாதா?’ “அங்கே படிக்கிற பசங்கெல்லாம், பணக்கார வீட்டுப் பசங்க. மாதம் 7400 சம்பளம் தரணும். உன் மாதிரி வேலைக்காரி வீட்டுப் பசங்க அங்கே


ப்ளீஸ், இன்னும் ஒரு தடவை..! – ஒரு பக்க கதை

 

 சீதா இன்னும் ஒரு தடவை மட்டும் – கெஞ்சினான் வினோத் ச்சீய்..பேசாமல் படுங்க. பதினோரு மணிக்குள் மூணு முறை ஆகிவிட்டது. மறுபடியும் ஒன்றா..? உடம்பு என்னத்துக்கு ஆகும்..? என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் இல்லே, சீதா, கடைசியா… இப்படித்தான் கடைசி கடைசின்னு ஏழு மணிக்கு ஒரு முறை, அப்புறம் ஒன்பது மணிக்கு ஒரு தரம், மீண்டும் பத்து மணிக்கு, இப்போ நாலாவது முறையா…உம்..ஹூம் நான் மாட்டேன்! – சீதா பிடிவாதம் பிடித்தாள் வினோத்துக்கு நாக்கு வரண்டது. உதடுகள்