கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

501 கதைகள் கிடைத்துள்ளன.

பெயிண்ட் – ஒரு பக்க கதை

 

 “என்னப்பா அரைகுறையா பெயிண்ட் அடிச்சிருக்கே…? உன்னோட சூப்ரவைசர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணி கூலியை குறைக்கச் செல்றேன்…’ என்று பெயிண்டர் ஆறுமுகத்திடம் கோபமாக கத்தினேன். உள்ளே வந்து அந்தச் சுவற்றை எட்டிப் பார்த்து, “ஓ அதுவா… அங்க நான் வேணும்னுதான் பெயிண்ட் செய்யலை. அதுக்கு காரணத்தைத் தெரிஞ்சுக்கணும்னா நீங்க அந்த இடத்தை சற்று உற்றுப் பார்க்கணும். அதற்குப் பிறகும் அங்க பெயிண்ட் தேவைன்னா நான் உடனே அடிச்சுடறேன்…’ என்றான் ஆறுமுகம் அழுத்தந்திருத்தமாக. விளக்கைப் போட்டு அங்கு உற்றுப் பார்த்தேன். “ஐ


மிருகம் – ஒரு பக்க கதை

 

 ஞாயிற்றுக்கிழமை. வசந்த் ஷாப்பிங், பூங்கா, மிருகக்காட்சி சாலை என குதூகலத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தான். மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்ததும் மகள் சுமி ஆர்வத்துடன் பார்த்து ரசித்தாள். அப்பா – அப்பா …அங்கே பாரேன். எத்தனை முயல், வித விதமான கலர்ல…! என ஆரம்பித்து மயில், புலி, சிங்கம், மான் , பாம்பு போன்றவற்றை எல்லாம் வியப்புடன் பார்த்து வந்த சுமி…. ”ஏம்பா, வயசான மிருகங்களுக்குன்னு தனி கூண்டு இருக்கா?” ”இல்லடா செல்லம். எல்லா மிருகங்களையும் ஒரே கூண்டுலதான்


மந்திரம் – ஒரு பக்க கதை

 

 ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட, அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமல் படாத பாடு பட்டுவிட்டான். சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். “அலுவலகம் செல்ல அவசரக் குளியல் போட்டு கிளம்பும் உன்னை, தலை முதுகு தேய்த்து, குளிப்பாட்டி, உன் தலையை என் முந்தானையால் துவட்டும் என் கடமையைச் செய்ய நேரம்


ராங்கி – ஒரு பக்க கதை

 

 ஜான்சியின் மகள் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையில் தாய் வீட்டுக்கு வருகிறாள் என்றதும், மருமகள் சாந்தி தனது அம்மா வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். இது போல் சாந்தியின் பல செயல்கள் ஜான்சிக்கு கடுப்பை ஏற்படுத்தியது. அப்போது புரோக்கர் பெரியசாமி அங்கு வந்தார். என்னய்யா என் பையனுக்கு பெண் பார்த்து கொடுத்திருக்கே? சாந்தி சரியான ராங்கியா இருப்பா போலிருக்கே என்றார். அவசரப்பட்டு பேசாதீங்கம்மா நீங்க என்ன கேட்டீங்க. அம்பது பவுன் நகை, அம்பதாயிரம் ரூபாய் ரொக்கம். டூ வீலர், வாஷிங்மெஷின்,


தலைவர் – ஒரு பக்க கதை

 

 தலைவரே… அந்த ஏகாம்பரம் எதிர்கட்சிக்காரன்கிட்ட பணத்தை வாங்கிட்டு நமக்கு எதிரா உள்குத்து வேலை பார்த்திட்டிருக்கான் தலைவரே..அவன கூப்பிட்டு மிரட்டி வச்சாதான் அடங்குவான்.. பக்குவமாய் எடுத்துச் சொன்னார் வட்டச் செயலாளர். தலைவர் யோசித்தார். “அவன வந்து என்னைய பார்க்கச் சொல்லு’ என்றார். ஏகாம்பரம் தலைவர் முன் பவ்யமாக நின்றான்.. “என்னடா.. ஏகாம்பரம் நான் கூப்பிட்டதுக்கே இவ்வளவு லேட்டா வர்றே..என்ன விஷயம்..’ “தலைவரே காலங்காத்தால மினி பஸ்ல வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு..’ “ஏண்டா இத்தனை காலம் எங்கூட இருந்துட்டு.. இன்னும்


ரிசப்ஷன் – ஒரு பக்க கதை

 

 அம்மா கேட்டாள். “ஏன்டா முரளி. உன் கல்யாணம்தான் திருப்பதியில் சிம்பிளா நடந்தது… ரிசப்ஷன் கிராண்டா உட்லன்ஸ்ல வெச்சிருக்கோம்… ஆனா ஏன் நம்ம வீட்டு வாட்ச்மேன், சர்வெண்ட்க்கெல்லாம் பத்திரிகை வேண்டாம்னுட்ட…?’ “அம்மா… அது பெரிய ஹோட்டல்… இவங்கல்லாம் சரிப்படமாட்டாங்க. எனக்குத் தெரியும். பொறுமையா இருங்க’ பதில் சொன்னான் முரளி. அடுத்தவாரம்… முரளி… தன் வீட்டிலேயே ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். அதற்கு தானே நேரில் சென்று வீட்டு வேலைக்காரி…வாட்ச்மேன், லாண்டரி பையன், தெருவில் குப்பை வண்டிக்காரர்கள், கூர்க்கா, வழக்கமாக


தகுதியானவள் – ஒரு பக்க கதை

 

 அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது. எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…!’ என்றேன். ஆனால் அவள் உம்மென இருந்தாள். மிகவும் விரும்பித்தான் விண்ணப்பித்திருந்தாள். அவள் வாழ்வின் லட்சியமே அந்த வேலைதான் ஆனால் கடிதம் வந்ததிலிருந்து அவள்முகம் சோகமாகவே இருந்தது. என்ன காராணமோ? இண்டர்வியூவுக்குப் போகும் போதும் அவளிடம் மகழ்ச்சியோ, பூரிப்போ இல்லை. அந்த கம்பெனிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய பிறகும் துயரத்தோடு இருந்தாள். கண்ணாடி


கம்பீரம் – ஒரு பக்க கதை

 

 கம்பீரம் ததும்பும் உடல் மொழியோடு வாத்தியார் கனகசபை, அன்பழகனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அன்பழகன், கார்ப்பரேஷன் ஆபிஸில் உயர் அதிகாரி. “அங்கே வர்றாரே! அந்தக் காலத்தில் எனக்கு பள்ளியில் கணக்கு வாத்தியார். கண்டிப்பானவர். ஏதாவது தப்பு பண்ணினா உருப்படாத பய மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று கண்டபடி திட்டுவார். வகுப்பிலேயே அதிக திட்டு வாங்கினது நானாகத்தான் இருப்பேன்’ அன்பழகன் தனது தலைமைக் கிளர்க் கந்தசாமியிடம் கூறிக்கொண்டிருக்கும்போதே வந்தமர்ந்தார் கனகசபை. “தம்பி, நான் ரிட்டையர் ஆன வாத்தியார். ஒரு வீடு


வேலை – ஒரு பக்க கதை

 

 அழுக்கேறிய பேண்ட், கிழிந்த சட்டை, பரட்டைத் தலை, நீண்ட தாடி என்று பார்க்கவே அருவருப்பாக இருந்தவனை காரில் உட்கார்ந்தபடியே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மனோகர். காரின் அருகில் வந்து நின்றவனுக்கு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவனுக்கு கொடுக்கும்படி தன் டிரைவரிடம் கொடுத்தான். டிரைவர் கொடுத்த ரூபாய் நோட்டை வாங்கியவன் அதில் சில வாசகங்கள் எழுதி டிரைவரிடம் திருப்பிக் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கிய டிரைவர் அதை மனோகரிடம் கொடுத்தான். அதில், “நான் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி.


அவசர வேலை – ஒரு பக்க கதை

 

 “ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா. “போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன். ஆமாம் பிள்ளையின் பாடப்புத்தகத்தை வாங்கி கொடுக்க கூட முடயாமல் அப்படி என்னதான் ஆபீஸ் வேலையோ போங்க என்று எரிச்சலாய் சொன்னாள் நீலா. சிறிது நேரத்தில், நீலா சமையலை முடித்து விட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு