கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

498 கதைகள் கிடைத்துள்ளன.

சபதம் – ஒரு பக்க கதை

 

 அந்த டாஸ்மாக் பாரில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த பையனை பாதி போதையில் இருந்த சக்திவேல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். சந்தேகமே இல்லை இது அவருக்குப் பழக்கமான கணேசனின் மகன்தான். “டேய் சுகுமார்’ “என்னையா கூப்பிட்டீங்க’ சுகுமார் கேட்டான். “நீ சக்திவேலோட பையன்தானே?’ “ஆமா சார்’ “உனக்கு ஏண்டா இந்தப் பொழப்பு, நல்லா படிச்சு டிகிரி வாங்கின நீ எதுக்கு பாருல வேலை பார்க்குற.. வேற வேலைக்குப் போகலாமே?’ கேட்டவருக்கு நிதானமாக பதில் கூறினான் சுகுமார். “சார்,


கிழமை – ஒரு பக்க கதை

 

 ‘அப்பா… எந்த விசேஷத்தைச் சொன்னாலும் அதை ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்ன்னு சொல்றீங்க…இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்பப்பா விடப் போறீங்க…?’ கோபத்தோடு செல்வி கேட்க… “என்னம்மா பண்றது… என் உத்தியோகம் அப்படி. லீவே கிடைக்கிறதில்லை. இன்னும் இரண்டு வருஷம் பொறு. ரிடையர் ஆயிடறேன். அதுக்குமேல நீங்க எந்தக் கிழமைல எந்த விசேஷத்தை வச்சாலும் எனக்கு ஆட்சேபனையில்லை’ என்றார் ராமலிங்கம். இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. செல்வியின் செல் சிணுங்கியது. “செல்வி… அப்பா பேசறம்மா… நல்லபடியா ரிடையர் ஆயிட்டேன். அதனால் வர்ற புதன்கிழமை சிங்காரப்பேட்டைல


எல்லாம் அவன் செயல் – ஒரு பக்க கதை

 

 சுப்புவின் சுறு சுறுப்பைக் கண்டு வியந்தார் விநோதன். வழக்கமாய் இங்குதான் லிஸ்ட்டைக் கொடுத்து ஸடேஷனரி பொருட்களை வாங்குவார். அங்கு பார்த்ததுதான் அவனை. ஏன்தம்பி இதைவிட அதிக சம்பளத்துல வேலை தர்றேன் வர்றியா? என்றார். சரி என்றான் சுப்பு. விநோதன் ஃபைனான்ஸ் கம்பெனி ஒன்றின் மேனேஜர். பணம் வசூல் பண்ண, பணத்தை பேங்கில் கட்ட நேர்மையான சுறுசுறுப்பான பையன் தேவைப்பட்டான். சுப்புவைப் பார்த்ததுமே முடிவு செய்துவிட்டார். வேலை தருவது என்று. அடுத்த வாரம் பணியில் சேர்ந்து விடுவான். அந்த


மனம் – ஒரு பக்க கதை

 

 பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா. ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினார் எஸ்.ஐ. எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க ? அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க. இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள். அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க. நேத்து நீங்க


கல்யாணம் – ஒரு பக்க கதை

 

 ‘கல்யாணத்தை பக்கத்திலே உள்ள முருகன் கோயிலிலே நடத்தலாம். அப்புறம் கல்யாண மண்டபத்திலே ரிசப்ஷனை வச்சிடலாம்’ என்றார் பெண்ணின் தந்தை சபேசன் ”கல்யாணம், ரிசப்ஷன் ரெண்டையும் மண்டபத்திலேயே வச்சுக்கலாமே? என்று முதலில் சொன்ன மாப்பிள்ளையின் தந்தை, சபேசன் விடாமல் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டார். அவர் போனதும் சபேசனிடம் அவர் மனைவி மீனாட்சி கேட்டாள். ‘எதுக்குங்க கோயில்லதான் கல்யாணத்தை நடத்தணும்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க? எல்லாம் காரணமாகத்தான். மாப்பிள்ளை பம்பாய், டில்லின்னு பல ஊர்லே உத்யோகம் பார்த்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால தப்புத்


மன்னிப்பு – ஒரு பக்க கதை

 

 எதையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வரும் பரமசிவம், அன்றிரவு பின்வாசல் விளக்குகளை வேண்டுமென்றே எரியவிட்டது குமரனுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் உண்டு பண்ணியது! விடிந்ததும்… “ஏம்பா… தொலைக்காட்சியையோ ஃபேனையோ நாங்க அணைக்க மறந்தாலே எங்களை திட்டி “எதையும் விரயம் பண்ணக்கூடாது’ன்னு ஆலோசனை சொல்ற நீங்களே… நேத்து பின்வாசல்ல மூணு விளக்கையும் அணைக்காம அலட்சியமா விட்டுட்டீங்க! அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்குத்தானா?’ என்ற மகனின் எதிர்பாராத கேள்வியில் அதிர்ச்சியடைந்த பரமசிவம்… “பின்னால குடியிருக்கிற இராமநாதன் வீட்ல நேத்து


மாற்றம் வரும் – ஒரு பக்க கதை

 

 ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஈகோ இடித்தது. கணவன் ரவியிடம் சொல்லி வருத்தப்பட்டாள். “அது என்ன ரவி… எழுந்தவுடன் குளிக்கணும், பகலில் நைட்டி போட்டுக்கக்கூடாது, தண்ணீரை தூக்கிக் குடிக்கணும். எனக்கு ஒத்து வரலை. உங்க அப்பா, அம்மாகிட்டே சொல்லி புரியவைங்க. காலம் மாறிக்கிட்டு இருக்கு. இல்லே? ‘யாருக்குப்


இவள் – ஒரு பக்க கதை

 

 அவ்ளோதானே…! நோ ப்ராப்ளம்ப்பா…பாமா சிரித்தாள் இப்பவே உனக்கு பொறுப்பு வந்திடுச்சிடி…அம்மா – அப்பா மகிழ்ந்தனர். பாமா, பிடிவாதக்காரி, பிரபல ‘ரிவர்சிபள்’ காட்டன் புடவைகளை கல்யாணத்திற்கு எடுத்திருந்தாள். டிசைன்ஸ் சூப்பர்…நான் எடுத்துக்கவா? என வருங்கால நாத்தனார் கேட்டாள். பாமா அப்பா தந்து விட்டார். அக்கா கேட்டாள், ‘என்னடி, ஹேர் பின் மாறினாலும் அலறுவியே…?’ பாமா புன்னகைத்தாள், உள்ளூர நினைத்தாள். ஏழைன்னு, இரண்டு வருஷக் காதலனையே மறந்தாச்சு, பணக்கார மாப்பிள்ளைக்கும் சம்மதிச்சுட்டேன்…ஆஃப்டர் ஆல், புடவையை மாத்தறதா விஷயம்…? – ஜனவரி


ஃபீலிங் – ஒரு பக்க கதை

 

 சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு வங்கி மேலாளராக பதவி உயர்வோடு பணிமாற்றம் கிடைத்திருந்தது புருஷோத்தமனுக்கு. முதல் நாள் வேலைக்குப் போய் வந்ததும், தன் நண்பன் குமாரோடு நாகராஜர் கோயிலுக்குப் புறப்பட்டார். சிரத்தையோடு நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். என்ன திடீர்னு பக்தி மயம்? பிரமோஷனுக்கு நன்றி சொல்றீயா? இல்ல, சீக்கிரம் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியா..? – நண்பர் குமார் கேட்டார். ‘இல்ல குமார்! எனக்கு முதல்ல கல்யாணம் பேசினப்ப, அது திடீர்னு நின்னு போனது உனக்கே தெரியும்.


உபதேசம்! – ஒரு பக்க கதை

 

 மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ரம்யா காபி டம்ளர் தட்டுடன் மாப்பிள்ளை மோகன் பக்கம் சென்றாள். மோகனிடம் தட்டை நீட்டினாள். அதில் பிளாஸ்டிக் டம்ளர் ஒன்றில் காபியும், கண்ணாடி டம்ளர் ஒன்றில் காபியும் இருந்தது. மோகன் காபி தட்டை கவனித்தான் சில வினாடிகள் யோசித்தவன், கண்ணாடி டம்பளரில் இருந்த காபியை எடுத்து குடித்தான். ரம்யாவின் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது. தன் அப்பா சந்தானத்தின் பின்னால் போய் நின்றாள். மாப்பிள்ளை வீட்டார் போனதும் சந்தானம் தன் மகளிடம் கேட்டார்….