கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

501 கதைகள் கிடைத்துள்ளன.

தோழிக்குப் பாராட்டு – ஒரு பக்க கதை

 

 திடீரென அந்தச் சந்திப்பு நிகழுமென கமலி எதிர்பார்க்கவில்லை. ஆர்த்தியும் அவளைக் கண்டு வியந்தாள். இருவரும் பூங்காவில் புல்வெளியில் அமர்ந்தனர். கமலியின் முகம் வாடியிருந்தது. “கல்யாணமாகி சில மாதங்கள் கூட ஆகலை. அதற்குள்ள சிடுசிடுங்கிறாரு. சட்டைக்கு பட்டன் இல்லை. சாப்பபாட்டுல உப்பில்லைன்னெல்லாம் கோவிச்சுக்கிறாரு!’ என்று வருத்தப்பட்டாள் கமலா. அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆர்த்தியின் முகம் சட்டென மாறியது. “நீ ஏன் கண் கலங்குறே?’ என்று ஆதரவாக கேட்டாள் கமலி. “நம் இருவரது கணவருமே ஒரே அலுவலகத்துலதான் வேலை பார்க்கிறாங்க.


தீர்ப்பு – ஒரு பக்க கதை

 

 திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த சுனிதாவும் சுந்தரும் ஏனோதானோவென வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து தீர்ப்பிற்காய் மகள் தீபாவோடு கோர்ட்டில் காத்திருந்தனர். குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட குழம்பிப்போன நீதிபதி குழந்தை தீபாவிடமே தீர்ப்பை கேட்டார். அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற எதிர்பாராத தீபாவின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி. அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா பேசறது


உண்மை – ஒரு பக்க கதை

 

 “இப்ப பொண்ணு பார்த்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை? நல்ல வேலை, கை நிறைய சம்பளம்?’ ஆதங்கமாய் கேட்ட சரவணனிடம்… “அப்பா, என் ஃபிரெண்ட் சவிதா இதே கம்பெனியிலதான் வேலை பார்க்கிறா. அவ சொன்ன விவரத்திற்கும், இப்ப மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொல்லறத்துக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு! ஏதோ பொய் சொல்றாங்கப்பா…!’ ஸ்வேதா சொல்லி முடிக்கவும், விட்டுச்சென்ற செல்போனை எடுக்க வந்த மாப்பிள்ளை முரளி… “சார், எங்க அப்பா, அம்மா சொன்ன மாதிரி அஸிஸ்டண்ட் மேனேஜரா நான் வேலை


கரிசனம் – ஒரு பக்க கதை

 

 உமாவும் தாரணியும் பஸ்ஸை விட்டு இறங்கி தியேட்டரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது – யாரோ ஒருவன் உமாவின் பின்புறமாக வந்து அவளது செயினை படக்கென்று அறுத்துக்கொண்டு ஓட… ‘ஐயோ செயின்…செயின்…அலறினாள் உமா. உதவி செய்ய ஓடி வந்தான் இளைஞன் ஒருவன். ”இருங்க. ஒரு நிமிஷத்திலேயே அவனைப்பிடிச்சி அந்த செயினை மீட்டுட்டு வர்றேன்..” வேணாங்க.. ஏன்? ”அவன் மோசமான ரவுடியா தெரியறான். கோபத்திலே அவன் உங்களை கத்தியாலே குத்தினாலும் குத்திடுவான்..” ”அதனால..” ”போனாப்போகட்டும், விடுங்க ..” அவளுடைய


இண்டர்வியூ – ஒரு பக்க கதை

 

 எல்லோருமே இண்டர்வியூ முடித்து காத்திருந்தனர். இவள் மட்டும் பாக்கி. வியர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்தாள் உமா. இண்டர்வியூ முடிஞ்சிட்டது. செலக்ஷன் மட்டும் தான் பாக்கி. டைமுக்கு வரமுடியாத உன்னால… வேலைக்கு எப்படி கரெக்டா வரமுடியும்? என்றார் டாக்டரில் ஒருவர். ஸ்டாப்பிங்ல ஒரு அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பிட்ஸ் வந்திடுத்து. அந்தம்மாவுக்கு முதலுதவி செய்து… இதே ஹாஸ்பிட்டல்ல சேர்த்து வர்றேன். அதனால தான் லேட் என்றாள் உமா. அப்போது காபி ட்ரேயுடன் வந்த ஒரு பெண்ணை பார்த்து


பிரார்த்தனை – ஒரு பக்க கதை

 

 “டே! போதும், ஓவரா சீன் போடாத, நீ வேண்டிக்கிறதுலதான் அந்த ஆம்புலன்ஸ்ல போறவன் பொழைச்சிக்கப் போறானா!’ தன்னைக் கடந்து போன ஆம்புலன்ஸைக் கண்டு பிரார்த்தித்த முத்துவுக்கு சதீஷ் கொடுத்த வார்த்தைப் பரிசு இது. “டே, நான் பண்ணது சீன் போட இல்லை. நம்ம பிரார்த்தனையும் அவர் பொழைக்க ஒரு காரணமா இருக்கலாம் பாரு. அதையும் தாண்டி பாதிக்கப்பட்ட ஒருத்தன் நல்லா இருக்கணும்னு நினைக்கறதுல தப்பும் இல்ல, குத்தமும் இல்ல’ என்று முத்து தன் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும்


பேத்தி – ஒரு பக்க கதை

 

 இன்னும் பேத்தி வரவில்லை? தாத்தாவும் பாட்டியும் பரபரத்தனர். ஸ்கூல் விட்டதும் நேராக வீட்டுக்கு வரும் செல்லக்குட்டி நந்தினி. நீங்க போய் பார்த்துட்டு வாங்கோ ராஜம்மாள் சொல்ல, பெரியவர் கிளம்பினார். நேரம் நழுவிக்கொண்டே இருந்தது. சட்டென கண்ணில் பட்டது – சரண்யா சரண்யா எங்காத்து நந்தினியை பார்த்தியோ? ஸ்பெஷல் கிளாஸ், ஏதாவது இருக்கா? இல்லையே பாட்டி. வாசல் கேட் கிட்டே நின்னா… பார்த்த ஞாபகம் இருக்கு என்றாள் சரண்யா பெரிய மனுஷித்தனமாய். எங்கே போயிருப்பாள்? மஞ்சள் துணியில் காசு


ரூஸ்ஸ் – ஒரு பக்க கதை

 

 ‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறி விட்டாள எட்டாம் வகுப்பு மாணவி அபிதா. அந்த தனியார் மெட்ரிக் பள்ளி வளகத்துக்குள் ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள் முதலே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். யாரும் தமிழில் பேசக்கூடாது. அனிதா அலறிவிட்டாள். இப்போது என்ன செய்ய? அனிதா, ஆஸ் பர் அவர் ஸ்கூல் ரூல்ஸ், நோபடி ஷூட் ஸ்பீக் இன் டமில். ஐ திங்க் யூ நோ த பனிஷ்மென்ட்


உதவி – ஒரு பக்க கதை

 

 “லேகா… டைனிங் டேபிள் சேர் பின்னணும்ன்னு சொன்னியே, ஆள் வந்தாச்சு’ என்று, இரண்டு கண்களும் தெரியாத ஒரு வயதானவரை கையைப் பிடித்துக் கூட்டி வந்து, ஹாலில் அமர வைத்தான் மணி. வயர் பிய்ந்து போன இரண்டு நாற்காலிகளை வாசல் வராண்டாவுக்கு எடுத்துச் சென்ற லேகா, “அவரை வராண்டாவில் உட்கார்ந்து பின்னிட்டு கூலியை வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க’ என்றாள். “என்னடீ இது, ரெண்டு கண்ணும் தெரியாதவரைக் கூடவா சந்தேகப்படறே?’ என்று கிசுகிசுத்தான் மணி. “இவரு வாசல்ல உட்கார்ந்து பின்னும்


பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை

 

 “ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான். “உற்பத்தியைப் பெருக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறாய் என்று சற்று விளக்கிச் சொல்லேன்’ என்றார் சதுர்வேதி. “தினமும் சூப்பர்வைஸர்களை அழைத்து அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். எவ்வளவு சொன்னாலும் அவர்கள், தங்கள் தவறுகளை முழுவதும் திருத்திக்